Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்..


எழுதபடாமல் விடுபட்டவைகள்
முனை முழுவதும் மொழிந்தாலும்..
புத்தாண்டு கொண்டாட
புறப்படுகிறது புன்னகையோடு
பேனா ஒன்று..

நேற்றுவரை முயன்றவைகள் ஒப்பமிட்டு
ஓங்கட்டும் புதுவாழ்வு
புதுஆண்டில் யாவருக்கும் ..

நிலங்கள் உடைத்து
அரசியல் செய்யும் பிசாசுகள்
நம்நிலை ணரட்டும் ..

ராஜபக்க்ஷே ,
பிரபாவின் இரவுகளில்
ஒளி வீசட்டும் ..

பிரபா ,
கதவுகள் தட்டி
கருணாவின் கைகுலுக்கி செல்லட்டும் ..

குண்டு கலாச்சாரம்
அமைதியில் கரையட்டும்
அகிம்சை வாழட்டும் ..

கேள்விகள் கேட்போம்
புரிதலுக்கான விடைகொடுப்போம்
கடவுள் இருந்தால் கண் திறப்போம்
இல்லாவிட்டால் யிர் கொடுப்போம் ..

கனவுகளுக்கு வர்ணம் பூசுவோம்
மலர்ந்த முகம் எழுதுவோம்
நன்றிகளுக்கு கை கொடுப்போம் ..

எல்லோருக்குமான தினத்தில்
நானும் நீயும் தான்
நல்ல சமுதாயம் ,
வா.. அன்பாக புத்தாண்டு கொண்டாடுவோம் ..

Monday, December 28, 2009

அரேபிய ராசாக்கள்.. V111


வழிதடங்கள் நிரம்பிய இப்பெரும்பாலையில்
பெய்தொழியும் ஒருசில மழைக்கால மாலைகள்
வசிப்பிடம் கொய்யும் எங்கள்போலுள்ள
பரதேசிகளின் புருவங்களோரமாய்
கண்கட்டி வித்தை செய்தாற்றுகிறது
காதலையும் , வாழ்வினையும் .

பின் வெயில் தொடங்குமொரு
முதல்காலையின் பரந்த தரைபரப்பு
மணற்துகள்களை வீசி ஆசிர்வதித்து
கானல் நீராகி யொழுகுகிறது
வாழ்வெனப்படுவது
வாழ்தலின் பொருட்டு வாழ்தலென .

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2355

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1773:2009-12-30-02-26-42&catid=2:poems&Itemid=88

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31001016&format=html

நன்றி: உயிர்மை, கீற்று , திண்ணை ..

Saturday, December 26, 2009

ஆயிரம் பட்டாம்பூச்சி..




கவிழ்ந்து கிடக்கும்
காமத்தின் மேல்
செங்குத்தாய் ஏறிநின்று
தலையசைப்பதாய் விடைபெறுகிறது
சுயஇன்பம் .

காமத்தின் மடியில்
கண்களடைத்தபடி
கதை கூறி
பிரண்டிருக்கும் , ஒருபொழுது
இன்பமாய் சுயஇன்பம் .

எழுதுகோலின் காதுகளில்
ரகசியமாய் புனைந்து அமிழ்ந்திருக்க
இதுதான் சரியான பொழுதென
புன்னகைத்து நிரம்பி வழிகிறது
சுயஇன்பம் .

தத்தி தத்தி தவழும்
சிறுகுழந்தையினை ஒத்த
நடைபயிற்சியில்
தத்தி தத்தி துவழ்கிறது
சுயஇன்பம் .

யாருமற்ற மொட்டைமாடி இரவில்
வெண்ணிற நிலவு பற்றி
கவிதுவங்கு முன்
தீர்ந்துவிட்டது
இன்னுமொரு சுயஇன்ப கதை .

ஆட்காட்டி விரல்களை போன்றதொரு
பிரிதொரு விரல்
அடைபட்ட கதவுகளோடு
ஆச்சர்யபட்டு துவங்கியிருக்கிறது
பருவத்தை சுயத்தில் .

கடந்த சில இரவுகளாக
எழுதாமல் விடுபட்டதானது ,
நிரப்பியிருக்கும் இச்சமயம்
சுயஇன்ப கவிதைகளின்
எண்ணிக்கையில் கூடுதலாக ஒன்றை .

ஆயிரம் பட்டாம்பூச்சி..
சிறகு விரிக்கும் தருணம்
இரு தேக்கரண்டி சுயஇன்பம் .
விற்று முடிந்திருக்கும் .

Wednesday, December 23, 2009

கிறுக்கல் பக்கங்கள்..


தொடக்கம்..
இங்கிருந்து தொடங்கட்டுமே ,
ஜீரணிப்பில்லாத இவ்இரவுகள்
தின்று பின்பும் தின்று..
சாகிறது ,
புகையிலையும் பிராந்தியுமாய் ..

சில நிசப்தங்கள்
சில கிறுக்கல் காகிதங்களாகட்டுமென
நிதானப்பட்டு ,
பால்யமா..
காதலா..
மழையா..
மானுடமா..
விழிப்புணர்ச்சிகளா..?
கடைசி வரி
ஒன்றும் இல்லாததாகி உடையபோகிறது..
" ங்கோத்தா " யென
உன் வசையும் அங்கெழலாம்..

எஸ்..நோ..
நோ..எஸ்..
தொலைபேசியினொரு
பெயர் பதிவிடாத எண்,
டையல் செய்யவும் வேண்டாமுமென
யோசனைபட்டே தொலைபடுகிறது ..

மீண்டும்..
பிராந்திக்கும் ..
புகையிலைக்கும் ..
திரும்பி செல்கிறது
வாந்தியை நண்பனாக்கியிருக்கும்
குடிகார இரவு ,
போடா.. " ங்கோத்தா "
அவ இல்லாட்டி இன்னொருத்தியென
புலம்பியபடி..!

Thursday, December 17, 2009

கிளிவிடு தூது..


கூண்டுகிளியின் கதவு திறந்துவிட்டு
ஐய், கிளி..கிளீ.. பறந்துபோச்சென..
சிரித்து ஓடி ஆடுகின்ற
தன் மழலைபெண்ணின்
புன்னகையை இறுகபற்றி ,
படியிறங்கி செல்கின்ற கைம்பெண்ணினது
ஆதிஇரவின் இயலாமை
மௌனபட்டு துவங்கும்
இச்சிறுபொழுதினில் ,
தேடுகிறேன் நானும் ..
பாடுபொருளென்பதாதையும்,
கவிதையெனப்படுவதையும் .

Tuesday, December 15, 2009

பொய்யென பெய்யும் மழை..!




வார்த்தைகளுடைந்து
காட்சிகள் பெருத்து
காகிதகுடுவை தள்ள
குதிரை இலக்கின்றி ஆட ..

கோவண கிழவனின்
பெய்யாத மழைக்கென ,
மழலை சிறுமி..
உள்ளங்கை தாளம்..
முடிச்சியிட்டு முடியும்
மழை கவிதை
எங்கோ இப்பொழுதும் பெய்தோயலாம்..
வீங்கிய வானம்
தொங்கிய வயிறு
ஈசல் பிணங்கள்
அம்மணமாய் அங்கொழிந்துமிருக்கலாம்..
நமக்கென்ன..?
ஏனோ அச்செருகலில்
குடுவை .. குதிரை .. மனம்
முழுகவனமாய் ;
பின்..
பிழையின்றி ,
அந்திவானம் ..
மின்மினிபூச்சி ..
காமம் ..
இரவல் ..
தழுவல் .. நீள்கொடை விரிய...

கோவண கிழவனின்
பெய்யாத மழை
பெய்தே தீருவேனென
குதிரை - பேய்மழை பொய்ய,
அடைக்கப்படாத ஒற்றை ஜன்னல் மட்டும்
வாழ்வு ருசிப்பதாய்
தொலைந்திருந்தது
பூபோட்ட பாவாடை சிறுமியின்
மழை கனவு
என் இரவில்.


( இது உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதியது. )

Sunday, December 13, 2009

காதல் இறைத்துசென்ற இரயில்வண்டி..


இரயில்வண்டி தன் குழந்தைகளின் விருப்பபடி இரைச்சலை இசைந்து கொண்டிருந்தது. நேரம் மணி மதிய உணவிற்கு அப்புறமான 4.15 ஐ கடந்துவிட்டதாக சொல்லி அமர்ந்தான் அமுதன். தம்பி நான் மேல்படுக்கயில் படுத்து கொள்கிறேனென்று வசந்தியும் சென்றுவிட்டாள். எதிர்இருக்கையில் அற்புதா எந்த இசைவும் இன்றி தபூஷங்கரை காதலித்து கொண்டிருந்தாள். மெதுவாக, ஏங்க.. உங்களைதான்..அதென்புத்தகம், எங்...எங்க போறீங்க..? அற்புதா அரைமனதுடன் பொள்ளாச்சி..சுருக்கமாகவே முடித்துவிட்டாள். அமுதன் மறுபடியும், என்ன புத்தகம் என்றேனே என்றவாறு நெளிந்தான்.. ஓ.., புத்தகமா.. ம்.. எதை கேட்டாலும் வெட்கத்தை தருகிறாய்,வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், தபூஷங்கரின்.. சொல்லி முடிப்பதற்குள் அமுதன் கேட்க ஆரம்பித்தேவிட்டான்..

கொடுக்கல்..
வாங்கல்தான்.. காதல் ,
நீ முத்தம் கொடு
நான் வெட்கம் தருகிறேன்..!

என்னங்க, இப்போதான் பத்துநிமிடம் ஆச்சு, என்ன விளையாடுறீங்களா, அவள் நிஜமாகவே வெட்கத்தில் நனைந்துவிட்டாள். இவன் சிரித்துகொண்டே, அய்யய்யோ.., இது.. இதூ..நான் எழுதிய கவிதைங்க.. ஓ நீங்க கவிதையெல்லாம் எழுதுவீங்களா..? நிஜமாகவே நல்லா இருக்குங்க.. ம்..,நன்றியென்ற சிறுபதிலுடன் பகிரதொடங்கினான்.., நான், எனக்கு.. மழலை, மலை,பனிபடர்ந்தஅதிகாலை,இரயில்பயணம்,ஜன்னலோர இருக்கை, அப்புறம்..அழகான இளம்பெண்கள்.. இப்படி ரசனையாக வாழ்பவன்.. கவிதையும், தமிழும் இருப்பதால்தான் நான் இன்னும் என்னை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் , மூச்சுவிடாமல் உணர்ச்சிகலந்த காதலுடன் பரிமாறி கொண்டிருந்தவனை இடைநிறுத்தி , தன் வாய்நிறைய.. ஆமா.., அமுதன் என்று அவன் பெயர்சொல்லி அற்புதா தன் சந்தேகங்களையும், படைப்பாளிகளுக்கு பாராட்டுகளையும் படரவிடதொடங்கினாள். கதைநாயகனும் தனக்கு தெரிந்த கவிதைமொழியில் புன்னகை நாயகியிடமிருந்து வெட்கங்களை பறித்துகொண்டிருந்தான். இடையிடையே இரயிலின்பின்னணிஇசையினையும் வழியவிட்டவண்ணம் இருந்தது அவர்களுடைய நீண்ட மாலைஉரையாடல். இதனிடையில் வசந்தி இன்பநிலவனுடன் காதல் பாடலொன்று முடித்துவிட்டு கீழிறங்கிவந்தாள். தம்பி முகம் கழுவி வந்துவிடுகிறேனென கழிவறைநோக்கி தொடர்ந்தாள். கவிதைகாதலர்கள் உறவு நீடித்திருந்தது ஒன்றும் அறியாதவர்கள்போல தாங்கள் விழிகளுக்குள். வசந்தியும் வந்தமர்ந்து கொண்டாள். சிறு இடைவெளிவிட்டு வசந்தியின் கைதொலைபேசி சிணுங்கியது . ம்..,ஆமாங்க இன்னும் ஒரு மணிநேரந்தான்.. ம் ,ம்ம்.., இறங்கியவுடன் அழைக்கிறேனென்று சப்தமில்லாத முத்தத்தோடு தொடர்பை துண்டித்தாள். வசந்தியின் விழிகள் புதிய அறிமுகங்களுக்கு இடையூற வேண்டாமென கதவுபக்கம் நிற்கிறேனென்றது , தம்பியும் வேகமாக தலையாட்டினான். ஏனோ அற்புதாவும் , அமுதனும் பிற்பொழுதினில் ஒருசில.. சிலசிறு.. புன்னகைகளோடே தங்களை சம்பந்தபடுத்திகொண்டனர்.. இன்னும் பத்துநிமிடங்களில் இரயில் தன் குழந்தைகளை மழைசாரலும், மலையடிவாரமும் நிறைந்த பொள்ளாச்சியினில் வழியனுப்ப தயாராகியது. அற்புதா தபூஷங்கரின் காதலை பைக்குள் திணித்துவிட்டு அமுதனிடமிருந்து எவ்வளுவு திருடி சேகரிக்கமுடியுமோ அவ்வளவும் பிடுங்கி தன் கன்னக்குழியில்ஒளித்து வைத்துகொண்டாள். எல்லோரும் பயணம்முடித்த களைப்பை துவக்கியிருந்தனர். அமுதன் காதல் முயற்சியில், அவளோடு இன்னும ஒருவாய்ப்பு..ஒருவார்த்தை.. காற்றினில் அலைபாய்ந்தவாறு இருந்தான்........... வசந்தியையும், அமுதனையும் கூட்டிக்கொண்டு அருகிலுள்ள தேநீர் கடைக்குள் நுழைந்தான் இன்பநிலவன். மெதுவாக கொஞ்சம் மெதுவாகவே வசந்தி துவங்கினாள்.. மாமா, உங்களைதான்..என்னங்க உங்களைதான், நம்மதம்பிக்கு காதல் வந்திருச்சு.. பொண்ணுகூட பார்த்துட்டான் போலதெரியுது.. மாமா அதட்டலாக அற்புதனை நோக்கி.என்னடா சொல்றா உங்க அக்கா.. அற்புதனும் ஆமா மாமா என்கிறதோனியில் தேநீர் பறக்கவிட்ட ஆவியோடு கவிதையொன்று வரைவதாய் இருந்தான் பேசதயங்கிக்கொண்டு..

