Tuesday, March 23, 2010

ஆகாயத்தில் பொம்மைகள் !!


விளக்கணைக்காமல் உறங்கும் வானம் !
நட்சத்திரங்கள்னாலே ரசனைக்கும் ரசிக்கவும் தானே ?
இப்போ என்ன ஸ்பெஷல்..??
இது "ஆகாயத்தில் பொம்மைகள்" யென்பதற்கான நட்சத்திரங்கள்!!
சரி, அழைத்து வரப்போவது யார் ?
ஆணா - பெண்ணா ?
ஷ்ஷ்.. அவள் கனவிலிருப்பாள்
நானே நகர்கிறேன்..

ஆமா, அவள் எத்தனை முறை கெஞ்சியிருப்பாள் ?
எத்தனைமுறை ??
ப்ச்.. துல்லியமாக ஞாபகமில்லை,
பட்.. எழுதவும் எதுவும் தனித்து தேர்ந்தெடுப்பதில்லை அவளை,
அதனாலோ என்னவோ எழுதவுமில்லை !!

வானத்தில் பத்திரப்படுத்திய
கை நிறைய விளக்குகளோடு
வீடு சென்றுகொண்டிருக்கிறேன் இப்போ..

என்ன ஆச்சர்யம்!!
பயத்திற்கு மாறாக, இம்முறை அவளும்
விழி நிறைய வின்மீன்களை பெற்று வைத்திருக்கிறாள்!
ஆமாங்க, புது கல்யாணம்,
அதுவும் காதல் கல்யாணம்..
முன்னெப்பொழுதும் அவளிடம்
பட்டாம்பூச்சிகளையோ..
ஹைகூ ஜன்னல் மழையையோ தான்
பரிசாக தந்திருக்கிறேன்.
இம்முறை, பொம்மை தரலாமென நெளிகிறேன்.......
அவளும் இறுக்கமாக கட்டிக்கொள்கிறாள்!

7 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//விளக்கணைக்காமல் உறங்கும் வானம் !//

முதல் வரியே தேர்ந்த கவிஞர் என்பதை காட்டுகிறது வாழ்த்துகள்...

Nafil said...

வீடு சென்றுகொண்டிருக்கிறேன் 'இப்போ'..


அது என்ன 'இப்போ' நியாயம் தானா? எனக்கு என்னமோ 'இப்பொழுது'ன்னு இருந்தால் தேவலாம்னு தோணுது.., பரிசீலனை செய்ங்க சார்...,

Nafil said...

என்ன ஆச்சர்யம்!!
பயத்திற்கு மாறாக, இம்முறை அவளும்
விழி நிறைய வின்மீன்களை பெற்று வைத்திருக்கிறாள்!

very very nice...,

கவிதன் said...

excellent Aarumugam!

Unknown said...

நன்றி பிரியமுடன்...வசந்த்

Unknown said...

நன்றி நபில்

சரிங்க சார்.. :)

Unknown said...

நன்றி கார்த்திக் :)