எச்சில் காதுகளுடைய உனதன்பை
இனி
எந்தக் கூட்டிற்கும் ஊனநடை பழகவிடாதபடி
உந்தன் துணைப்பறவையின்
நாக்கை அறுஅறுவென அறுப்பதற்கென்றே
பத்திரப்பட்டிருக்கிறது ஓர்மம்!
எங்கள் வீட்டு வரவேற்பறையில்
நீ கொட்டியிருந்த
பொய்க்குற்றச்சாட்டல்களோடுப்
படிந்திருக்கும் கண்ணீரின்
ஒரு சிறு துண்டை
பத்திரப்படுத்தியிருக்கிறேன் ஓர்மையில்
வரும் நாட்களில்
அடர்த்தியான மழை இரவுக்கென
படுக்கையறையினுள்
நீங்கள் தயாராக முன்னெடுக்கும் உரையாடலில்
யதார்த்தத்தில் வந்துவிழும்
என் ஓர்மம்
நிதானமாக
என் விஷம் முறியும்.
No comments:
Post a Comment