அவளொரு பேரழகி..
ஆம் நிஜமாகவே அவளொரு அற்புதா..
நீ விட்டுசென்ற வெட்கங்கள் ..
என்னை தின்ன முனைகிறது..
ஒரு வாய்ப்பு..ஒரேயொரு வாய்ப்பு..
இரயில் பயணம்..இன்னும் ஒரேயொரு இரயில் பயணம்.......


அற்புதாவை பத்து நிமிடமென்று உட்காரவைத்த அதே தொடர்வண்டி கழகத்தின் காத்திருப்பு அறைக்கு விரைந்துசென்று அவள் முகவரியும் சம்மதமும் வாங்கி திரும்பியதை வசந்தியும், இனபநிலவனும் இரவு உணவின்போதுதான் மௌனம் கலைக்க தொடங்கினர்...

அமுதன் ஆச்சர்யத்துடன் ,

ற்பு...தா......... என பேரழகி கவிதையொன்றை தலையணையில் சிறு புன்னகையோடு கிறுக்க... மருமகன்

முகில் தன் மழலைமொழியுடன் மாமா..மாமா..என கட்டிக்கொண்டு, அம்மா சொல்லுது உனக்கு காதல் பைத்தியம் பிடிச்சிடுச்சாம், அப்படினா..அப்படினா... காதல்னா......என்ன மாமா..?

ஓராயிரம் காரணங்கள் நீட்டலாம்..


அன்பிற்கும் ..
காதலிற்கும் ..
நேர் நடுபுள்ளியில் இருவரும் ..
வாழ்தலுக்கும் பொறுப்பின்றி
சாதலுக்கும் பயனின்றி
எதற்கும் , யாருக்குமின்றி
இம்மழைக்கால அதிகாலையில்
எழுதாமலேயே விடைபெறுகிறது
ஓராயிரம் மௌனங்கள் .

Monday, December 7, 2009

இதொரு காதல் காலம்..!




காதலெனும் வன்ஆயுதம்
மூலப்பொருளாகி .. இதயம் பிடுங்கி
பாதங்களிலொட்டி சென்றவளை
பெருங்கடலென சீறும்
இரத்தம் தேடிதிரிய ..

நகமென வளருமேயெனயிருந்த புரிதல் ,
வடியும் இரத்தமினை
கண்களின் கீழே
உதடுகள் பருக.. வழியவிட்டவண்ணம்
தோற்றழுக ..

இயல்பாய் , பொருந்தா பிரிதொரு
இதயம் பொருத்தி
இயல்பை புறந்தள்ளி
காலி உடம்பினில்
உயிர் சொருக
பக்குவபடாது ..
பாடலொன்றும் , பாடமென்றும் ..
முயன்று முடியாது ..
காதல் வலிக்க
வாழ்வு தேடிதிரும்பும் இப்பெரும்பொழுதினில் ..

காதல் பிரளயமாகி
பெருங்கடலென சீறும் இரத்தம்
அவளும் அடையாது ..
மடிந்திருப்பாளென்றே நம்புகிறேன் .!

Thursday, December 3, 2009

வாழ்தல் பத்திரபடுத்தபட்டது..


தொலைந்த முத்தங்களில்
மிச்சப்பட்டது , உன்னின் பேரன்பில் ..
நீ சொல்லாமல் டைத்தெறிந்த
உனது முதல் மௌனகவிதை .

வாய்ப்பாடு..


குடி குடித்தலிலிருந்து ..
வாழ்தலையே எரித்துவிடும்
கொஞ்சமாவது பயப்படு .

முதல்முறை என் காதலிக்கு..




மனசு மரத்து மரத்து
மீண்டும் மீண்டும் நீள்கிறது
இவ்விம்மும் இரவின் ,
எங்களது மிகநீண்ட ..
காதல் ரையாடல் .

அது..


காதல் பெண் ..
காமம் ஆண் ..
விதண்டாவாதம் அது .

உனக்கு மட்டுமொரு ரகசியம்..


நீ நீயாக இரு ..
நான் நானாக பருகுகிறேன் ,
வாய்ப்பேயில்லை ..
இந்த ஜென்மத்தில் பிரிவு .

விதி..


ஓர் மௌனம் ..
ஓர் டைத்தல் ..
பன்மடங்கு காதல் ..
எழுத தவிப்பது ,
தோற்றெரியும் காதல் .

இவ்விரவின் முடிவுகள் ..


தனிமை எரிந்த அரபுமண் ..
முத்தங்கள் தீர்ந்த புகைப்படங்கள் ..
காதல் பிரயாசித்த தொலைபேசி ..
இயலாமை பரியாசித்த சாராயவாடை ..
இறையாண்மை புகழ்ந்த நான்..
ஆமோதித்தால் நீ மனிதன் ,
இல்லையென்றால் நான்.....
நான் , கவிஞன் .

சிறு புன்னகை செய்..


வித்தியாசம் பருகிவிட்டு
தள்ளாடுகிறது ,
காதலும் காமமும் ..
எதற்கும் நீ ,
தொலைவிலிருந்தே தொடர்புகொள் .

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2288

நன்றி: உயிர்மை ..

நூலுடைந்து சாகுமுன்..


இருவருக்கும் இடையில்
மில்லி இடைவெளி ..
இனியென்ன வேண்டும் ,
விடைபட்டு சாக ..
நாமென்ற நமக்கு .

இது நான்..


பேரன்பு ,
வன்முறைகளுக்கு ஆதியானால் ..
என்னை நான் வகைபடுத்துவேன்
தீவிரவாதம் என்னிலிருந்து
ஆதி .

Tuesday, December 1, 2009

வாழ்தல் முறித்த இரவு..




நிலவு உயிர்பெறும் ,
காதல் உந்தப்படும் ;
காமம் செத்தே பிறக்கும்...
முன்பொரு ,
சூரியன் மரித்த மாலையில்
அவள் அழுத கவிதை
இன்னுமென் நாவினில்..

எதற்காய்..
எனும் வினா எழுப்பபடும் ,
காதல் மற்றும் காமம்
விடைசொல்லி உறங்கியிருக்கும்
இது நடுசாமம்..!

காதல் , காமத்தின்
புரிதலற்ற வடிவத்தில்
எச்சில் படுதலாகி எரிவதால்..
இந்த..நானெனும் சுயம்
தொலைந்திருக்கும் பட்சத்தில்
அவள்..அவளாய்தான்
ஆதியாகி அந்தப்பட்டிருப்பாள் .,

போதை இரவினில்
எதற்காகவோ மிச்சப்பட்டது ,
கவிதை வாடையும் ..
காடெறியும் கனவுகளும்..
எனக்கே எனக்கென .

Monday, November 23, 2009

தொலைத்த முத்தங்கள்..


என்றுமே..
என் முதல் கவிதையும்
கடைசி கவிதையும்
உன் முத்தமாகதான் இருக்கணும்..!

இன்னும்..
கேட்கப்படாமல் தவிர்ப்பதும்
கொடுக்கப்படாமல் நகர்வதும்
முத்தத்திற்கு மட்டுமே தெரிந்த
ரகசியமாக இருக்ககூடும்..!

கவிதை புத்தகம் நிறைய
உன் முத்தங்கள் ;
முதல் முத்தம் மட்டும்
கவிதையாக..!

ம.. உன் விருப்பம்போல்
நீ முத்தம் தொடரு ..
நான் கவிதை தொடர்கிறேன்..!

நானும் நீயும் எங்கே ..?
காதலும் முத்தங்களும்
திருவிழா எடுக்கிறது
தமிழ் கவிதைகளுக்கு..!

எந்தன் கூச்சகாய்ச்சல்
உந்தன் முத்தங்கள்முன்
தோற்றேபோகிறது..!

நீ வருகிறாய் என்றவுடன்
வெட்கத்தின் வளைவுகளில்
என் உதடுகளும் ,
முத்தங்களும்..!

உன் முத்தங்கள்முன்
என்றுமே என்காதல்
சிறு குழந்தைதான்..!

நீயென்னை முத்தமிட
இருநொடி முன்பே
விழிகளுக்குள் ஒளிந்துகொண்டு..
எத்தனை நாகரீகமரிந்த காதல்..!

முத்தங்களில்..
வரவு எதற்கு ;
செலவு போதும்..!

இன்னும் வாழ்கிறது
ஞாபகமுத்தங்களில்..
நீ தரஇயலாத
அந்த முதல்முத்தம்..!

உன் முத்தத்தை நேசிக்க ,
மிகநீண்ட வரிசையில்..
என் முகபருக்களனைத்தும்..!

அவசரம் எதற்கு..
பொறுமையாக கூட்டிக்கொண்டேவா ,
வெட்கத்தின் வளைவுகளில்
பூத்திருக்கும் முத்தங்களையும்..!

என் மௌனங்களனைத்தும்
நொறுங்கி எழுகிறது..
உன் முத்தங்களின் புன்னகையில்..!

பிழையாயிருந்த எனதுயிர்
தப்பி பிளைக்கிறது
நீதரும் முத்தங்கள்முன்..!

என் காதல்
அர்த்த செறிவுடையதாகிறது
உன் முத்தங்களுக்கு
கோடி நன்றிகள்..!

என் வாழ்வியலை
சாதலில் ,
உன் முத்தம்தான்
நிரப்புகிறது..!

தொலைத்த முத்தங்கள்..
உனக்கான காத்திருப்புகளில் ,
தேடி கொடு..!

எழுதிய முத்தங்கள் நூறு
இருத்தல் அமைந்தாலும்
எழுதாத முத்தங்களில்..
நீ..இன்றுமென்ற
ஒரே வருத்தம்தான்
என் றக்கம் தொலைக்கின்றது..!

துவங்கும் பொழுதினிலேயே
முடிந்தும் விடுகிறது
என் கவிதைகளனைத்தும்
உன் முத்தங்களின்முன்..!

நான் தவறவிட்ட முத்தங்களை
இன்னும் உன் ,
கன்னக்குழியில் தானே..
ஒளித்துவைத்திருக்கிறாய்..!

Saturday, November 14, 2009

என் மனைவியின் திருமணம்..!



தேவமகளின் ஆசியுடன்
பெண் வேடமேற்று..
அமைதி புருவங்களுடன்
அழகாய் ஏந்தியிருந்தாள்
வெட்க புன்னகை..!

மருதாணி சிவந்திருந்த உள்ளங்கை
ஓசையின்றி கவியெழுதியவாறு
தொடர்ந்திருந்தது..!

நெற்றியோடு நெளிந்திருந்த சுட்டி
வாழ்த்தும் மலர்களிடிம்
அவளை வாசிக்க, நெகிழ்ந்தது..!

தேங்கிய காதல்
தாங்கிய காமம்
வாசம் நுகர்ந்ததாயிருந்தது
நீலநிற பட்டினது..!

சற்றே சலனமின்றி
நிறமறியா பயமாய்
இலேசாய் வியர்த்திருந்தாள்
இந்த வேடிக்கைபொம்மையை
கண்ட கணம்..!

ஐயரவரின் மந்திரம்
தீர்வதாயிருந்தது..
அந்நேரம்..தாலி
மந்திரம் துவக்கியது
கணாளன் மணவாளனுக்குபோக
இனி நான் மீதியென..!

Thursday, November 12, 2009

புத்தன் வெட்டிய போதிமரம்..!


என் என்னை
மறந்தவள் ..
மறந்ததாய்யெறிந்தவள் ..
காதலென தீர்வதும்
காமமென துவங்குவதும்
தொடர்ந்திருப்பாள் இந்நொடி ..
என்னிடம் விட்டதிலிருந்து ,
விடுபட்டதிலிருந்து ...

காமம்சொரியும் காம்புகளாய்..
கற்றது ;
அவளாகியவள் கற்பித்ததாலறிந்தது ,
பெண்ணெனப்படும் அவள்
புனித பால்சுரப்பிகளாய்
மாறியிருக்கலாம் ;
இல்லையாகியிருந்தால்
பெண்மையாக்கி..
மாற்றம் கண்டிருக்கலாம்...

வாழ்தல் வாழ்தலென்பதறிய
ஆயுதமாகி..
ஆய்த்தமானவனாகிறேன் ;
பௌத்தனென
அறிந்தறியப்பட்டவனாகிய நான்..
நானெனும் சுயம் இழக்கிறான்...

புழு நக்கிய
மீதிபுண் சீள்
உந்த ; உந்துதலாகிறான்
விடுபட்ட காதலும்
விட்ட காமமும் தேடலாகி,
அவளெனப்படும் இன்னொருவளை
தொடர்கிறான்...

Tuesday, November 3, 2009

கற்பனை காதலிக்கு..2




அவளுக்கு நடனம்..
எனக்கு அவள்..
மௌனமாய் காதல் !!

இம்முறை நான் ஆண் ,
அடுத்தமுறையும் நான் ஆணாகதான்..
நீ பெண்ணாகவே வாழ் ; சாகாதே !!

காதலிச்சா கவிதை வருமாம்
வா , பெண்ணே...
ஒருமுறை முயன்று பார்ப்போம் !!

