Tuesday, April 30, 2013

ஜீவ நதி
ஜீவநதியில் தொலைந்த
ஜீவன்
எப்படித் திரும்பும்

மதிய கூடாரம்
துயரநதி ஒழிந்து
வெளிச்சக்கடல் தண்ணீர்
படரும்
இம்மதியக்கூடாரம்
என்ன செய்யும்
இனி 

உமக்குச் சிரிக்கத்தான் தோன்றுகிறது
இல்லையா
எம்பெருமாளே?

நிலாகாட்டில் கேணிமழை
வெண்நதி
ஆசுவாசமாக
கண்கள் இமை

நிலாகாட்டில் கேணிமழை
வெட்கம் குடிக்கும் மீன்குஞ்சு
ஓவியத்தில்
என்னையும் வரைய வேண்டுமா ஓவியன்
நான்

நட்சத்திர சுடரலிருந்து
ஒருவெயில் உதிரும்
முன்

 

இருப்பு
வழக்கமாக
தேவதைகள்
அழுவதில்லை என்கிறார்களே;

எனது
எல்லா நம்பிக்கையிலும்
வெயில் வடிகிறது

மூங்கில் வனம்
இந்த மூங்கில் வனத்திற்கு விஷம் ஏற்றியது யார் 
கல்லால் 
சபியுங்கள் 
என்னை 


Monday, April 29, 2013

***
பூ ஓன்று அழுகிறது
யூகத்தின் அடிப்படையில்
மகிழ்க

தப்பித்தல்

இருந்து இருந்து
தலைக்கு கீழே வானம் பறக்கிறது

கிழித்துவிட்டுப்
போகும் பறவையின் பெயர்
?
ம், என்ன என்கிறாய்
வலி பிரளயம் முறிகிறது.
நீயில்லாத நான்
நானானால்

தலைக்கு கீழே வானம் பறக்கிறது
இருந்து
இருந்து

***
நஞ்சுண்டக் குரங்கே
என்
மனசே...
இதென்ன
மாபெரும் ஞாபகக் கடலில்
ஒரு துளி தித்திப்பா?

கனம்
சந்தோசத்தின் திறவுகோலை
துயரத்தின் துவாரத்தில்
செருகி வைப்பவர்களுக்கு
பைத்தியக்காரன் தான் இவன்

பிறகு

யாரோ ஒருவர்
நெற்றிக்காசை
களவாடிச் செல்கையில்தான்
இந்த உடல்
சிறிது கன கனக்கிறது

***
என் இருப்பை மீறிய நிழலொன்று
தலைக்கு மேலே
நிலைகுத்தி நிற்கிறது
கவனித்தாயா
ரோஜாப்பூ கொண்டாட்டக்காரி  

நிகழவே நிகழப்போகாத சந்திப்பு
வாழ்க்கை
மிக மோசமான
இசைக்கலைஞன் மீட்டிய
வீணையின் தந்திக் கம்பிகளென
அதிர்கிறது

பெருங்காட்டுத் தீயெனப்
பதறும் இருப்பில்
பேரவலக் காத்திருப்பின்
நிகழவே நிகழப்போகாத
சந்திப்பு,
உயிரோடு விழுங்குகிறது
என் பெயரை
என் அசையா மௌனத்தை
என் உயிர் போலுள்ள
உயிரை

தெட் மீன்ஸ்..
வரும்படி அழைத்துவிட்டு
வாசலைச் சார்த்திவிடுதல்
பழக்கம்
நீங்கள் வரும்வரை
காத்திருக்கிறது
அவமானத்தின் புன்னகை

முதல் அலை
இன்று
அதன் முதல் அலையை
தவழ விட்டது
அம்மா என்ற அழுகுரலோடு

என் மீது தலை குத்தி
கால் நீட்டி உறங்கிய கடலொன்று

பரிசுத்த ஆவியின் பெயராலே
இன்னொருவனின் காலத்திற்குள்
எனது காதலை ஏன்
ஓட அனுமதித்தீர்கள் பிதாவே

உனக்கு பாவமன்னிப்பு வழங்க
நஞ்சு உயிர்ப்பவன் வருகிறான்

கூட்டிற்குள்ளா ஒழிந்திருக்கிறாய்

நல்லது
உச்சபட்ச வன்முறையை
ஆட்கொள்கிறாய்
நல்லது

அத்தனை வெறுமையையும்
என்னிடம் கொட்டிச்செல்கிறாய்
நல்லது

சிறுபிள்ளை என்ன செய்யும்
பாவம்..

நல்லது

(பாவம் நல்லது அல்ல)

அவளுக்கு ஏன் புரியவில்லை?
நல்லது

நமக்கு கிடைத்த
ஆகப்பெரிய பரிசுப்பொருள்
துரோகம்

நல்லது..

ஜீன்ஸை கழற்றி எறிந்துவிட்டு
சாரத்தைக் கட்டிக்கொண்டு உறங்கு
நல்லது

Saturday, April 27, 2013

ஆராதனா எனும் பேய் 45எனக்கு கனவுகளென்று
பெரிதாக ஒன்றுமில்லை

பெரிதினும் பெரிதைக் கேளென்கிறான்
ஒருவன்; இன்னமும்

கலங்கிய மனம்
பேசும் மௌனம்

வலிக்கிறதாயென்ன
அவ்வளவு?

