Sunday, July 21, 2013

நிசப்தத்தின் ஒலிமிதக்கின்ற நிசப்தத்தின் ஒலி பதட்டப்படுத்துகிறது
யாராவது கொலைவாள் எடுத்துவர
பிரார்த்திக்கிறேன்

கதவைத் தட்டுவது யாரோ?
திறந்து தானிருக்கிறது !

வேண்டுகோளுக்கு இணங்க
1. இயேசுபிரானே...

மரித்த மூன்றாம் நாள்
உயிர் மீண்டுவிட்டார்
பாவத்தின் ரட்சகன் !
உங்கள் பாவங்களுக்கு
என்னை மூழ்கடியுங்கள்
உயிர்த்தெழவெல்லாம் மாட்டேன்

***

2. முட்டாள் பிதா அழுகிறார்

கருணையும் பாவமும்
சமத்தராசில்
தொங்கும் நடைமுறையில்

குழந்தையைப் புணர்கிறார்களாம்
பாயில் உடைந்ததற்கு
தள்ளுவண்டிக்காரனைச் செருப்பால் அடிக்கிறார்களாம்
இயந்திரத்தின் பழுதிற்கு
முதலாளி
“தேவிடியாப் பயல்களே“ என்கிறானாம்
கூலிகளை

ஏன் அழுகிறாய் பரமபிதாவே ??

***

3. ஸ்தோத்திரம்

தூய ஆலயத்தில்
மெழுகுவர்த்தியை
ஒவ்வொருவராக 
ஒவ்வொருவராக 
ஒவ்வொருவராக வந்து ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்
வால்சன் பாதிரியார் அமர்ந்துவிட்டார்
மன்னிப்புக் கூண்டிற்கு
உன்னைத்தான் அனுப்பவேண்டும்
முதல் ஆளாக

எம் புனிதனே

*** 

ஆனந்தன் தற்கொலை செய்துகொண்டான்
எதற்காக ஆனந்தன் தற்கொலை செய்துகொண்டான்?

இன்று மதியம்
இருவருமே சேர்ந்துதான் உணவருந்தினோம்
கோல்டுபிளாக் புகைத்துக்கொண்டே
“ஆமென்” (டிவைன் காமெடி)
என்ற சமீபத்திய மலையாளப்படம் குறித்து
கையை அசைத்து அசைத்து
கதையை அவன் அவ்வளவு சிலாகித்துப் பேசியபோது
நான் நிஜமாகவே அத்தனை அத்தனை
சந்தோசத்திற்குள் சென்றிருந்தேன்

எதற்காக ஆனந்தன் தற்கொலை செய்துகொண்டான்?

மறுபடியும் புகைத்துக்கொண்டும் பேசிக்கொண்டும் 
அவன் வீடுவரை நடந்தேதான் சென்றோம்
நடுநடுவே
நீ சந்தோசமாக இருக்கிறாயா என்றான்
அவன் கையைப்பிடித்துக்கொண்டேன்
சிரித்தான், உன் சிரிப்பின் உருவம்
குழந்தைகளுக்குரியதுடா! என்றேன்
அதற்கும் சிரித்து வைத்தான்
அழகாய் இருந்தது

எதற்காக ஆனந்தன் தற்கொலை செய்துகொண்டான்?

வழியில் வாங்கிவந்த பால்பாக்கெட்டின் ஓரத்தை
சிசர் கொண்டு மென்மையாக கத்தரித்து
அவனது செல்லப்பூனைக்கு நிதானமாக ஊற்றிக்கொடுத்தான்
தனிமையை நெஞ்சுருக காதலிப்பதாகவும்
இன்னும் படிக்க வேண்டியப் புத்தகம்
நிறைய மீதம் இருப்பதாகவும் சொல்லிக்கொண்டான்
மீண்டும் பார்க்கலாமென்று
நானும் வீடு திரும்பிவிட்டேன்

எதற்காக ஆனந்தன் தற்கொலை செய்துகொண்டான்?