கூச்சமென்று சொல்லி
காதல் தவிர்க்காதே ,
என்னிடமும் கொட்டிகிடக்குது..
பூந்தொட்டி நிறைய கூச்சம் !!

இரவும் விடியலும் கூடுது
நான் மட்டும் அறியாது
தொடருது இந்த வாழ்வு..!!

என்னைபோலவே ..
நீயும் என்னை
தாராளமாய் காதலிக்கலாம் !!

அவள் வெட்கங்கள்
நிர்வாணமாய் நிற்க
அறிவிப்பாகிறது ..
இது காதல்தானென !!

பின்புறமாய் வந்து
கண்களை மூடுகிறாள் ;
கண்டிப்பாய் ..
இது அவள்தான் !!

நான் ராட்சசனாகி
அவள் தேவதையாகி
விருப்பங்களெல்லாம் ஒருபுள்ளியிலாகி
வளர்கிறது காதல் !!

நாளுக்கு ஒரு முறையேனும்
என்னை இறுக்கமாய் கட்டிக்கொள்
நானும் கொஞ்சமாவது
அழகாகி வாழ்கிறேன் !!

வேடிக்கையாய் ஊடல்கள்
சிறகு விரிக்க
காதல் மழலைமொழியாகிறது !!

விரல்களின் தழுவலோடு
முத்தங்கள் துவங்கும் பொழுதினில்
மூச்சுவிடுகிறது காதல் !!

தன் பெண்மை
சிலாகிக்கும் தருணம்
ஆண்மை குறுநகையுடன்
அவளை கட்டிக்கொள்கிறது..!!

ஒவ்வொருமுறை
நம்சந்திப்பின் பிற்பொழுது
கண்ணாடி கைகுலுக்குகிறது ..
நானும் அழகாகி வருகிறேனாம் !!

மழைநின்ற வானம்
முன்னைவிட அழகு ;
கைகள்கோர்த்து வெட்கத்தில் காதல் !!

மாலையிலொறு விடைதருகிறாள் , பார்க்கலாம்..
மறுநாளுக்காக இன்றே தேடுகிறேன்
எங்கே நானென !!

கவிதையென்று ; காதலுக்கு தர
விழிமூடி யோசித்திருந்தேன் ..
கவிதை முடித்துசெல்கிறாள் ,
இலேசாய் உதடுகளிட்டு
காதுகளில் ரகசியமொன்று..!!

எழுத்துகளை கோர்வைபடுத்த
படாதபாடுபடுகிறேன் ;
என் காதலைபோலவே !!

கவிதையின் மிச்சமாகியோ
இரவின் எச்சமாகியோ
இனியும் உறங்காமல் காதல் !!

அவளொரு நடனக்காரி
நானொரு கவிதைபொய்யன்
இவ்விரண்டு வரிகளினில்
மழலை புன்னகையாய் தவழ்கிறது
இப்போதைக்கு காதல்.!!



என் கற்பனை காதலிக்கு தமிழ்வாசிக்க தெரியுமேயானால் ஒருவேளை அவளும் வெட்கம் கொள்வாளோ என்னை போல..!

Sunday, November 1, 2009

காதலாகி.. உயிராகி.. பின்..,


ஜன்னலோர பிள்ளையினை
தொடரும் நீண்டபுன்னகையாய்
காதல் எங்கள் தோளேறி
உலகே பொறாமைகொண்டோட
பிரயாணிக்கின்றோம்..

யாருமற்ற இரவொன்றில்
கன்னத்தில் பதியென்றால்
முதுகினில் முலையழுந்த
பின்னங்கழுத்தினில் நதியினைபோல்
முத்தங்களோடு தலைகோதுகின்றாள்..

வழக்கிற்கெதிராக
என்மடியினில் அவள் தலைசாய
நெடுநேரம் தொலைய
காதலுக்கு காய்ச்சல்..!

நட்சத்திரங்கள் வெட்கத்தில்
பால்நிலவும் பங்கிட்டுக்கொள்ள
வானம் சிவக்கின்றது..

மறுநாள்
எங்களின் முன்பே
காத்திருந்த காதல்
தேடியோடி..
தேடியோடி.. இன்று
ஒருகிழவன் .. ஒருகிழவி
முன்பைவிட காதல்
கூடுதலாகியே தீர்கிறது நாட்கள்..

Thursday, October 29, 2009

மழை இரவினில்..


ஓர்ஒப்பற்ற மழைமேக காலத்தில்
போர்வையினுள் முழுவதுமாய் அமிழ்ந்துகொண்டு
சலனமற்று உறங்கிபோனவனின்
நிமிடங்களை காதலால் கட்டிகொள்ள
தன் செல்லநாய்குட்டியோடு ஓடிவருபவள்
ஒருசில முத்தங்களோடு துவங்கினாள்..

பின்னெனயும் கூட்டிகொண்டு
பட்டாம்பூச்சி பிடித்துவர
சாலையெங்கும் வண்ணமாக்குகிறாள்..

தேவதையின் விருப்பத்திற்கிணங்க
நெடுநேரம் மழையோடு
மழலையாகி கலைந்தேன் நானும் ;

மழை சற்று தூறலை
குறைத்தே வழியதொடங்கிய அந்நேரம்
என்னை மறந்தவளாய்
அவள் ஆசைப்பட்ட பட்டாம்பூச்சிக்கும்
செல்ல நாய்குட்டிக்கும்
கவிதை சொல்ல பழகுகிறாள்..
நானும் மறுதலித்தலின்றி
என் மகளை ரசித்தவாறு
தீர்த்தேன் அன்றைய இரவினை..!

Sunday, October 25, 2009

அரேபிய ராசாக்கள் V11

தீபாவளி புத்தாண்டு திருநாட்கள்
ஜனிக்கும் தருணங்களில்
அனைத்து உறவுகளிருந்தும்
அனாதையாக்கபட்டிருக்கின்றோம் ,
அன்பெனவும் அரவணைப்பெனவும்
அறிய..அறிந்துகொள்ளபடுபவனயாவும்
ஏதோவொரு மூலையில்
சிறுகிழிசலுடன் மனம்
வழியவிட்டு கொண்டிருக்கிறதென
வலிகொண்டு வாழும்
ஆத்மாக்களில் இன்னும் ஒருவன்.

Wednesday, October 21, 2009

அணைக்கப்படா விளக்குகள்..

ஆதிக்கம் ஒய்யாரமாய்
உச்சந்தலையில் ஏறிநின்று
உந்தி தள்ள
அதன்விசையில் நானும்...
நான் ஆண்..?

அவள் சேலை களையும்
முனைப்பில் மனம் அலைய
அவசர்ரம்.. பொறுடா நாயே
அதட்டுகிறாள்..
எதிர்ப்பேயில்லை என்னிடம்
நான் ஆண்..?

எங்கடா அது
கால்சட்டைபை முட்டி
தலைதொங்கி
மெதுவாய் பல்லிழிக்குது ஆணுறை
அய்ய்யே நீ ஆண்
இது அவள்..!

காமம் குப்புற கவிழ
ஆடையை போர்த்தி
கலைந்த மயிர்களை
ஒழுங்குபடுத்துகையில்
சீப்பின் பல்லில்
ஆதிக்கம் மட்டும் கிழிபடாமல்..
அறையை வேகவேகமாய் கடக்கிறேன்...

கனத்த சப்தம்
அறை முழுவதும்
ஒலிக்க துவங்குகிறது
டேய் நாளைக்கும் வருவியா
பாப்பாக்கு இஸ்கூல்பீஸ் கட்டணுமாம்............

Thursday, October 15, 2009

மதமும் மனிதமும்..

முதல்வகுப்பு தொடங்கியே
மதத்தினில் எங்கே மனிதமென
நானும் என் தங்கையும் ;

இயலாமையினொரு..
கடைசி தருவாயில்
புரிந்தோ புரியாமலோ
நிரப்பி தீர்த்தோம் ,
நியதிகளொன்றுமில்லை
சாதிகளில்லையடி பாப்பா
கற்றுகொடுத்த குருவும்
மதம் தின்று
மனிதம் கொன்றே
நெய்கின்றான் உயிரினை ,
அட மடையா..
நீயோ , நானோ எம்மாத்திரமடா ..?

Thursday, October 8, 2009

மரண குறிப்பு...

















பனித்துளியும் குயில்களும்
பாலையும் பூக்களும்
புதிய பாஷையொன்று கற்க;
கூப்பிடும் தூரத்திலே நான்..

உங்களில் நான் வாழ
எழுதுகோல் முனைமழுங்க வாய்ப்பில்லை
எனதுநேரம் முற்றும்.

இன்று நான்
நாளை நீ
மரணம் என்றும்..

பயமில்லை வருத்தம்தான்
நாளை என் நண்பர்களுக்கும்
மரணம் தன் வாசல்திறக்கும்..

பாதைகள் நீளமே ;
நிறுத்தங்களில்..
பயணிகள்தான் .

கடைசி ஆசை..
பின்னொருநாள்,
வானமுகட்டிலிருந்து துப்புவேன்
எழுத்துக்கள் தாமாகவே
பெயர்க்கவேண்டும் கவிதையாக..

என் பிள்ளைக்கும்
பாட்டிக்கும் முன்னரே
ஜென்மஆராய்ச்சி செய்ய
அழைக்கிறான் கடவுள்..

மரணத்திற்கான கேள்விகளில்
இழப்புகளுக்கான பதில்கள்
வாய்ப்பில்லை கிடைக்கபெற..

தனது பிச்சையில்
திருப்தியற்றதாய் எதுவும் ;
கடவுள் கேட்டால்
காதலும் காமமும் என்பேன்
பூலோகம் செல்
நீயும் முயற்சி செய்
நகையும் செய்யலாமென யோசித்திருக்கிறேன்..

எதற்கும் உபயோகமில்லை
இனி இருந்தெதற்கு நான்..
கடைசியாயொரு கிறுக்கல்
கடவுள் நிச்சயம் பைத்தியகாரனே..

வழக்கம் போல்
கண்கள் மூடிக்கொள்ளும்
திறக்கபோவதில்லை .

Tuesday, September 29, 2009

ஓருயிரின் வலி..
















தேவதைகளுக்கென்றேயான

வெள்ளாடை களைந்து
எனையீர்த்த கருநிற உடையணிந்து
மெல்ல இசையுடன் வருபவள்
விரல்கள் இறுகபற்றி
உயரே பறப்பேன்..

அப்பொழுதினில் அவளது அழகான
குட்டி இதயத்திலிருந்து
கதையோ கவிதையோ திருடுவேன்..
கூடவே ஒருசில முத்தங்களையும் சேகரிப்பேன்..

காற்றின் ஈரம்
தீரும் தருணம்
அவளெனை இறுக்க கட்டிகொள்வாள்
நானவள் மார்போடு
என்முகம் பதித்து
கனா காணதுவங்குவேன்..

அவளோ ; தேவதையானவள்
காமம் ரசித்ததில்லையென
அவளோடு எனையும்
அதனுள் அமிழ்த்துகொள்வாள்..

குறைந்தபட்ச நொடிகளோ
அதிகபட்ச நிமிடங்களோ
காமத்தின் பசிக்கு
உயிர்கொடுத்து..பின்
தாமதமேதுமின்றி..
அவள் வாய்வழி ராஜகுமாரன்
என்னுள்ளங்கையில் வந்திறங்குவான்..

அன்றிரவு
விண்மீன்களும் நிலாவும்
விடுமுறைதினமாக ஏற்றுகொள்ளும்..
மழை மட்டும் பணியெடுக்கும்..

ஆகாஷம் முழுதும்
மூவர் மட்டும் கொண்டாடும்
திருவிழா தொடங்கும்..

இரவு தீரும்
கனவு முற்றும்
நண்பனும் நானும்
அடுத்த..அடுத்த..வருடமாய்...
திருமணம் தள்ளியிட்டு தடைபட்டதான
உயிர் அண்ணனுக்கு
பெண்தேட விரைவோம் ..!

Thursday, September 24, 2009

போதையின் மிச்சம்..!


காதல் முத்தி
கனவு நைந்து
சடலம் ஈமொய்த்து
கவிதை மறந்து
இரவின் உடைந்த நிழலினில்..

தாழிட்ட கதவின்
ஒளிபூசிய துவாரம்
அம்மணமாய் காமுகன்
அணைத்தபடி எனதவள்..

நேற்றுவரை மைகசிந்த
ஈரம் திங்காது
காற்றினில் கிழிபடாது
உயிர்நீத்த காகிதங்கள்
பத்திரமாக அடைக்கப்பட்ட அலமாரி ;
நான் அவள் அதுவாகிய காதல்..

ஓரோரத்தில்
முன்னொரு ராத்திரியின் எச்சம்
சாமத்தில் கனவுகளோடு என்பிள்ளை..

ஒளிபூசிய துவாரம்
இருள் உமிழ
படுக்கை முனக ;
மாண்டவன்
மாண்டுபோனவன்
மூச்சுமுட்டிய கண்ணீருடன்
சலனமின்றி தடயமின்றி..

அந்தர வானம்
நூல் ஊஞ்சல்
காற்றின் கைகள்
ஆடுபவன் நானே..

Saturday, September 19, 2009

சாதிகள் இல்லையடி பாப்பா..


பின்புலமும்
முன்பலமும்
மரமண்டையில் ஓங்கியடிக்க
பின்னும் துளிர்க்கிறது
காதல்; கவிதையாகயின்றி..

தேவதை கனவுகளின்றி
எல்லா கனவுகளிலும்
தேவதைகளின் எகத்தாளம்..

ஏக்கதண்டனைகள்
விரும்பியே நுகர்கின்றன
சிறைசுவாசம்..

