Tuesday, May 4, 2010

பனிக்காடு.



நிலவறையில்
கடலுறங்குவதாக
எழுதிச்செல்லும்போது
கவிதையொன்றின்
சுவாசம் முட்டுகிறது !

இரண்டாம் பத்தி
இப்படிப்பிரிபடுகிறது
குளக்கரையில்
நிலவு துயிலுறுமாம் !

ஜீவநடமாட்டமேதுமில்லா
விழிகளிரண்டின்
மேற்பாகமுள்ள நெற்றிப்பொட்டில்
மாறி மாறி மீள்கிறது
மேகக்கூட்டம் !

மெல்லப் பனிவிலக்கி
அதிகாலைச்சூரியன்
ஆளெழுப்பும் பணியினை
நித்தமும் செவ்வனே செய்வதாகி
நிர்ப்பந்திக்கிறான் கடவுள் !

சாத்தானைச் சந்திக்கப்
புறப்படுகிறேன்!
யாரங்கே..?
திறவ கோலுங்கள்.. 
அவசரமாக வழி தேவைப்படுகிறதெனக்கு...

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2864

நன்றி யிர்மை.

7 comments:

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது ... வாழ்த்துக்கள்...

ரசிகன்! said...

amazing!!!!!!!!!!!!!!11

ஜெனோவா said...

மிக அருமையான கவிதைகளை கொண்டுள்ளது இத்தளம் , மன்னியுங்கள் நான் தான் வர தாமதப் படுத்திவிட்டேன் !
தொடர்வோம் நண்பரே , இரவு அறைக்கு முழுமையும் வாசிக்கப் படவேண்டும் !
வாழ்த்துக்கள் !

Unknown said...

நன்றி கமலேஷ்..

Unknown said...

நன்றி ரசிகன்..

Unknown said...

ம்..உங்கள் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஜெனோவா..
:)

ஜெயசீலன் said...

Spectacular