Saturday, July 25, 2009

இலங்கையும், இறைவனும் ..


ஆறுகால பூசைகோயிலில்
மணியடிக்க ஆள்தேடி
வீதிவழி அலையும்
குருட்டுசாமி,
சிங்கள சிப்பாயொருவன்
பந்து விளையாட
பால்பைகளை
கிழித்து சென்றுவிட்டதறியாமல்
தமிழச்சி வயிற்றில்
வடியும் இரத்தம்
நக்க முயற்சித்து
தோற்று அழும்
குழந்தை கண்டு
கோபத்தில்
மணியும், பூசையும் மறந்து
சிங்களன்குடில் முகவரி
தேடி விரைகிறான் ..

மட்டையும், பந்தும் கிடைத்தாயிற்று
கூச்சலிடுகிறான்
குருட்டுசாமியின் கால்கள் முறித்து
கொடூரமாய் சிப்பாய் ..

கண்ணும், காலும் அற்றுபோன
சாமிக்கு வழிகாட்ட
பிணவாடை நுகர்ந்து
மூச்சிரைக்க ஓடிவருகிறான்
ஏழை தமிழனொருவன் .

3 comments:

முடிவிலி said...

அருமை.. வலிகளை சொல்லி .. கடவுளை பரிகசிக்கும் உங்கள் கவிதை., கடவுளுக்கும் வலிகளை பரிசாக தந்திருக்க க்கூடும் //

Unknown said...

ம்..தந்திருக்கலாம்.. அவனும் கொஞ்சமாவது வலியை அனுபவிக்கட்டும் இந்த கவிதையின் வாயிலாக..

நன்றி ஷங்கர்..

Siva Mathusoothanan said...

இந்த உன் கற்பனையின் சத்தம் குமுறல்... பங்காளிக்கான ஒப்பாரி...