இல்லாத இருப்பிற்கு
எத்தனை வழித்தடங்கள்  

கடல் கொள்ளா கை
முதல் பிறந்த தினம்
அன்பு
பெற்றதற்கு

கீறி

முக்கியமாக
உயிரோடு

கால்குலேசன் மிஸ்டேக்
குறிஅமுதென
சாஸ்தாங்கமாக
கழுவி பிளக்கிறது

பெருந்தோல்வியை முகரும்படி செய்யும்
உன் தனிமையின்
கணுக்காலினை

சிவந்த தூக்கின்
அறுந்த உடற்பந்தல்

பெய்ன்
குற்றத்தின் வித விதமான
நறுமணம்
நம்மால் தானா வீசப்படுகிறது?

சரி
நீ
உணவு உண்டாயா?

காத்திருக்கிறேன் எதற்காகவோ!

இதைவிட வேறென்ன எதிர்பார்க்கிறாய்

ஆமா
முட்டாள்தான் நான் (முக்கியம்)
நீயும் (கடந்து போக )

இங்கு
கருணைக்கு
இடமே இல்லை நண்பா
டா..
நிர்வாணத்தைப் பற்றி
என்ன யோசிப்பீர்கள் யென்ற
பெரிய கவலையொன்றும் எனக்கில்லை

நண்பா உன்னைப்போலவே நானும்

பைத்தியக்காரனாகவோ
முட்டாளாகவோ
மரிப்பதில்
உள்ள விருப்பத்தில்

உள்ளக் குறைப்பாடு
தொட்டுப் பேச

மன்னித்துக்கொள்ளேன்
என்னோடு வா
நீயாகவேனும்

ஆராதனா எனும் பேய் 44இதைவிட
அழகான கவிதை ?

ஆராதனா...

"ம்" யெனும்
உனது
கண்ணுயர்த்தலில்,

தோற்றுப்போனவனின்
ரணம்
மயிலிறகு

சப்தமாகச் சிரிக்கவும்அன்பின் இசை
பற்றியது..

அதர்மம் இரைச்சல் .

அடையாளம் தெரிந்தக் கடலின்
அடையாளம் தெரியாத பிணத்தின்
கதையல்ல
இது

என்று துவங்கும் கவிதை
உயிர்க்கூடு பற்றி எரிகிறது செம்மீனே
முதல் முத்தம்
ஒன்று கண்ட கனவில்

என்று முடியும் நிழல்
என்று துவங்கும் கவிதை

உனக்கு வேண்டுமா?
வறண்டு
போன என் கண்களைப்
பிடுங்கி எறிந்துவிட்டு
யாருமறியாத மாத்திரத்தில்
செயற்கை கண்களைப் பொருத்தலாமென்றிருக்கிறேன்

மேலும்
அதிலிருந்து சுரக்கும்
ஒரு குவளை வன்மத்தை
முதலில்
அம்மா
உன் மாரில் வீசக்கூடும் நான்.

பிறகு
அதே நாள்
எனது
மரித்தல் செயற்கையாக நிகழும்.

தற்கணம்
இனிப்புக்கூட்டி
ஒரு டம்ளர் தேநீர் பருகப்போகிறேன்.


ஆராதனா எனும் பேய் 43

கொட்டும் இம்மழைநாளில்
எப்படியுன்னைக்
கரை சேர்ப்பேனென்று
ஏன் வருந்துகிறாய்
ஆராதனா?


வீழ்வேனென்று நினைத்
தாயோ?


கறையேறாப் புரையேறிப்
படியும்
இந்நிழல்
மொழி
என் இறுதி நாட்களைக்
கொண்டாட
என் ஒருவனைப் போல்
வருபவன்
நானென்றேன்,

தூக்கி வாரிப்போட்டதாகச்
சொல்பவர்களிடம்
ஒப்படைப்பது
அதுஅதன் வேலை;

இனி,
கொஞ்சம் கண்ணீர்
நிறைய சூதாட்டம்

முத்தம் வேண்டும் அம்மா
உலகத்தின்
எல்லா வெயிலும்
என் மீது படர்கிறது நண்பா

யாரையாவது கூட்டிவந்து
ஞாயிற்றுக்கிழமை ஆடுகளைப்போல
அறுக்கச் சொல்லேன்
என் கழுத்தை

எனக்கு
இப்பொழுது முத்தம் வேண்டும் அம்மா

ப்ளீஸ் "உச்" கொட்டாதீர்கள்..
செத்துப்போனக் குழந்தையை
மடியில் கிடத்தி அழும்
இந்த தாயைக்
கொன்றால்தான் என்ன?

அவ்வளவு பெரிய குற்றமா

காதலியை
விபச்சாரவிடுதியில்
தள்ளிவிடும்

இச்சிறு உலகில்.