நானும் நிலாக்கு போணும்
அந்தகிழவிக்கு கிடச்ச ஏணிய
அப்பாட்டசொல்லி எனக்கு எப்பம்மா வாங்கிதருவ;
சாமி எதுக்கும்மா கண்ணகுத்தும்;
எப்புடிப்பா காத்த சட்டபைல புடிச்சுவெச்சுக்கிறது;
இப்படி நிறைய நிறைய
முடிவிலி கேள்வி பதில்களோடு
காலத்தின் கட்டைவிரலில் ஏறிநின்றுகொண்டு
தொண்டைகிழிய கத்த ஆரம்பிக்கிறேன்..

காதல்னா என்னம்மா ,
ஏம்பா இருதயம் வலிக்குது ,
சாதினு ஒண்ணு எங்கிருந்துடா துவங்குச்சு.............?

பின்புலமும் முன்பலமும்
மரமண்டையில் ஓங்கியடிக்க............

Monday, September 14, 2009

உயிர்..

யோனி பிண்டம்
வன் லிங்கம்
ஒட்டி ஒழுகி
வயிறு கிழிந்தோ
யோனி விரிந்தோ
விரட்டப்பட்டிருக்கலாம்..

விழுந்தவுடன்
இருமுலை கசாயம்
மூச்சு சொருகி
மார்போடோ
உள்ளங்கையோடோ
ஏந்தப்பட்டிருக்கலாம்..

பின் அது; மெல்ல
நட்பின் கைபற்றி
காதலின் கன்னம் விழுங்கி
முதலுயிர் யோசித்திருக்கலாம்..

வாழ்வின் வாய்க்காலில்
மென் நாக்கோடும்
கொடு பற்களோடும்
நெடுக வழிந்தோடி
மங்கிய வெளிச்சத்தோடும்
கைதடி உதவியினூடும்
சிலகாலம் நடமாடியிருக்கலாம்..

பின்னொரு நன்னாள்
சதைதுண்டம்
மக்கியோ..சாம்பலாகியோ..
போயிருக்கலாம்;
ஆனாலும்..
முதலுயிர் மீண்டும்..
அதே யோனி
அதே லிங்கம்
நீண்டிருக்கலாம்... உயிரொழுகி.

Thursday, September 10, 2009

மாலைநேரத்து மயக்கம்..


எங்கே அழைத்து செல்கிறாய்
தேநீர் கடைக்கு..
நீ தலையசைத்தால்
இங்கேயே பருகலாம்
அவள் புன்னகைக்கிறாள்
புரிந்தா இல்லை புரியாமலா..!

தேநீர்..
உனக்கா - இல்லை
அதற்கா..!

நீ தேநீர் பிரியய்
நான் காதல் பிரியன்
மெதுவாகவே வா..!

தேநீர் ஆவியோடு
நம்காதலும் சேர்ந்து கொண்டதோ
எல்லோரும் நம்மையே
உற்று உற்று பார்க்கிறார்கள்..!

உனக்கொன்று தெரியுமா
தேநீரும் கோபப்படும்போல
உன் தாமதத்தை
என் கைகளில் சுட்டுகாண்பிக்கிறது
அட..இதற்கும் புன்னகைதானா..!

அசைவுகளிலும்..
தொடுதல்களிலும்..
சிந்திய தேநீருக்கு வருத்தபடாதே
காதல் துடைத்துகொள்ளும்..!

ஏன் இத்தனை கூட்டமா..
அடி - வாங்கபோற நீ
உன் தேநீர் நேரம்
எல்லோரும் குறித்துவிட்டார்கள்
இனி இடம் மாற்றிவிடுவோம்..!

பாதி தேநீர் மீதிவைத்துவிட்டு
கிளம்பி போய்விடாதே
ஏல போட்டியும் நடக்கலாம்
கலவரமும் வரலாம்..!

தேநீர் தீர்ந்துவிட்டது
ஏய் , போகலாமா
காதல் இன்னும் தீரவில்லையே..!

இப்பொழுதெல்லாம்
தேநீர் என்னையும் துரத்துகிறது
உன்னை தேடிகொண்டு..!

கொஞ்சம் தேநீர்
கெஞ்சும் நான்
கொஞ்சும் நீ
நிறைய கவிதைகள்..!.

Saturday, September 5, 2009

முலைகள்..


கல்லூரி வளாகத்தில்
எட்டோ பத்தோ
கை கால்கள்
கூட்டு சேர்ந்துகொண்டு
மார்க் போடுகிறது ..

நாளையோ மறுநாளோ
குழந்தையின் பசிக்கு காத்திருக்கும்
பால்பீச்சும் முலைகள்
வலியை கோபத்தை
எச்சில் தின்றுதீர்க்க
முயன்று தோற்கிறது..

வெட்டி விவாதம்
நீளும் விதண்டாவாதம்
எதைகொண்டு அடிக்க இவ்இளைஞர்களை..?

எரிந்து தீர்வார்கள்..,
இருநிமிடங்கள்
அம்மாவின் கண்களை
உற்றுநோக்க சொல்லலாமா..?

Thursday, September 3, 2009

கடைசி பக்கம்..!*


இன்றைய மாலைக்கு பின்னால்
என்னை தொடர்புகொள்ள
உன் உள்மனம் தூண்டலாம்..
தூண்டினால்..
துளி கண்ணீர் விடு
பின் தொடர்பை துண்டித்துவிடு..!

உன் தொடர் மௌனத்தின்
காரணம் புரியவில்லை
தேடவும் மனமில்லை..
எதற்கும் ஆசைப்படு
என்னை மட்டும் விட்டுவிடு
தொலைதூரம் போய்விட்டேன்
நினைவுகளை திருடிகொண்டு...

வலி தாங்காது நினைவுகள்
வழி சொல்ல முனைகிறது
ஆற்றிலோ பாழ்கிணற்றிலோ
எரிந்து ஓடிவிடு..
அருகே செல்கிறேன்
மனம் துண்டுதுண்டாய் உடைகிறது
மீன்களாவது காதலித்து வாழட்டும்...

புரிதல் பிரிதலென்ற கத்தியால்
காதலை குத்தி கிழித்து
காற்றினில் பேயாக அலையவிட
இனியொருமுறை திராணியில்லை
முன்னுரைத்த ஏழுஜென்மமும் அவசியமில்லை
நீ நீயாக வாழ்ந்துவிடு
நான் நானாக செத்துபோகிறேன்...!*

Tuesday, September 1, 2009

அரேபிய ராசாக்கள் VI



இன்னும் மூன்று, நான்கு வருடங்கள்

கழித்து என் பெற்றோர்

விருப்பத்திற்கிணங்கியோ,

வாழ்கையை வாழ்க்கையாய் வாழ

கண்டிப்பாய் பெண்துணை

தேவையென்று நான் எண்ணினாலோ

உறுதியாக திருமண பந்தத்திற்கு

உட்படலாம்..

வரும் அந்த அப்பாவி பெண்

முதல்இரவிலோ,

இல்லை இரண்டாம்,மூன்றாம்

இரவுகளிலோ

என் மனசை தேடதுவங்குவாள்..

அந்நேரம் எப்பவோ என் மனசை

வளைகுடா நாடுகள் தின்று செரித்து

ஏப்பம் விட்டுவிட்டதென்பதை

கதையாகவோ, கவிதையாகவோ

சொல்ல துவங்குவேன்..

அதை கேட்டுவிட்டு

அவள் " ஓ ".. என்பாளோ,

" உச்ச் " கொட்டுவாளோ,

கண்ணீர்விடுவாளோ,

சரசரவெனமுத்தமழைபொழிவாளோ,

இல்லை இறுக்க கட்டிப்பிடித்து

அவள் மடியில்சாய்த்துகொள்வாளோ,

எப்படி எதிர்கொள்வாளோ ...............

சந்தேகங்களுடன் எனக்கும்,

என்னைபோலுள்ள

வளைகுடா நண்பர்களுக்குமாய்

கதை ஒன்றை எழுததொடங்குகிறேன்,

பின்பு ஏனோ மனமின்றி

நிறுத்தி விடுகிறேன்,

இன்னும் சில காலம் கழித்து மீண்டும்

எழுத தொடங்கலாமென.............

Monday, August 31, 2009

தேடல்..


முன்பொருநாள்
புகையிலையில் தொடங்கிய
நமக்கிடையேயான முரண்பாடு
பிற்பாடு நீ
பிரிவிற்கு என்னவெல்லாம்
காரணங்களறிய முயற்சிப்பாயோவென
பயந்தே தவிர்க்கிறேன்
நமக்கான சந்திப்புகளை..

சிறுபிள்ளை காலத்தில்
முற்றத்தில் மலம் கழித்தேனென
பாட்டி அடித்தது ..
அம்மா மார்களில் சாய்ந்து
அப்பாவிடம் கதை கேட்டது ..
எதிர்வீட்டு அக்கா கைபிடித்து
பள்ளிக்கு போனது ..
பக்கத்து வகுப்பு தேவியிடம்
இனகவர்ச்சியை காதலென புரிந்து
கணக்கு ஆசிரியரிடம் கொட்டுவாங்கியது ..
.............................................
இங்ஞனம் நீண்டுகொண்டே
நீயின்றி போன
என் எல்லா நிமிடங்களும்
என்னிடம் பொக்கிஷமாக ...

நினைவுகள் பொறுமையின்றி
நான் நீயென முண்டியடிக்கிறது
முன்னேறி வர...

எனையும்
எனைசேர்ந்த எல்லாமும்
என்னை தேட
நானோ...
விடுபட்டுபோன காதலையும்
விடைபெற்றுபோன உன்னையும்
கவிதைகளில் தேடிகொண்டிருக்கிறேன் !!

Saturday, August 22, 2009

கற்பனை காதலிக்கு 1

















கனவுகள் தின்றதுபோக
எஞ்சிய மிச்சஉயிர்
காய்ந்து படிந்திருக்கும்
கவிதைகளில் ...

சாகுமுன் வாய்ப்பு கிடைத்தால்
என் இதயம் பிடுங்கி
காதல்பரிசு தருகிறேன் ...

எனை தின்ற கனவும்
கனவை தின்ற கவிதையும்
என்னையும்
என் காதலையும்
முழுமையாய் உன்னிடம் சரணடைக்கும் ...

அநேரம் நீ
மலைத்து பேந்த விழிக்காமல்
புன்னகை செய்
இறுக்க கட்டிபிடி
முத்தங்கள் விட்டுகோடு
மெதுவாய் தலைகோது
விரல்களில் சொடெக்கெடு
உயிரோசை கேள் ...

காதல் களைப்பில்
உன் மடிசாய்ந்து
கண்சொக்கும் நேரம்
காதோரம் செல்லகடி கடி ...

பின் இருவரும்
கைகோர்த்துகொண்டு
தொலைதூரம்
நடக்க துவங்கலாம் .................

Wednesday, August 19, 2009

எச்சில் சமுதாயம் ..


காலி மதுகோப்பை
காலியாகவே நிரப்பபட
புரையேறிய பொழுதினில்
எழுதி தீர்த்துவிடுவதென ..

காதல்
வரம்..? சாபம்..?
நோண்டி நொண்டியடித்து
சாலையோரம் திரிந்தவனிடம்
குப்பைகளை
கண் , காது.. கபாலம்வரை
காயப்படுத்தி திணித்தனர்
பொதுவிட காதல்வாதிகள் ..

மாலை ஒழிய
தலையணையில் தலைசாய்க்க
எதிர்வீட்டு முதிர்கன்னி
ஞாபகத்தில் எழுந்தழ
காதலாவது , கத்திரிக்கையாவது ..

கண்களை இறுக்கி
மூட முயற்சிக்கையில்
வரதட்சணையும் விவாகமும்
புழுக்களாய் நெளிய
சரி, மூத்திரம் களைந்து
மீண்டும் முயற்சிப்போமென
கழிவறையை தாழிட்டால்
வெள்ளை பிசுபிசுப்பிற்கே
எத்தனிக்கிறேன் என்னை ..

எழுதவே கூடாதென்றிருந்த கவிதை
கடைசியில் கழிவுகள் துப்பி
எச்சிலில் நனைய ;
நானும் சாதாரணன்
என்னையும் சேர்த்தே
இச்சமுதாயம் .

Monday, August 17, 2009

கடற்கரையோர முத்தங்கள்..

மலம் கழித்து
மூத்திரம் தெளித்து
அதில் விரல்களிட்டு
வண்ணமென்று கத்தி
படம் வரைகிறார்கள் !!

வாய்பிளந்துகொண்டு
வேடிக்கை காண
என்பின்னால் நீயும்
உன்பின்னால் நானும் !!

சாக்கடை கொசுவில்
மலம் மொய்க்கும் ஈயில்
நாறும் அட்டைபூச்சியில்
உயிர்திசுக்கள் பொறுக்கி
இவர்களை செய்திருப்பானோ சாத்தான்
சர்சைபடுத்துவதாயானால்
மானம் கெடும் காதல் !!

சந்தேகங்கள் நிறைவுற
புள்ளியிட்டு தீர்க்க
ஒருமுழம் கயிறும்
ஆறடி குழியும்
அவசியப்படலாம் !!

யோசனைகளிலேயே
மூச்சுமுட்ட
கழுத்தறுந்து விழ
காதல் சாக
சீய்ய்.... போங்கப்பா .

Sunday, August 16, 2009

கற்பனை காதலிக்கு ...




காதலே..
காதலிக்க ஆசையா உனக்கு
கொஞ்சம் கண்ணை திற
என் காதலி வீதிவருகிறாள்...

அன்பின் ஆதாரங்கள்
நம்மிலிருந்து தொடங்கட்டும்
நானும் நீயும் காதல்செய்வோம் வா...