ஆனந்தன் அழைத்திருந்திருக்கிறான்
23 மிஸ்ட் கால்ஸ் கிடைக்கிறது
மகிழ்ச்சியின் களைப்பில்
நான் ஏன் இப்படித் தூங்கிப்போனேன்

ஆனந்தன்
எதற்காக தற்கொலை செய்துகொண்டான்?
மழை வலுவாகப்பெய்கிறது
இடுகாட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கிறேன்


ஆனந்தன் தற்கொலை செய்துகொண்டான்

Sunday, July 14, 2013

அரேபிய ராசாக்கள் 30சாமத்தில்
உனது ரோமதீர்த்த நினைவுகள் அடுக்கி
சுயம் இன்புறுகிறேன்


திருட்டுத்தனமாக
எனது படுக்கைஅறை
ஓவியத்தின் கண்கள் சுகித்துக்கொண்டிருப்பதாக
திடுக்கிட்ட
ஒரு கணம்
சோகமுற காட்சியளிக்கும்
அதன் அரேபிய இமைகளின் ஞாயம்
தரிசித்தது என்னை..

தனித்துவமாக உனக்கு எழுதிய இக்குறிப்பு
உயிர்ப்பித்த வெளிச்சம்
இப்பெரும்பாலையை மலர்வனமாக்குகிறது
பேரன்பே... 

சந்திக்கையில்
உன் மார் அமர்ந்து
நம் வெயில் தீர்க்கும்

அது

அறை எண் B-15 காலியாக இருக்கிறதுகுளிரில் சுருங்கிய குறி போல
துயரத்தின் கண்கள் மீதேறி
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது
தனித்த என்னை இந்த இரவு

பழகியிறாத குழந்தையிடமிருந்து
எளிதில் பெறமுடியாத முத்தத்தைப்போல
என் மீது நெளிகிறது இந்த இருப்பு

எதன் நகல் இந்த வெறுமை

இந்த எறும்பு
ஏன் என்னையே வெறிக்கிறது
நீண்ட நேரமாக

பின் ட்ராப் சைலன்ஸில்
அதிர்வுற்ற
அறை எண் B-15

யாராவது கடந்து வந்தீர்களா?

பாவத்தின் சம்பளம்சுகப்பிரசவ நேரத்து யோனியென
தாங்காத வலி
காட்டித்தருகிறது
தேநீர்கோப்பையின் அடியில்
நீ மீதம் வைத்துப்போன
குரோதம்

அப்பொழுதுதான் பிறந்த
குட்டிநாய் கண் திறப்பதையொத்து
பனிக்காலத்தில்
உனது பார்வையின் ரேகையிலேயே
விரியும் என் யோனியெங்கும்
பூனையின் ரோமங்கள் துளிர்த்திருப்பதை
சொல்லவும் வேண்டுமா ?

துரோகத்தின் வெயில் விழுந்து
வளரும்
பூச்செடி முன் நின்று
புன்னகைத்துக்கொண்டிருப்பதின்
திடம்
எங்கு கற்றாய் ?

உனது குரூர வெற்றியின்
விரல்கள் ஏந்தி
என்னை ஸ்பரிசி

மேலும்
விரைத்தக் குறிகொண்டு வன்புணர்

பிறகு

நசநசத்துச் செத்துப்போ

தனிமையின் நிர்வாணம்எனது தனிமையை குரூரமாக
விழுங்கிக்கொண்டிருக்கிறது
இந்த அறைக்கண்ணாடி.

அதன் நிர்வாணத்தை
பூனையின் ரோமங்களென
நான் ஸ்பரிசித்துக்கொண்டிருப்பது
அதற்கு ஒருபொழுதும் தெரியப்போவதில்லை.

ரகசியம்எனக்கு மட்டுமேத் தெரிந்த ரகசியத்தை
உன்னிடம் மாத்திரம் நம்பிச் சொல்கிறேன்

கண்ணீர் என்பது
சந்தோசத்தின் திறப்பு
அல்லது
துயரத்தைவிட்டு வெளியேறுதல்

கிறுக்கல் வரிசாத்தான் ருசித்த பைத்தியக்காரியின் முலைகளில்
முட்டாள் கவிஞனின் வாடை என்கிறது ஒரு வரி

சாத்தான் புணர்ந்து கைவிடப்பட்டப் பிறகே
பைத்தியக்காரி;
பைத்தியக்காரியின் முலைகளில்
புத்திசாலிக் கவிஞனின் வாடை என்கிறது மற்றொரு வரி