தத்வார்த்த விசாரணையொன்றும்
இக்கவிஞனுக்குத் தெரியாது

"உச்" கொட்டாதீர்கள்..
ப்ளீஸ்


பிரகாசிக்கும் துயரம்
துள்ளும் டால்பின்களைக் கண்களில் வென்று
புன்னகை ஒன்றைப் பரிசளித்திருந்தாய்

தாயின் முதல் சுகப்பிரசவ வலியென
ரீங்கரிக்கிறது
திறக்கப்பட்ட ஜன்னல்களினூடே
மின்னிச் சிலிர்க்கும்
பனி

பேரலை முழங்கும் நமது இருப்பில்
வெண்சங்கினை ஒத்துப் பிரகாசிக்கும்
இத்துயரத்திற்கு
மரணம் மட்டும் ஒருபோதுமில்லையெனச்
சுற்றிச் சுழல்கிறது
நாளின் கடிகாரம்

நன்றி சொல்வனம்.காம்


நிலைத் தகவல்
நிறம் அணைந்த குதிரையின்
மூக்கில் சொட்டிக்கொண்டிருக்கும்

வியர்வையை..

மழையில் நனையவிடும் உனதன்பிற்கு
முன்

குற்றத்தின் நறுமணம் வீசுவேனென்றால்

நீங்கள் எறியக்கூடும்
நிரோத்கள் பிளக்ஸ் செய்யப்படும்
கழிவறைப் போலென்னை


ஆராதனா எனும் பேய் 42
இந்த மழையும்
இந்த நாளும்
தொடர்ந்திருத்தல்
நானில்லாதபோதும் சாத்தியப்படத்தான்
இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் எனக்குத் தெரியவில்லை

குமிழ்கள் காற்றில் அறைபடுவதென
உதிர்ந்துக்கொண்டிருக்கும்
லப்டப் லப்டப் இதயஒலியின் இறுதி
கண்ணில் நீர் வழிந்த
உனது போன நிமிடமே
உடைந்து போய்விட்டது
ஆராதனா

ஒரு வறட்டுப் புன்னகையோடு
எழுந்து போகலாம்
வந்தவர்கள்

தாழக்கிடக்கும் உனது சேலையை
இடுப்பில் தூக்கி
முடிந்துவிட்டு
தண்ணீர் விட்டுக் கழுவு
பூக்கள் சிதறிக் கிடக்கும்
வரவேற்பறையை.

ராணி புத்தி ஸ்வாதீனம் அற்றுப்போனது இப்படித்தான்
குகையினுள் அமர்ந்திருந்தேன்
எங்கிருந்தோ வந்தாய்
வெளிச்சம் வேண்டி சிறிது தீ பற்றவைத்தாய்
இதமாயிருந்தது கதகதப்பு
இந்நாள்வரை தான்மட்டுமே இவ்வனத்தினுள்
வாழ்ந்துக்கொண்டிருப்பவனென நினைத்திருந்தேன் என்றேன்
கோபத்தின் சாயலுடன்

உனக்குத் தெரியுமா
நீ இங்கு வந்தடைந்தது
ஒருஉக்கிரமான கோடை நாளென்கிறாய்
மேலும்
நீ உள்நுழைய வாசலைத் திறந்தவளே
தான்தானென்கிறாய்
எந்தச் சலனமுமின்றி
எந்தக் கௌரவமும் இன்றி
நெடுநாளாய் இங்கிருக்கும் ராணியாகிய நீ

கதகதப்பும் வெளிச்சமும் புணர்ந்து சுடர்ந்திருந்த தீ
பெரும் பிரகாசத்துடன்
வனம் முழுதும் ததும்பியது

என்னை அது ராஜாவுக்குரிய அலங்காரத்துடன்
கொண்டாட்டத்துடன்
கர்வத்துடன்
நதி குளிக்கக் கரம்பிடித்து அழைத்துச் சென்றது
சுழலில் சிக்கி மரித்த ராஜாவின் சடலம் தேடி
ஏழேழு ஜென்மமாய் அலையும் வனத்தின் மீதுதான்
இப்பொழுது புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்
நீங்கள்

***

நன்றி கல்கி இதழ் ( 21/ஏப்ரல்/2013 )சற்று முன் பூத்த ஆயுளுக்குமான நிலம்விருப்பக் கூட்டிலிருந்து
வேட்கைப் புள்ளிக்குள்
கடற்கரைத் தடங்கள் போலல்லாது
பாதங்கள் நகர்கின்றன,
பெரும் சவாலாகவும்
அதிபயங்கரத் திகிலாகவும்

போதையும் அல்லாத மாம்சமும் அல்லாத
உன்னை எதிர்கொள்வதில் எனக்கிருக்கும்
அதிகச் சிரத்தையோடு கூடிய
மேலதிக கவனப்பிசகுத் துளியும் அற்று
என்னைக் கையாளும் முறையினை
மிக லாவகமாய் அறிந்து வைத்திருக்கிறாய்

இரவும் அல்லாத பகலும் அல்லாததொரு வெளியிலிருந்து
மெள்ள மெள்ள அவிழ்ந்து கொண்டிருக்கிறேன்

நன்றி சொல்வனம்.காம்