நான் நீ காதல்
மூவரும் இணைந்து விடுவோம்
திருவிழா இனி தினமும் தொடங்கட்டும்...

அட என்ன இது
ஊரிலுள்ள பெண்களெல்லாம்
உன் வீட்டு வாசலில்
ஓ..வெட்கம் வாங்க வந்தார்களாம்...

ஊரே வேடிக்கை பார்க்கபோகிறது
சாமி கண் திறக்கிறாராம்
நேற்று நீ கோவில் போனாய் என்பதை
உடனே எல்லோருக்கும் சொல்லியாகவேண்டும்...

பூக்களுக்குள் சண்டை மூட்டாதே
இனி நானே கொண்டுவருகிறேன்
உனக்கான பூக்களை ...

அட... உணர்ச்சிவசப்பட்டு
ஆணிகளை உதைத்துவிட்டு
உன் முகம் காண
கண்ணாடி கீழிறங்கி வருவதை பார்!!

சிறுபிள்ளைகள் போல்
அடம்பிடிக்கும் மருதாணிஇலைகளை பார்
தினமும் மாலைவேளையானால்
உன் உள்ளங்கை வேண்டுமாம்!!

இந்த நடனத்தை பார்
தேம்பி தேம்பி அழுவதை
உன் கால்கள் வேண்டுமாம்
வாழ்நாள் கடனாக!!

காற்றும் ஆசைப்படுகிறதோ
உன்னை காதலிக்க
எவ்வளவு அழகாய்
சண்டைபோடுகிறது துப்பட்டாவோடு!!

தீரதீர நான் தருகிறேன்
அடிக்கடி முத்தம் கொடுத்துகொள்
சின்ன குழந்தைகளுக்கு ...

தேவதைகள் மஞ்சள், சிவப்பு ..
வண்ண ஆடைகளும் உடுத்துமென்பது
உன்னை பார்த்தபின் தெரிந்து கொண்டேன் ..

ஒருமுறை நீ நனைந்தாய்
இப்பவும் மூடப்படாத ஜன்னல்கதவுகள்
மறுபடி மழை எப்போவரும் !!

தேவதை சிறகுகள் விற்பனைக்கு
என்ன வேடிக்கை பார்கிறாய்
அது நீ கிழித்துபோட்ட மிட்டாய்தாள்கள்தான் ..

இன்னும் ஒரேயொரு வாய்ப்புகொடு
நானும் பழகிகொள்கிறேன்
நகம் கடிக்க ..

உன் புருவங்களை காட்டிவிட்டுபோ
இங்கே பிறைநிலா காண
பயங்கர கூட்டம் ..

உனக்கெழுதிய கடிதங்களெல்லாம்
முதிர்கன்னிகளாக எனது பெட்டியில்
என்று மௌனம் கலைக்கபோகிறாய் !!

நான் ஆண்
நீ பெண்
வேறென்ன வேண்டும் காதலிக்க ??

வெட்கத்தின் வெப்பம்
மௌனம் உடைத்து
முத்தமாய் விழும்
காதலின் அடியாளமென ..

காமத்தின் பெருமை
பெருகுமோ ?
நம் காதலின்
உதவியால்!!

நான் பாதை
நீ பாதம்
உணர்வதில்லை காதல்
விதி வலி...

நான் எழுதுகிறேன்
நீ படிக்கிறாய்
காதல் ரசிக்கிறது ..

வார்த்தைகள் நீ
எழுதியது நான்
பரிசு கவிதைக்கு ..

காதல்
உனது அசிர்வதிக்கப்பட்டது
எனது சபிக்கப்பட்டது
மறைமுக தூதுவனாய் நான்!

Saturday, August 15, 2009

...................

காதல் தருணங்களில்
களைப்பாற அமர்ந்துபேசிய
மர தரைகளில்
இன்னும் பூக்கள்
உதிர்ந்து கொண்டுதானிருக்கின்றன
உன்னையும், உன்
புது- காதலையும்
ஆசிர்வதிக்க !!

கள்ள நோட்டு


இரைச்சலுடன் இருட்டறை
கூச்சப்படாமல் கருப்புமனிதர்கள்
இயங்கி கொண்டிருக்கிறார்கள்
சிவப்புபெண்களைவிட கேவலமாக
அதுதெரியாமல் அங்கே
வெள்ளை புன்னகையுடன் "மகாத்மா"

Thursday, August 13, 2009

மௌனம்...


பொல்லாத காதல்
மெல்லிய மௌனம்
வன்மையாக கண்டிக்கிறான்
காதல் கடவுள் !!


காதலின் வேதனை
மதம் பிடித்த
மௌன உரையாடல்கள்
உணராதோ நாம் வாழும்வரை !!

"கவிதை"


நீயோ
அவளோ
அணுகாத
அனுபவிக்காத
"காதல்"
என்னிடத்தில் ஏராளமாய்
இப்படிக்கு
காதல் கவிதைகள் !!

Tuesday, August 11, 2009

அரேபிய ராசாக்கள் V


ஒரு ரியால் கூல்டிரிங்
இரண்டு ரியால் சாக்லேட்
கொஞ்சம் வாழ்த்துக்கள்
அப்பாவான சந்தோஷம்
அடங்கிபோய்டுமா நண்பனுக்கு ..

இப்போ லீவ் இல்லையாம்
இன்னும் மூணுமாசத்ல வராராம்
போட்டோ எப்படியாவது அனுப்பசொன்னார்
மனைவி எடுத்து சொல்கிறாள்
மற்ற சொந்தங்களிடம் ..

ஒற்றையாய் ஆராரோ பாடும்
அவள் அழுகையின் சப்தம்
இங்கே இவன் தூக்கத்தில்
வெடிக்கும் வார்த்தைகள்
வழியும் கண்ணீரை வந்தடைய
எதைசொல்லி ஆறுதல்படுத்த
ஆளாளுக்கு ஒருயோசனையுடன் ..

தங்கச்சி திருமணம்
நண்பனது மரணம்
தாராளமாய் ரணங்கள்.......................
கிடப்பில் கிடக்கின்றன
இங்குள்ள எல்லோர்க்கும் ..

"அரேபிய ராசாக்கள்
அருவருக்கதக்க தியாகிகள்" .


புகையிலையில் தொங்கிய கவிதை..

பாடுபொருளொன்றும் தட்டுபடாது
கண்ணயர்ந்தபோது
விரல்களிடுக்கில் செந்நிறத்தில்
எரிந்துகொண்டிருந்த புகையிலை
கக்கிகொண்ட சாம்பல்
அழுத்தமாக எழுதிசென்றது
"பிரிவுகளெல்லாம் நிரந்தரமல்ல " ..

Monday, August 10, 2009

அரேபிய ராசாக்கள் IV


ஈச்சமரமும் ஒட்டகமும்
பாலைவனமும் சுழற்காற்றும்
முழுமுக்காடு பெண்ணும் சாட்டையடியும்
நடமாடும் கனவுகளில்
அவ்வப்போது ஊர்ந்துவரும்
ஊரும் ஊர்நிழலும்
எங்கள் இரவுகளை சுகபடுத்த .


பூ - பெண்


பெண்ணே இப்போதைக்கு
பூக்களுக்கும் எனக்கும்
ஒரேயொரு சந்தேகந்தான்
நீ தோட்டம் சுற்றிபார்க்கிறாயா
இல்லை யாரிந்த புதுபூவென
வண்டுகளோடு சேர்ந்து
தோட்டம் உன்னை சுற்றிபார்க்கிறதா !!


பூக்களின் விருப்பத்திற்கிணங்க
பூக்களை அழகுபடுத்த
பறித்து செல்கிறாயோ !!


பூச்செடி நடக்கிறதென
எல்லோரையும் குழப்புகிறாய்
தயவுசெய்து தோட்டம் பக்கம்
இனி போகவே போகாதே !!


பூக்களுக்கெதற்கு
அழகும் வாசமும்
தந்துகொண்டிருக்கிறாய்
தலையினில் சூடி !!


முகபருக்களை ஆராய்ந்தபின்பு
பூச்செடிகள் ஒன்றுகூடி
காற்றின் துள்ளலில் தலையசைத்து
பூந்தோட்டம் என்றவளை
வர்ணிப்பதாய் நீள்கிறது கனவு !!


பூக்களை பற்றிய
கவிதை கேட்கிறாள்
பூந்தோட்டமே நீயென
அவள் தலைமுடி முதல்
உள்ளங்கால்நகம் வரை
ஓவியம் வரைந்து தருகிறேன் !!

அரேபிய ராணிகள் .


காணகிடைத்த கண்களும்
புறமுதுகு உரசிசெல்லும் மூச்சுகாற்றும்
மௌனமும் கோபமும் இயலாமையும்போல
முழுநீள கருப்புஅங்கிக்குள் உடைபட்டுபோகாது
எழத எத்தனிக்கின்றது
புன்னகையோடு கவிதையொன்று ..

ஏனோ மனம்
வலியாய்தான் காட்சியமைக்கிறது
இப்பெண்கள் பிறப்பை .

Sunday, August 9, 2009

........


கால்கள்நீட்டி கைகள்மடக்கி
படுக்க முயற்சிக்கையில்
தனிமையின் சூடு
கண்களிருட்டின் காட்சிவழி
கொட்டிசிதறும் திரவமாய்
கூடவே அடித்துவிரட்டப்படும்
சிலகோடி உயிர்களும்
சமாதி திசைகாட்டி ..

காதல் கடிதம் ..


அடுக்கிவைக்கபட்டிருக்கும் புத்தகங்களில்
அசைவற்றுகிடக்கும் கவிதையிலொன்றை
திருடியோ திருத்தியோ
மெய்யாகவோ பொய்யாகவோ
அவளை அழகுபடுத்த
சிலநிமிடம் ஒதுக்கிவை ...
வாய்ப்பிருக்கிறது ..
வெட்கத்தில் மௌனபட்டிருக்கும் காதல்
தொபெக்கென உன்
உள்ளங்கையில் அடைபட்டுகொள்ள !!

தீர்ப்புகள் திருத்தப்படலாம் ..


மூக்கொழுக மது விழுங்கி
நடுஇரவின் தொண்டை பாலையில்
வாக்குறுதி நாற்றம் வேகமாய்தட்ட
காதலும் கவிதையும்
வாந்தியில் நெளியும் ..

விடியவிட்டு
விரல்கள்நீட்டி கழுவுகையில்
முதல்சந்திப்பும் மௌனமும்
வெட்கமும் சிறுபுன்னகையும்
முத்தமும் கோபமும்
தரையினூடு காய்ந்தழுது படிந்திருக்கும் ..

ஜாதிகொட்டை
தின்று செரித்த
தாய்பறவை எச்சத்தில்
உயிர்தெழுவோமெனவோ .

கலாச்சாரம் அகல பாதாளத்தில்...


மும்பை வேகவாழ்வினொரு
ஞாயிறு ஒதுக்கி
அழகிய அரபிகடலின்
ஜுஹு கரையோரம் சுற்றலானேன் .,

துப்பட்டா , வெட்கம்
இன்னும் எத்தனையோ
கனம் கூடுதலாம்
வீட்டிலேயே விட்டுவிட்டார்களாம்
சொல்லாமல் சொல்லிபோகிறாள்
பெண்ணொருத்தி !!

எத்தனை முத்தங்கள்
எத்தனை அசிங்கங்கள்
காதலர்களாம் ?!

ஏதோ புத்தகத்தில் படித்து
நம் கலாச்சாரம் கற்கவந்த
வெள்ளைகாரனின் கேள்விக்கு
திக்கிமுக்கி விளக்கிகொண்டிருந்த
பாப்கார்ன் பையனையும்
தேசியமொழிகூட கற்க மறந்த
பாவப்பட்ட இந்த தமிழனையும்
கடந்து செல்கிறாள்
கொஞ்சம் மெதுவாகவே
விலைமகளொருவள் ..

Saturday, August 8, 2009

கவிதையல்ல ...


சாலையோரம் விரிக்கப்பட்ட
பழைய புத்தக கடையில்
சிதறி கிடக்கும்
க(வி)தை புத்தகங்களின்
பிரசத்திபெறா நாயகர்களை
எல்லாவரும் பிரித்து படிக்க
எடையில் எடுத்துசெல்கிறாரோ
மளிகைகடை அண்ணாச்சி ?!

அரேபிய ராசாக்கள் III


அழகற்று போகுமே
ஒற்றையாய் நட்சத்திரம் ..
தனியனாய் வாழும்சாபம்
வாங்கிதான் வந்தோமே ..
கைநிறைய ரியாலும், தெராமும்
கண்கள் நிறைய ஏக்கமும்
திங்க சோறும்
திணிக்கபட்ட புன்னகையுமாய்
நீளுதே வாழ்கை ..
வேரறுந்த வலி
வேறென்ன வழி
வாழ்ந்துதான் ஆகணும்
ஒருமுறைதான் வாழ்க்கை.

பிழைதேடிய கவிதை பிழைகளோடு ..


எவ்விடம் பிழை
அவ்விடம் தேடி
நெடு இரவினில்
நுரையீரல் நிரம்ப
புகையிலை எரித்து
யோசனை கக்கும்
எழுத்துக்கள் பொறுக்கி
காகிதத்தை காயப்படுத்தி
கசக்கி எரிகிறேன் ..

ஜாதி சாக்கடையில்
பிசுபிசுத்துபோன காதலும்
பிழைதேடிய கவிதையும்
குப்பைதொட்டியில் .

.............


வண்ணத்துபூச்சிக்கும்
வானவில்லுக்கும்
வண்ணம் பூசியது யாரென்ற
சிறுபிள்ளை கேள்விபோல்தான் ..

