Showing posts with label வா(வ)சிக்காதீங்க. Show all posts
Showing posts with label வா(வ)சிக்காதீங்க. Show all posts

Friday, April 2, 2010

தனிமை விழுங்கும் தோல்வி.!

"யாருமில்லா இடமொன்றில்
ஓவென்று அழுவதாய்" 
தொடங்கும் பாடலொன்றிலிருந்து
நைசாக நழுவுவதென
வேகமாக வந்துவிடுகிறார்கள்..

நெடுநேரம் பேசுகிறார்கள்,
நட்பின் கை கொண்டு
காதலின் தோள் பற்றியேறி
காமத்தின் கதவு முன்நின்று
ஏனோ உள்செல்ல தயங்கி
மௌனமாக திரும்பி விடுகிறார்கள்.!

பின்னொரு நாள்
சம்மதமேதுமில்லாத
நம்பிக்கை மனிதர்கள்
நைசாக தட்டிவிடுகின்றனர், 
ஒலிக்கத்துவங்குகிறது..
"யாருமில்லா இடமொன்றிலென துவங்கும் பாடலொன்று.."  


http://www.vaarppu.com/view/2133/ 
நன்றி வார்ப்பு..

Friday, March 26, 2010

மரணத்தின் வெக்கையிலிருவர் !

குறிப்பு,
நிகழ்வென்றால் நிகழ்வு,
கவிதையென்றால் கவிதை .

இருவர் பேசுகிறார்கள்,
நினைவுகள் பூத்திருக்கும்
பூந்தோட்டங்களை நாடிச்செல்வதில்லை
மாலைவேளைகளும் கொடுமனமும்.
வரிகளெதுவும் இருந்துவிடாத
மொழியில்லா இசையையே
பற்றிப்பிடித்திருக்கிறது இரவுகள்.
மழலைகளை கடக்கநேரும் பொழுதுகள் மட்டும்
எத்தனை தடுத்தும்
நம்மையும் கடந்துவிட நேர்கிறது.

காதல்வலியில் யாரோ அவர்கள்
எழுத மறந்ததெல்லாம்
யாருக்காகவோ ஞாபகப்படுத்தப்படுகிறது!

Thursday, March 18, 2010

பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட தோல்வி !



மற்றவைகளிலடங்கும் போதையெனில்,
காகிதப்பூவையோ
கழிவறையையோ
அண்டியிருக்கலாம்..

வெங்காயக்காதல்,
கண்ணீரிடம்தான் மடலாடல்,
மீதிவரிகளுக்கு..
அவளிடம் விருப்பமேதும்
அறிகுறியில்லாபட்சத்தில்
முடித்து வைக்கிறேன்
தோல்வியின் புள்ளியை.!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31003194&format=html

நன்றி திண்ணை..