Monday, March 15, 2010

முழு நீண்ட காத்திருப்பு


இசைக்கும்
இரைச்சலுக்குமான
மிகமெல்லிய வெளியில்,
விட்டுக்கொடுத்தலுக்கும்
விட்டு விலகுவதற்குமான
உடன்படிக்கைகள் கையெழுத்தாகின்றன

நேசங்களின்
பொன்முட்டைகள் அறுபட்டு,
இறைந்து ஊர்கிறது
காற்றெங்கும் புரிதலின் தோல்வி

இயலாமையில் இலைகள்,
காய்ந்து சருகாகி
தெருவெங்கும் சுற்றி நடப்பதுபோல்
உபயோகமில்லாத நினைவுகளோடு
வெறுமனே நகர்கிறேன்

வினவுதலில்லாத பதில்களிடம்
தோற்றுப்போகும் வினாக்களிடமிருந்து
புரிதலை எப்பொழுதுமே
ஒற்றைப்படுத்த,
காலம் தயாராகவே!!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4801:2010-03-15-10-02-54&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று.. 

6 comments:

நேசமித்ரன் said...

//இயலாமையில் இலைகள்,
காய்ந்து சருகாகி
தெருவெங்கும் சுற்றி நடப்பதுபோல்//

இது இதுதான் ஆறுமுகம் முருகேசன் உங்களிடம் எதிர்பார்ப்பது

இளவட்டம் said...

hahaha....super aru....

கவிதன் said...

இயலாமையில் இலைகள்,
காய்ந்து சருகாகி
தெருவெங்கும் சுற்றி நடப்பதுபோல்
உபயோகமில்லாத நினைவுகளோடு
வெறுமனே நகர்கிறேன்

அருமை!!!

Unknown said...

நன்றி நேசமித்ரன்

Unknown said...

நன்றி வேலன்

Unknown said...

நன்றி கார்த்திக்