அவள் அறிய முற்படும்
ஏன் என்னை காதலிக்கிறாய் ?!

Thursday, August 6, 2009

ஜூலி I miss you ...





இன்றோடு ஒரு ஆண்டு முழுமையாக நிறைவடைந்துவிட்டது நீ என்னை விட்டு பிரிந்து. அன்றொருநாள் பரஸ்பரம் பரிமாறிகொண்டது நினைவில் வருகிறது.. so...இன்றும் அன்பே என்றுதான் உனக்கான கடிதம் தொடங்குகிறேன்.
எப்படி இருக்கிறாய் என்று கேட்பதற்கு பதிலாய் என்னை யாபகம் இருக்கா என்றே அழுத்தம் திருத்தமாக தொடர்கிறேன். இந்த மாதிரியொரு சூழலுக்கு ஆக்கிவிட்டாயே என்னை?? நாம் ஒன்றாய் கூடிசுற்றிய நாட்களில் என்னை மறந்து விடாதே என்று அடிக்கடி நீ என்னிடம் குறைத்ததன் அர்த்தம் இப்போதான் எனக்கு புரிகிறது. ம்ம்..நீ என்னை பிரிந்தாலும் நான் உன்னை மறக்ககூடாது என்பதுதானோ அது?? மறந்துவிடாதே என்று சொல்லிவிட்டு மறைந்து போய்விட்டாய் எங்கோ நெடுதூரம்.. என்னால்தான் தொலைக்க முடியவில்லை நினைவுகளை. அடிக்கடி என் கனவுகளில் வந்து நீ கொடுத்த முத்தங்களை திருப்பி கேட்கிறாய்.. அய்யயோ எப்படி அதனை திருப்பி கொடுக்கபோகிறேன் என்று நானும் கனவு தொலைந்து பேந்த பேந்த விழிக்கிறேன். தீர்மானித்து விட்டேன் எப்படியும் நீ கொடுத்த முத்தத்தை உன் வகையராவுக்காது கொடுத்துவிடவேண்டுமேன்று. ஓர் அதிகாலை பொழுதினில் உன்னை walking அழைத்து போய்கொண்டிருக்கையில் நான் எதிர்பாராத கணத்தில்
அந்த லாரி வந்து உன்மேல் ஏறி இறங்கிவிட்டது. அன்றைய உந்தன் அலறல் சப்தம் இன்னும் என்காதுகளில் ரணமாக ஒலித்துகொண்டிருக்கிறது. இதற்குமேல் பொறுமை இல்லாதவனாய் விறுவிறுவென சென்றேன் உன் வகையறா நாயொன்றை வாங்குவதற்கு.... இப்படியாக முடித்திருந்த last year டைரியை காலால் பிராண்டி விளையாடிகொண்டிருந்தது என் செல்லகுட்டி ஜூலி... கதை வாசித்துமுடித்த அபினவ் நூலகத்தை விட்டு எழுந்து செல்கிறான் ஏதோவொரு திருப்தியோடு....

ஞாபகங்கள் ...


தூசிதட்டி பிரித்து படிக்கிறேன்
முன்னைவிட கொஞ்சம் அழகாகவே
விடுபட்டுபோன காதல்
பழைய டைரியில் ...

ஓர் அந்நிய இரவு ...


யாருமற்ற என் இரவிற்கு
துணையாய் அழைப்புவிடுத்தேன்
கனவுக்கும் ... காதலுக்கும்

கனவு கைகளை பற்றிகொண்டது
ஓர் உருவமற்ற உயிரோடு ...

அங்கே அவன் அவள்
விரல்களை பிடித்து வருடுகையில்
உயிர்கொண்டெழுகிறது காதல் ...

அவள் அவனது
தலைகோதும் தருணங்கள்
காதலை ஆசிர்வதிக்கிறான் கடவுள் ...

இதென்ன புதுஉணர்தலாய்
அவனும் அவளும்
வெட்கப்படும் காதலில்
கண்ணாமூச்சி ஆடுகிறது காமம் ...

ஏதோவொரு தேடுதல்வேண்டி
இருவரும் தொடங்கினர்
நீண்ட தொலைவு ...

காதல் காபிகடையிலும்
காமம் கடற்கரையிலும்
ரொம்ப அழகாக
தனித்தனியாய் விற்றுகொண்டிருந்தனர்
கலியுகவாதிகள் !!

பயமும் , விரக்தியும் கலந்த
வேரற்ற மனதுடன்
கனவையும் காதலையும்
கலைத்து நடுசாமம்
நித்திரை முறித்தேன் .!.

Wednesday, August 5, 2009

என்வீடு வந்து போனாய்...


என்னைதவிர யாரையும் அமரவிடுவதில்லை
செல்ல சண்டையிடுகின்றன
நீ அமர்ந்துபோன இருக்கைகள் !


என் வீட்டு தேனிர்குவளை
வேறெதுவும் பருக மறுக்கிறது
உன் உதடுகளை சுவைத்ததிலிருந்து !


குளியலறை கண்ணாடிக்கு
காய்ச்சல் வந்துவிட்டது
ஓ... நீ முகம்கழுவினாயோ !


அழகுதிமிர் சிதைந்து
வெட்கத்தில் தலைகுனிகிற
மொட்டைமாடி ரோஜாக்கள் !


நீ மறக்காமல் மறந்துபோன
கைக்குட்டை...பத்திரமாக
உடுத்திக்கொண்டது
என் காதல்குழந்தை !


டேய் என்னடா
யார்ருடா அந்த பொண்ணு
தங்கையின் சீண்டல்
அறிந்து கொண்டேன்
ஆண்களுக்கும் வெட்கம் உண்டு !


இந்நிலை நாட்கள்
உனது நிழல்களை
உற்று பார்
அச்சப்படாதே
அது நான்... நானேதான் !


வெளிவர அடம்பிடிக்கின்றன
கவிதைகளெல்லாம்
காதல் குளத்தில்
முங்கிகொண்டு !!

பிரிவின் வலி..


அழியாத ஞாபகங்கள்
கிறுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன
நீயற்ற வெற்றுபொழுதனில்
கவிதைகளாக ...

பிரிந்துபோன மனைவிக்கு ... கடிதம்


நீயில்லையென தெரிந்துகொண்ட
பக்கத்துவீட்டு குழந்தைகள்
வீட்டுக்கு விளையாடவருவதில்லை
சுடுகாடு பக்கம்போனா
அம்மா அடிப்பாங்களாம் !!

நீயற்ற திமிரில்
இந்த மழைநின்ற வானம்
மொத்த ஈரத்தையும்
என்னிடம் கொட்டிசெல்கிறது !!

உச்சக்கட்ட வன்முறையில்
உதடுகள் இங்கே
எப்போதோ நீ சிந்திய
புன்னகையை தேடி
காற்றோடு !!

இல்லை என்பது
உனக்கு நான்மட்டுந்தான்
எனக்கு இந்த உலகமே ...

உனக்காக ஜனிக்கபட்ட
உயிரின் காதலைமட்டும்
எங்கு எடுத்துசெல்கிறாய் ??

முகவரி தொலைத்த
இந்த உயிர்க்கு
முதல்வரி கொடு ...

புரிந்து கொள்
பிரிதலின்றி காதலில்லை
வா..................காதலிக்கலாம் .,

Tuesday, August 4, 2009

சொல்லாத காதல் ...


உன்மீதான காதல்
கவிதையாய் கசியுமேயானால்
ஒருவேளையது
புன்னகையாகவோ
கண்ணீராகவோ
கோபமாகவோ
பிரசவிக்ககூடும் ..
நீ கொட்டிதீர்க்கும்
மௌனத்தை காட்டிலும்
ரகசியமானதொரு செய்தியை
கொண்டுபோய் சேர்க்கலாம்
சில தருணங்களில்
காலியாக நிரப்பபட்ட காகிதங்கள் ..
எழுதமறந்த கவிதையாக
காற்றோடு கலக்கட்டும்
எனது காதலும்
உனது மௌனமும் ..

காதல்கவிதை ..


ஏதோவொருவிதத்தில்
எல்லா கவிதைகளும்
ஞாபகபடுத்துகின்றன
உன்னையே..................
நானும்
கவிதையெழுத
கற்றுகொண்டேன் !!!

Monday, August 3, 2009

யாரிடம்போய் சொல்ல ?


பூங்கா இருக்கையில்
நமது பெயர்கள் மேல்
நமது பெயர்கள் எழுதி
உஷ்ணமேத்தலாம் ...
பிழையொன்றும் இல்லை
பரிமாறி கொள்ளலாம்
சில சம்பிரதாய சில்மிஷங்களை ..
மழை மாலையில்
காதலினூடே காமமும் கலந்திருக்கலாம் ...
ஓர் நன்னாளில்
திருமண வாழ்த்துக்கள் பெறலாம் ...
விண்ணளவு காதலும்
நிலவளவு காமமும் வைத்து
நட்சத்திர பிள்ளைகள் செய்து
நூறாண்டுகள் வாழலாம் ..............................


கனவுகளுக்கொன்றும் குறைவில்லை
காதலியைத்தான் காணவில்லை ...

அவள் - கவிதை ...


தேவதைகளெல்லாம் கோபமாக
உன் வீடுநோக்கி போகின்றன
என்னவென்றா கேட்கிறாய்
எல்லாம் பொறாமைதான்
செய்து பின் உயிர்கொடுத்தானோ
உன் அப்பன் உன்னை !!

என்னருகில் வா
நானும் கொஞ்சம் அழகாகிகொள்கிறேன் !!

நனைந்தது போதும்
குடை பிடித்துகொள்
மழை வெட்கபடுகிறது பார் !!

இத்தனை பாவனைகளை
எங்கிருந்து பிடிக்கிறாய்
எனக்கும் ரகசியம் சொல்லிகொடேன் !!

வரும்போதே
கொஞ்சம் மௌனத்தையும்
நிறைய வெட்கத்தையும்
எடுத்து வந்துவிடுவாயோ !!

சற்றுநேரம் அப்படியே இரு
கவிதை எழுதி கொள்கிறேன் ... !!

மனைவியே காதலியாவாள்...


அதிகாலை பூக்கள்
பனித்துளி ரசிக்க
கைப்பிடித்து நடப்போம்..

வீதிகளில்
குழந்தைகள் கண்டால்
குழந்தைகள் ஆவோம்..

ஓர் நொடிக்கும்
உயிர் கொடுப்போம்

குட்டி குட்டி புன்னகைகளையும்
சேமித்து வைப்போம்..

சின்ன சின்ன பரிசுகளையும்
அலங்கரித்து வைப்போம்..

உலகையே வாங்கிவிட்டதாய்
கர்வம் கொள்வோம்..

பெண்மை பேச நானும்
ஆண்மை பேச நீயும்
செல்ல சண்டைகளிடுவோம்..

மெத்தை வெட்கப்படும் தருணம்
நாம் கசிந்து போவோம்..

வெளிச்சத்தை இருள் கொல்லும்
தேடல்கள் தொடர்ந்து செல்லும்..

எந்தன் கனவுகள் நிறைக்க
எப்போது வருவாயோ ?!

Sunday, August 2, 2009

காதலொரு சாத்தான் கவிதை !!


கக்கயிடுக்கிலும்
உள்நாக்கு எச்சிலிலும்
சம்மணமிட்டுகொண்டு காதல்
பிரிவிற்கான காரணமறிய உந்தினால்
புள்ளியோ .. பூலோகமோ
அகப்படலாம் ...

எழுதி அழுதாலும்
அழுது எழுதினாலும்
கடைசியாய் சிக்கபோவது
கிழிக்கப்பட்ட கடிதங்களும்
செத்துப்போன முத்தங்களும்
பிடிசாம்பலுந்தான் ..

கக்கத்து மயிர்வழித்து
தேங்கிய எச்சிலில்நனைத்து
சாக்கடையில் முக்கினால்
காரணமறிய முயலும் அவகாசம்
கபகபவென எரியும் ;
எரிய நேரம்பிடித்தால்
கைகுட்டையை போடு
மூக்குசளியும் கண்ணீரும்
உதவி கொள்ளும் ..

ஒன்று கூட்டல் ஒன்று இரண்டு
அ ஆ அப்புறம் இ , ஈ .........
இதுபோதாதா வாழ ??


பிசிரடிக்குது பிராந்தியில் பால்யம் ...!


அம்மாவின் அடுப்பங்கரை எள்ளுடப்பியில்
ஒளிந்திருந்த ஐந்துரூபாய் திருடி
நண்பர்களோடு சுவைத்த மிட்டாயால்
உதைவாங்கி கிடைத்த சந்தோஷம்
கிடைக்கபோவதில்லை ஒருபோதும்
மிச்சம்பிடித்த சம்பளத்தில்
வாங்கிகுடிக்கும் பிராந்தியில் ...

சிங்களனுக்கு பிரபாவிடமிருந்து மூர்க்கமாயொரு ...

விந்தணுக்களும் குண்டுதுகள்களும்
ஒருபோதும் தீரபோவதில்லை
விதியேயென்று வாழ்வதாயுமில்லை ..

புத்தனுக்கும் பேய்பிடிக்கும்
சாமிகளும் ஆயுதமேந்தும் ..

இதுவொன்றும்
தனிமனித உந்தலில்லை
ஒடுக்கியவுடன் ஒடிந்துவிட
இனம் அழிந்துவிடும்
இனியும் கனவு காணாதே ..

ஏந்தப்படும் துப்பாக்கிகள்
என்ஆத்மா தலைதாங்கும்
தனிஈழத்தை தனதாக்கும் ..