இரண்டும் இல்லை
புணரும் முன்பு
சாத்தான் கடவுளாகத்தானிருந்தான் என்கிறது
இன்னும் ஒரு கிறுக்கல் வரி

***வெள்ளி முளைத்த சாயும் அந்திவானில்
மீனென அலையும்
பறவை அவள் இமைகளுக்கடியில்
மழைக்குப் பிறகு
கூரையிலிருந்துச் சொட்டும்
துளிகளென நான்

பரிதவிப்பின் வழியெங்கிலும்என் பரிதவிப்பின் வழியெங்கிலும்
கொட்டி இறைக்கப்பட்டிருக்கிறது
பெரும் பதட்டத்தின் சிவந்தக் கண்கள்

உடைந்து தொங்கும் குரலில்
ஜீவன் மிச்சமிருக்கும்வரை
உன்னைத் தேடிக் கொண்டிருப்பேன்

பிறகு
பைத்தியக்கார அறையில்
உங்கள் நிம்மதியைப் பிடுங்கிகொண்டுத் திரியும்
கலங்கலானதொரு முகம்

***
தூரிகைகளுக்கு வானமே எல்லை என்னும் எனது ப்ரயித்தியேகப் பாடலலிருந்து துள்ளிக்குதித்து ஓடிவருகிறது முயல்குட்டி. வாஞ்சையோடு அதனைத் தடவிக் கொடுக்கிறேன். ஒரு நூற்றாண்டுக்கான வெளிச்சத்தை சர்வநிசாரமாக எனக்குள் பரப்பிய அது பின்பு எப்பொழுதுக்குமாக என்னுடனேயே சுகவாசியாகத் தூங்கிக்கொண்டது.

***என் எல்லா ஞாபகங்களிலும்
நிரம்ப நிரம்பத் துளிர்க்கும்
ஒற்றை ரோஜா நீ

சாஸ்தாங்கமாய் கும்பிட்டவாக்கில்
பெருமூச்செறிந்து
கேவலோடு மன்றாடுகிறேன்

உன் ஒரேஒரு சிறுஅசைவை தா

வாதையின் நிழல்உன் வானத்தில் தான் பறந்து கொண்டிருக்கிறேன்
என்கிறாய்
வலிக்க வலிக்க அன்னாந்துப் பார்க்கிறேன்

வானமே நீ எங்கே?!

துயரம் பருத்து வெடிக்கிறது நிலம்
இறங்குகிறேன் நான்
கண்கள் மட்டும் மேல் பார்த்தவாறு

சுடர்திசையெங்கும் வியாபிக்கிறது
ஒற்றை நட்சத்திரம்

நீ வந்து கொண்டிருக்கிறாய்

புணர்ச்சியின்போது உதிரும் முனகல்களென
என்னை இக்காற்று
துயர்ப்படுத்துகிறது


ஆமென்  

***சன்னிதானம் நிறைய நிறைய
ரோஜா மலர்களால் அலங்கரிக்கும்
உனது மெல்லிய குளிர்ந்தக் கரங்கள்
தொடும் முன்
தனிமையின் பிரசித்திப்பெற்ற சன்னிதானமாக
இருந்திருந்தது என் அகம் !

அப்பெருஞ்செயல் செய்துகாட்டிவிட்டு     
முத்தத்திற்கு மறுப்பு தெரிவித்து
முகத்தை அங்கும் இங்கும் திருப்பும்
குழந்தையைப்போல சிணுங்கிக்கொண்டிருக்கிறாய்
கொஞ்ச நேரமாய்

கிடைக்காத முத்தத்தின் ஈரத்தை

பருகிக்கொண்டிருக்கிறேன்..

