Saturday, September 5, 2009

முலைகள்..


கல்லூரி வளாகத்தில்
எட்டோ பத்தோ
கை கால்கள்
கூட்டு சேர்ந்துகொண்டு
மார்க் போடுகிறது ..

நாளையோ மறுநாளோ
குழந்தையின் பசிக்கு காத்திருக்கும்
பால்பீச்சும் முலைகள்
வலியை கோபத்தை
எச்சில் தின்றுதீர்க்க
முயன்று தோற்கிறது..

வெட்டி விவாதம்
நீளும் விதண்டாவாதம்
எதைகொண்டு அடிக்க இவ்இளைஞர்களை..?

எரிந்து தீர்வார்கள்..,
இருநிமிடங்கள்
அம்மாவின் கண்களை
உற்றுநோக்க சொல்லலாமா..?

2 comments:

முடிவிலி said...

அருமை ...நண்பா ....... முலைகள் என்ற தலைப்பெடுத்து பெண்களை கிண்டல் செய்யும் போக்கை எதிர்த்து இருக்கிறாய்.. நல்லது கவிதையில் சொல்ல வந்ததை சொல்லி விட்டாய் ... அழகு ...

ஆனால்.. இதற்க்கு இந்த தலைப்பு தேவையா .? முலைகளை குறித்த ஆண் பார்வை[ காட்சி/ காம பொருள்.. பால் கொடுக்கும் சாதனம் ] யை சொல்கிறது . வேறொன்றும் இல்லை ...

ஆறுமுகம் முருகேசன் said...

ம்...நன்றி..