நம்பிள்ளைகள் கைகோர்த்து
இனம் மொழி
குண்டடி கற்பழிப்பு
பட்டிணி சாவு
வரலாற்றிலறிந்து
வெட்கப்படும் கண்ணீர்சிந்தும்
முன்னோர்களை தியானிக்கும் ..

இவையெல்லாம் நிச்சயமாய் நிச்சயிக்கும்
கொஞ்சம் காலம் பிடிக்கும் .

Thursday, July 30, 2009

பொய்கால்குதிரை..

பூக்களெல்லாம் அணிவகுத்து
ஆர்பாட்டம் செய்கின்றன
உந்தன் பிறந்தநாளை
பூக்களின் தினமாக்க சொல்லி !!

தங்கை பூட்டி வைத்திருக்கும்
வளையல்கள் அனைத்தும்
இரவுநேரங்களில் திருட்டுத்தனமாக
என்னிடம் வருகின்றன
கால்கள் வரைந்துவிடெனசொல்லி
உந்தன் கைகள்சேர
கொள்ளை ஆசையாம் அவைகளுக்கு !!

செட்டியார்கடை கொலுசுகளெல்லாம்
எந்தன் கைப்பிடித்து விடமறுக்கின்றன
உன்னை கடைவீதியில் கண்டபின்னால் !!

எப்படி தெரிந்து கொண்டதோ
இந்த கோவில் சிற்பங்கள்
நீ போகும் முன்னே
மெதுமெதுவாய் வெளிநடப்பு
செய்ய துவங்கிவிட்டன
ஓ.... நீ நடக்கிறாயோ !!

இப்பொழுதெல்லாம்
நிலா இரவையோ
நீண்ட ரயில்தடங்களையோ
எதிர்வீட்டு மழலையோ
என் முதல்காதலையோ
யோசிப்பதே இல்லை
என் கவிதைபொய்கள் !!

கடைசியில் ஒருநாள்
என் கனவுகளுக்கு
கால்கள் முளைத்து
உன் வாசல் வரும் !!

அன்றும் சொல்லி அணைக்காதே
நீ என் தோழனடா!!

"விண் தொட்ட விரல்கள்"


உன் பாதங்களை
தரிசிக்கும் வீதிகளில்
காத்திருக்கிறேன்
வானளவு காதலுடன்!

கடந்து செல்கிறாய்
ஒவ்வொரு நாளும்
அழகு கூடியவாறே!

பேசாத மௌனமும்
சொல்லாத காதலுமாய்
ஓர் முட்டுசந்து மறைவில்
தவமிருக்கிறேன் நானும்!

ஒவ்வொரு இரவும்
கழுத்து நெரிக்கிறது- காதல்
நாளைய பொழுதினில்
உன்னோடு ஒட்டிக்கொள்ள!

வெட்கி சிரிக்கிறது
கனவுகள் கண்களிடம்
இன்றைய காலையின்
வியர்வை பொழுதினை எண்ணி!

உன் உதட்டுபுன்னகை
கண்டபின்னால்
சிதறிகிடக்கும் வார்த்தைகளெல்லாம்
கவிதைகளாக!

கோபம் சாமிக்கு
தெரிந்துவிட்டதுபோலும்
நான் கோவில்வருவது
உன்னை தரிசிக்கவென்று!

சில நாட்களில்
அக்காவின் அர்த்தமற்ற கோபங்கள்
நீ வெட்கி வெட்கி
விளக்கியபின் அர்த்தமுள்ளதாக!

ஒரு மொட்டைமாடி இரவில்
நீ நட்சத்திரங்களை
எண்ண சொன்னபின்
நம் காதலின் அளவறிந்துகொண்டேன்!

அதே இரவினில்
உனக்களித்த முத்தங்கள்
பெண்மையின் வெட்கம்
முழுமையாக தெரியபெற்றேன்!

நான் வாசிக்க
நீ ரசிக்க
மழலை நம்மை கட்டியணைக்க....

"அம்மா அதட்டுகிறாள்
டேய் தூங்குடா"!!!

Wednesday, July 29, 2009

"வேசிகளும் கடவுளின் குழந்தைகள்தான்"

காமம் விற்கப்பட்ட
ஓர் அழுக்கு இரவினில்..

யாரை குறைசொல்ல
ஒவ்வொருத்திக்கும்
ஒவ்வொரு கதை!!

மொத்தமாய்
விதியை
பலியிடுகிறோம்!!

எங்கிருந்து கற்றேன்
இமைகளோடு உதடுகளும்
கூடிகுவிந்த இந்த
புதுவகை புன்னகை!!

மனித குரங்குகளின்
அசிங்க ஆட்டம்
சில நூறுரூபாய்களோடு!!

மாத கடைசிகளில்
ஏழை போதகனும்
போற்றி அனுப்பபடுகிறான்
சில,பல வக்கிரமான திட்டுகளோடு!!

அழகி ... நீ
கொஞ்சும் வழிபோக்கன்
கொஞ்சம் அதிகமாகவே
இன்பம் வாங்கி செல்கிறான்!!

வருங்காலம்
வெட்கம் என்ற
ஒன்றே மறக்கும்
எங்கள் இனபெண்களுக்கு!!

ஒவ்வொரு முறையும்
மரண ரணம்...
உடல் விற்கிறோம்
வயிறு நிரம்பவே...

ஒருமித்த ஆசையில்லை
வருபவனுக்கெல்லாம்
எங்கள் ஆசைகேட்க
எவனுமில்லை..

விசித்திர குரங்குகள்
வாசல் தட்டுமோ
விதி நொடிக்க ?

நல்வாழ்வு பிறக்குமோ
நாங்களும் கடவுளின் குழந்தைகள்தான் !!

கனவற்ற இரவு...

என் தோட்டத்து
பூக்களுக்கெல்லாம்
கண்கள் முளைத்து அழுகின்றன
விட்டுப்போகிறேன் என்கிறாயே!

விழிகள் திறக்க மறுக்கின்றன
உன் வருகையில்லா
வீதியை வெறுப்பதனால்!

சுண்டல் பையன்
தொழில் மாறுகிறான்
கடற்கரை மையானமாகிறதாம்!

இரவுகள் அடம்பிடிக்கின்றன
உன் புன்னகை நிரம்பிய
கனவு வேண்டுமென்று!

வார்த்தைகள் சிதைகின்றன
காதல் இல்லாத
காதல் கவிதை வாடி!

கால பகவான்
செத்து போகிறான்
வாழ பிடிக்காமல்!

கடவுள்
சாபமிடுகிறான்
காதல் செத்தொழிய!

வெறுக்கிறது
எனை இந்த
புது எழுத்துலகம்..

நட்சத்திரங்களில்லா இரவு
அலைகளில்லா கடல்
காண ரசிக்குமோ ??

Tuesday, July 28, 2009

எதிர்பார்ப்பு ...

காதல் சாகும் நேரம்
காமம் - தீரும் தாகம்;
உனது ஆசை
நான் தீர்க்க
முத்தங்கள் தொடர
முன்னேறுவோம் இரவை !

இரவோ - நீள நீள
காதலோ பெருக பருக
விழித்திருப்போம் காமத்தோடு !

விண்மீன்கள் கண்சிமிட்ட
பகலொளி அறியாமலேயே
தூங்கி கிடப்போம் !

அங்கீகரிக்கப்பட்ட காதலயினும்
தோளோடு தோள் உரச
வெட்கப்படுவோம் வீதியில் !

இருவருக்கும்
புதுபுது உறவுகள் பிறக்க
கொண்டாடுவோம் நாட்களை !

கருவொன்று - உனது
கருவரைக்குள் வளர
தக்க நாளில்
அழுகை சப்தம்
நம்மை தாலாட்ட
உயிர்பெருவோம் முழுமையாக !

இன்றைய இதே காதல்
என்றும் நம்மை தாங்க
வழிநடப்போம்
புது உலகம் சேரும்வரை !!

காதல் வியாதி..!

கனவில்
நீயும், நானும்,
ஆசைதீற அளவுமீற
காதலித்துகொண்டிருக்கிறோம்
ஆனால் நிஜத்தில் ??

காதல்......
காதலிப்பவர்களுக்கெல்லாம்
கிடைக்குமென்ற நப்பாசை
உன்னைப்போல் எனக்கும் !

உளவியல் ரீதியாக
உனக்கொரு பிரச்சனை
மருத்துவன் மறைமுகமாய்
என்னிடத்தில் !!

Monday, July 27, 2009

"காதல்... காதல்...காதல்"

அதிகாலை கனவில்
ரோஜாவே வந்து கெஞ்சுகிறது
உனக்கு தரசொல்லி!


விண்மீன்கள்
விலையற்றுபோனதாம் உன் விழிகள்
பிரசவித்தபின்பு!


வியர்வைகூட இனிக்கிறதாம்
உன்னை காண
காத்திருக்கும் நேரங்களில்!


பிசாசுகளும்
நல்லது செய்ய தொடங்கிவிட்டனவாம்
உனது புனகையை கண்டபின்னால்!


மண்ணிடம் நட்பாகிவிடேன்
உன் பாதங்கள்
அணைப்பதால்!


நீண்ட தியானமிருக்கிறேன்
உன் முகம் மட்டும்
நடுவில் அடிக்கடி!


எனக்கும் உனக்கும்
சின்ன விதியாசந்தான்
உன்னை காதல் தேடுகிறது
காதலை நான் தேடுகிறேன்!


நட்புக்கும் - காதலுக்கும்
நடுவில் நிற்பது
நானா இல்லை நீயா?!


உறங்கப்போன நேரத்தில்
இதயம் ஞாபகபடுத்துகிறது
ஆக்சிஜன் உனது பெயரில்
மட்டுந்தான் கிடைக்குமென்று!


கனவுகளை
உயிர்ப்பிக்குமோ
காதல் காற்று வழங்கி!


காதலுக்கும்
காதலிக்க தோணுமோ
நம்மை பார்த்து ?!

தவம்



மறு ஒருமுறை
மனம் ஏங்குகிறது
மழை உனை ரசித்த
இந்நாளுக்காக !


உன் சிரிப்பின் வெளிச்சத்தில்
காணாமல்போன மின்னலுடன்
இணைந்து கொண்டது
என் வெறுமையும் !


ஈரம்பட்ட உன் துப்பட்டா
வெட்கத்தில் வழிகிறது
என் உதடுகள் !


உன் பாதங்கள்
நட(ன)மாடுவதை பார்த்தபின்
என் விழிகள் மோட்சத்தில் !


உன் கொலுசொலி கேட்டபின்
இடி - இடிப்பதை
சற்றுநேரம் நிறுத்தி கொண்டது
என் காதல்கடவுளின் ஆணையால் !


மழை எப்பொழுது நிற்குமென்றாய்
சின்ன குழந்தையை போல
நின்று போனது - இருமுறை
என் இதயம் !


பொல்லாத விழிகள் கொண்டு
எனது மௌனத்தை
விமர்சித்து சென்றாய்
நான் சிலையானேன் அங்கேயே !


இசை ப்பிரியனாகிறேன்
நீ பேசியதை தொடர்ச்சியாய்
அசைபோட்டு கொண்டிருப்பதால் !


விழிகள் மூடி
யாசிக்க தொடங்குகிறேன்
மறுமொருமுறை
இதே மழை நாளுக்காக !


Sunday, July 26, 2009

மனம் கோணல் ??


பகிர்தல் கொண்டோம்
காதல் பிறப்பித்தோம்...

சந்தோஷ தருணங்கள்
நமது கரங்கள் பற்றி
அழைத்து சென்றது
ஆழமான அற்புத உலகிற்கு...

ஓர் பிரகாச நாளில்
பிரிவதர்கான காரணங்கள்
அறிய முற்பட்டோம்...

திருட்டு புன்னகையுடன்
விரல்களை நகர்த்தி
விதியென்று வருந்தினோம்
காதலை தோற்பித்ததற்கு...

ஓர் மாலை பொழுதினில்
தனிமை விருப்பமின்றி
பூக்களோடு ரகசியம் உரைக்கிறேன்
உன் நினைவுகளை கொல்கிறேன்...

உணர்வுகள் அதேயாயினும்
உனது உருவம் புதியதே !!!

ஏனென்று கேள்வி பதிக்க
ஆயிரம் வாய்புகளிருந்தும்
அதனை தேடமுயற்சிப்பதில்லை மனம் !!!

கனவாய் கலையாமல் நிகழனும் ...


கண்ணீர் வடிக்கின்றன
மனித புற்றுகளும்
மாட்டு கொட்டகைகளும்
அனாதை ஆகிபோனதெண்ணி ...

பிணவாடையில் வாழவிருப்பமின்றி
மக்கி அழுகின்றன
தேயிலை தோட்டங்கள் ...

நாலாபுற அலைகளும்
நுரைகளில் தூக்குபோடுகின்றன
ரசிகனற்ற ஆதங்கத்தில் ....

கடலின் வழிவரும்
கப்பல் பிடித்து தப்பியோடலாம்
புத்தன் மீண்டும் உயிர்தெழுகிறான் ...

குண்டு சப்தம் நின்றுபோகட்டும்
அகதிகள் ,, கற்பழிப்பு
அகராதியிலிருந்தே அழிந்து போகட்டும்
சிறார்கள் பேடியற்று பள்ளிசெல்லட்டும்
புத்தர் மௌனமாய் தவம்செய்யட்டும்
காதலர்கள் கடற்கரை ரசிக்கட்டும்
தேயிலை வாசம் வீசட்டும்
இயற்கை பீற்றிகொள்ளட்டும்
இலங்கையின் அழகை ....

நேற்று வெடித்த குண்டில்
செத்துபோன சாமி
வரம் .. கொடுத்து போகிறான்
ஏழாம் ஜென்மத்திலாவது
கிடைக்கட்டும் இவையெல்லாம் !!!