***எனது நிழலைத் துரத்திவிட்டிருக்கிறேன்
மின்மினிப்பூச்சிகளின் வெளிச்சம் போன்ற ஒன்று
வந்து கொண்டிருக்கிறது உன்னிடம்

எனது கனவிலும்
தலைகோதிவிடுகிறாய்

உள்ளங்கையைக் கொடு
உன் நெஞ்சிலும்
என் நெஞ்சிலும்
மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளலாம்
  

***வருத்தப்படாதே மகனே
பிதா நானிருக்கிறேன்
அடித்தொண்டையிலிருந்து எம்பிக் குதிக்கிறது  

ஒரு பெண்ணின் குரல் 

பிறகுஒரு வசதிக்காக
அந்த மூடியைத் திறந்தேன்

அறையெங்கும் பறக்கிறது வானம்

மெல்ல மெல்ல
ஒவ்வொரு எழுத்தாய்
உன் பெயரை உச்சரிக்கிறேன்

முன்பனியென
மலர்ச்சியுடன் வந்தமர்கிறாய்...


திரை விழிகளை மூடிக்கொண்டது 

***துப்பாக்கியை நீட்டிக்கொண்டேயிரு நீ
ரவை நான்தான் தரவேண்டும்

நீ உன் துப்பாக்கியை நீட்டிக்கொண்டேயிரு 

தானாய்ச் சரியும் மரம்எச்சில் காதுகளுடைய உனதன்பை
இனி
எந்தக் கூட்டிற்கும் ஊனநடை பழகவிடாதபடி
உந்தன் துணைப்பறவையின்
நாக்கை அறுஅறுவென அறுப்பதற்கென்றே
பத்திரப்பட்டிருக்கிறது ஓர்மம்!

எங்கள் வீட்டு வரவேற்பறையில்
நீ கொட்டியிருந்த
பொய்க்குற்றச்சாட்டல்களோடுப்

படிந்திருக்கும் கண்ணீரின்
ஒரு சிறு துண்டை
பத்திரப்படுத்தியிருக்கிறேன் ஓர்மையில்

வரும் நாட்களில் 
அடர்த்தியான மழை இரவுக்கென
படுக்கையறையினுள்
நீங்கள் தயாராக முன்னெடுக்கும் உரையாடலில்
யதார்த்தத்தில் வந்துவிழும்
என் ஓர்மம்

நிதானமாக
என் விஷம் முறியும். 

தீக்குச்சிகாலாதி காலத்தின் ருசி நன்கறிந்துகொண்டு
உப்பை ஏன் மறக்கிறாய்

பிரியத்தின் பொருட்டு
எதிர்கொண்ட குறுஞ்செய்திகளில்
எத்தனை உயிர்ப்பு இருந்திருக்கிறது?

நீ

உன் கண்ணாடியைப் பார்த்து நில்

இட்லி சாம்பார்ஆ  
மட்டன் பிரியாணியா
நாங்கள் முடிவு செய்கிறோம்

தீக்குச்சி
ஒன்றே ஒன்று போதும்

ஆமென் 

ஆராதனா எனும் பேய் 50எங்கு திரும்பினாலும்
உனது முத்தமிடப்பட்டக் கண்கள்

பிரிவு என்பது வறுமை
பிரிவு என்பது பயம்
பிரிவு என்பது கண்ணீர்
பிரிவு என்பது வலி

ஆராதனா

ஜன்னல் தீண்டி விரல் அசைக்கும் மழையிடம்
நெஞ்சுக்கூடு விம்மச் சொல்லிக்கொள்கிறேன்
உனது முத்தமிடப்பட்டக் கண்கள்
எனது தானென்பதை

ஆராதனா உனது முத்தமிடப்பட்டக் கண்கள்
எங்கு திரும்பினாலும்

பிரிவு என்பது காதல்
பிரிவு என்பது காதல்   

அந்தி திரும்பும் பறவைகள்கண்களிலிருந்து பிரிய
மனமில்லாது
சுகித்துப் பிறந்திருக்கும்
சுனையொன்று

வாழ்ந்தஅந்த
நூறுகோடிக் கிழமைகளில்

தீராப்பிரியத்தின் அந்தி திரும்பும் பறவைகள்

என்று தானே துவங்கியது
பின்

என்று ஏன் முடிவுக்கு வருகிறது

***திரும்பக் கடக்கவேண்டுமென 
தொலைதூரத்திலிருந்து
சாத்தியமே அல்லாத
கனவுகளாய்
ஓயாது மொழிந்துக் கொள்கிறோம்


ஒருவர் நெஞ்சில் ஒருவர் முகம் பதித்து