Saturday, July 25, 2009

நெடு நீண்ட ஆண்டுகளாகவே...




விழிகள் இறுக்க மூடுகின்றோம்
விடிந்ததும் திறக்குமென்ற
அர்த்தமற்ற நம்பிக்கையினிலே...

ஈரம் படிந்த கண்கள்
பஞ்சடைத்த காதுகள்
இஷ்டதெய்வத்தை கூப்பி கூப்பி
ஒடிந்துபோன கைகள்
கனவுகளும் விரோதமாகவே...

சூரியன் எழுப்புதோ என்னவோ
வெடிகுண்டுகளின் வெளிச்சம்
முகத்தில் அறைந்து...
ஆச்சரியம் - காலை !!!
வெற்று விடியல் ???

பின்பு அது
முற்றத்தில் தெரிக்குமோ
கொல்லையில் சிதறுமோ
நிசப்தமற்ற நிழல்களாய்
பொழுதுகள் நகர்கிறது...

பச்சை குழந்தைக்கு
பால்பசி எடுத்தால்
தெருவோரம் தேடியோடுகிறோம்
வெடிகுண்டு விழுங்கிசென்ற
குருதிகாயாத முலைகளை...

கடைசியில் பொறுமைகொன்று
திங்க... தூங்க... வழியற்று
ஒற்றை மூட்டையில்
மொத்த வீட்டையும் அடைத்துவிட்டு
புறப்படுகின்றோம் பயணம்...

புதிய மண்ணின் வாசனை
இருகரம் தாங்கி
விழிகள் கசிந்து
நூறுகோடி வேதனையோடு...
........................................................
அன்புடன் வாசிப்புபலகை
வரவேற்கிறது எங்களை
அகதிகள் முகாம்..................................

"வாயிருந்தால்" வெடிகுண்டு ?!

பச்சை குழந்தைகளும்
பாவாடை பெட்டைகளும்
கணவன்மார்களும்
கைதடி கிழவன் கிழவிகளும்
ஆடு மாடு கோழிகளும்
கருகி சாகின்றனவே
ஒருவேளை எனை கொணர்ந்தவன்
கண்களற்ற குருடனோ ???

பாதங்கள் தொட்டாலே
உரைத்து சொல்வேன்
யாருமற்ற தனிமை வேண்டுமென்று
வடித்து கொடுத்தவன்
கால்களில்லா நொண்டியோ ???

அனிச்சையாய் அமைதிகாத்து
அடங்கி போயிருப்பேன் !!!
உண்டாக்கியவன் என்னிடம் கேட்க
மறந்து தொலைத்தானே
காதுகள் தைத்துவிட
ஒருவேளை செவிடனுமோ ???

கொலை சிரிப்புடன்
என் கோழை சப்தத்தையும்
வெற்று வெளிச்சத்தையும்
தூரநின்று கண்டுகளிக்கிறானே ...

மனசாட்சியை
பிணங்களுக்கு விற்றுவிட்டானோ
என்போல் எரிந்து போகட்டுமென்று ??!

இலங்கையும், இறைவனும் ..


ஆறுகால பூசைகோயிலில்
மணியடிக்க ஆள்தேடி
வீதிவழி அலையும்
குருட்டுசாமி,
சிங்கள சிப்பாயொருவன்
பந்து விளையாட
பால்பைகளை
கிழித்து சென்றுவிட்டதறியாமல்
தமிழச்சி வயிற்றில்
வடியும் இரத்தம்
நக்க முயற்சித்து
தோற்று அழும்
குழந்தை கண்டு
கோபத்தில்
மணியும், பூசையும் மறந்து
சிங்களன்குடில் முகவரி
தேடி விரைகிறான் ..

மட்டையும், பந்தும் கிடைத்தாயிற்று
கூச்சலிடுகிறான்
குருட்டுசாமியின் கால்கள் முறித்து
கொடூரமாய் சிப்பாய் ..

கண்ணும், காலும் அற்றுபோன
சாமிக்கு வழிகாட்ட
பிணவாடை நுகர்ந்து
மூச்சிரைக்க ஓடிவருகிறான்
ஏழை தமிழனொருவன் .

Friday, July 24, 2009

வாழு.. வாழபழகு ... காதலோடு..,


என்ன சொல்லி சமாதானப்படுத்த
மீண்டும் மீண்டும்
உனது பெயரை மட்டுமே
எழுதி எழுதி பார்க்கும்
எனது காதலை...
அதிகாலை பூக்களின் புன்னகையுடன்
என் கைப்பிடித்து கேட்கின்றது பேனா
எவ்வளவு அழகு அவள் ?!
நேற்று என்னை பிரியும்பொழுதினில்
நினைத்துகொண்டேயிரு என்று
நீயளித்த முத்தங்களை காண்பித்தேன்
வெட்கபட்டுகொண்டு
மறுபடியும் காகிதங்களை
நனைக்க ஆயுத்தமாகி
சொல்லாமல் சொல்லிபோனது
வாழு.. வாழபழகு ... காதலோடு..,

நிர்பந்திக்கபட்டவைகளே...இழப்புகளும்.


பூக்கள் பறித்துவருகிறேனென்று
பாலை மணல்திசையில்
நகர்ந்துகொண்டிருந்த மனம்
கிழவனொருவன் வழியில் ஒற்றையாய்
கைத்தடியின் பாக்கியத்தோடு
சிறகுகள் விற்பனை செய்ய
அலைந்து கொண்டிருப்பதை கண்டு
சில நிமிடங்கள் நினைவு கூர்ந்தன...
ஞாபகம் தொலைய மறந்ததாய்
வெறுமை முற்றிலும்
கிழவனின் கைகளில் திணித்துவிட்டு
சிறகுகள் பற்றியவாறு
பட்டாம்பூச்சியின் வண்ணத்தை
லேசாய் ஒட்டிக்கொண்டு திரும்பின
செத்துபோன அம்மாவின்
முலைகளுக்கு காத்திருக்கும்
பிஞ்சு மழலையின் கன்னம் தடவ.

Thursday, July 23, 2009

கண்ணாடி

முகம் திருடிய குற்றத்திற்காக
ஆணி அறையப்பட்டு
சுவரில் சிறைபட்டுகொண்டதோ ?

மழலை...



உந்தன் சிறியதாய் துளிர்விட்ட
தலைமயிர்கள் தடவும் தருணங்கள்
அகராதியில் எங்கு புரட்டியும்
கிட்டவில்லை வார்த்தைகள்...

சின்னதாய் புருவங்கள் சுருக்கி
விழிகள் விலக்கி
நீ பார்க்கையில் தோன்றபெறுகிறது
அதிசயங்களெல்லாம் அதிசயங்களல்ல...

ஆயிரம் ஓவியங்கள்
ஒன்றாய் கூடியதுபோல்
காதுமடல்கள் உனது...

ஒட்டுமொத்த காற்றும்
ஏங்கி பிணைகின்றன
உன்னை சுவாசமுத்தமிட...

பனிக்கட்டி பற்கள் காட்டி
இத்தணுன்டு நீ சிரிக்கையில்
பூ பூக்கும் பாலைவனம்...

மொத்த விண்மீன்களின்
வெளிச்சம் விழுங்கிவிட்டதோ
விவரிக்க இயலா பிரகாசமாய்
உனது முகம்...

இதுவரை கிடைக்கப்பெறா ஆனந்தம்
உந்தன் பிஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தில்
உள்ளூர உணர்கிறேன்...

தத்தி தத்தி
தவழும் பஞ்சு பாதங்கள்
கடவுளை கோபிக்கும் மனம்
கண்கள் இரெண்டு போதாதே...

நீ மிரட்டும் செல்லதொந்தரவுகள்
உயிர் மறக்கிறேன்
புதியதாய் பிறக்கிறேன்...

உன்னோடு நான் வாழும்
அந்த பொழுதுகள்
நிலப்பாடில்லாமல்
விரிந்து கொண்டே செல்லும்
என் வானம்.....................

Wednesday, July 22, 2009

அரேபிய ராசாக்கள் II



மண்டையோட்டில் குழவிகூடு
நெற்றியில் பல்லிபடுக்கை
காதுகளில் தேனீக்கள்
தொண்டைகுழியில் மண்புழுக்கள்
மூக்குதுளையில் முதலைகள்
வயிற்றில் பாம்புபொந்து
கைநிறைய மணலள்ளி
கண்ணிலெரிந்து உலுப்பும்
வெறுமை கனவு ..

நடுராத்திரி தலைபிடித்து
உலகமே இருண்டதாய்
விரக்தியில் விரல்கள்மடக்கி
சுவரிலிரண்டு குத்து குத்தி ..

மனைவி மனதிலும்
மக(ள்)ன் புகைபடத்திலும்
தொலைபேசியில் காதலித்து
கழிவறையில் காமம் துப்பி
இளமையை பாலைக்கு விற்று
பணம் மட்டும் உண்டாக்கிகொண்டு
நாளையொருநாள் நாடுதிரும்புவோம்


வாய்நிறைய புன்னகையுடன்
வரவேற்க தயாராயிருங்கள் .

அரேபிய ராசாக்கள்

இதுதான் முதல்முறையா ...
இல்லை இதற்குமுன்
வேறுநாடு போயிருக்கியா ...
பராவாயில்லை எல்லாம் பழகிபோகும் ...
நரகவாசிகளின் ஆறுதலோடு
இனிதே துவங்கும் நரகவாழ்க்கை ..

அறைக்குள் நுழைந்தோமோ இல்லையோ
எங்கள் காலண்டர்களின் தேதிகள்
வெட்டுபட துவங்கும் ..

குளிரூட்டப்பட்ட அறையினில்
தூக்கமற்று நீளும் இரவுகள் ..

அலார கடிகாரத்தின் அச்சுறத்தலோடு
வேண்டாவெறுப்புடன் விதியேயென
விடியும் நாட்கள் ..

இரைச்சிதுண்டு தேயிலையில்
கிடந்தாலும் கிடக்ககூடும்
பார்த்து பக்குவமாய் குடிக்கணும் ..

காலவித்தியாசம், பணமதிப்பு
இன்னும் சில பல
அவசியமற்ற அத்யாவசிய கேள்விகள்...
சுக துக்க நிகழ்வுகள்
துவங்கி முடிந்துவிடும்
தொலைபேசி அழைப்புகளினூடே ..

தாமதமாய் வீடுசென்று
அப்பாவிடம் திட்டுவாங்கி
தூங்கும் இரவுகள் ..
அம்மா கொஞ்சி கெஞ்சி
விடியும் நாட்கள் ..
அக்கா குழந்தையின் புன்னகை
எதிர்வீட்டு பெண்ணுடனான ஈர்ப்பு
தெருமுக்கு டீகடை
நண்பர்களுடன் அரட்டை...............................

அடிக்கடி கனவுகள் கண்டு
கண்கள் கலங்கும்
நாடு திரும்பிவிட துடிக்கும் ..

பொருளாதாரம் பின்மண்டையில்தட்டி
ஞாபகபடுத்தும் குடும்ப வறுமையை ..

கனவுகள் கானல் நீராகி
ஒட்டகங்களின் காலடியில்
மிதிபட்டு சாகும் ..
சம்பளமும் கிடைக்கும்
சந்தோசம் விற்ற காசுகள்
சந்தோசமாய் வீடுபோய் சேரும் .

Tuesday, July 21, 2009

ப்பிரியமுள்ள அப்பாவுக்கு...












முயன்றவரை
முத்தங்கள் கேட்பாய்
இயன்றவரை
இனிப்புகள் வாங்குவேன்...

நான் அழுது அடம்பிடிக்கும்போதெல்லாம்
காகிதங்கள் பல
கப்பல்களாக மாறும் உன்னால்...

கடற்கரையோரமாய்
விரல்பிடித்து அழைத்து செல்வாய்
கைகள் உதறிவிட்டு
நுரைகளோடு விளையாட ஓடுவேன்...

அலைகளின் பயத்தில்
அளவு பொருந்தாத
உன் பாதங்களை
கட்டிக்கொள்வேன்...

நம்மைபோல சிநேகிதர்களோ
நதியும்
காலமும்?!...

நண்பர்கள் உலகறிய
உனைகடக்கும் எனக்கு
அதிகபட்ச தண்டனையாக
காந்திதாத்தா சிரிக்கும்
காகிதங்கள் சிலதருகிறாய்...

ஆசிரியருடனான நட்பு
காதலியுடனான கருத்துவேறுபாடு
இன்னும் இன்னும் நீண்டுகொண்டே
அழகாய் பகிர்ந்து கொள்கிறாய்...

நானும் இன்று
பணியாளனாக
தகப்பனாக...

எங்கு சுற்றியும்
எதோவொன்று உள்மனம் தேடிக்கொண்டு
உன்னிடமே திரும்ப செய்கிறது...

இன்றைய கவர்ச்சி யுகத்தில்
எனது மகனும்
மகனாகவே வளர
உன்னிடமே பணிக்கிறேன்
தொடர்ந்துகொள் உன் தோழமையை....!

அம்மாவை புனிதபடுத்துதல் ..














கொஞ்சம்
இரத்தமும்
கோடி யாகமும்
உருண்டை பிடிக்கப்பட்டு
தொட்டில் யாத்திரையினில் ..

முன்னொருநாளின்
பிறப்புறுப்பு வலியினை
எனது உச்சந்தலை தேய்த்து
மூலையில் அமர
துளி கண்ணீரும்
சிறு புன்னகையும்
ஒட்டிகொண்டவனாய் நான் ..

சுற்றி முற்றி
தேடதுவங்குகிகிறேன்
அப்பனின் கைப்பிடித்து
அம்மா ஓரோரத்தில் .