Tuesday, May 29, 2012

****



எல்லா மழையும்
எல்லா நேரங்களிலும்
புரிந்து கொள்வதில்லை
ஒரு சில கூடல் அந்திகளை

உடையாத வெண்ணிலா




கலவுதலின் மரணத்தில் நின்று
முத்தத்தை முத்தமாய்
பழகு என்றேன்

பைத்தியக் கவிதை
எழுதுகிறாய்!

Sunday, May 27, 2012

ஆராதனா எனும் பேய் 14







எனக்கு
தூரத் தெரியும் நட்சத்திரங்களை
அள்ளிக் கொண்டு வந்தாய்

இன்னும் நின்றுக் கொண்டிருக்கிறேன்
அதே முக நிலவில்

முத்தம் கொடு
கரம் பற்று

பின்,

கொல்
அல்லது சாகு

****







பிரியத்தின் நகக் கீறல்களாய்
பழக்குகிறாய் அன்பை
வலி மறுத்து

இது என் கவிதை!







கருணையற்ற இந்த இரவின் கதவுகள்
மூச்சு முட்டலின்
திறவுகோல் முன்
தோற்று ஒடுங்கும் பொழுது

இல்லாமல் போவதின் விருப்பம்
அபத்தக் கவிதையில்
ஒழுகும்

Saturday, May 26, 2012

ஆமென்






ஆயுள் தீர்ந்த வாழ்வென
மிஞ்சி நிற்கிறது
நீ உதிர்ந்தடங்கிய
என் இருத்தல்

நன்றி உயிரோசை


ஆக்கிரமிப்பு






"டப்" எனும் ஒலிக்கு
கலைந்து நகரும்
கூட்டப்பறவைகளாய்

சொற்கள் கட்டவிழ்ந்து
பூக்களை உதிர்க்கிறது
உனது வருகையால்
உனது வருகையில்!

நன்றி உயிரோசை


உன்னளவு அன்பை..







உன்னை அன்பில் கொலை செய்தலென்பது
மிகவும் பிடித்திருப்பதா 
அத்தனை நிதானமாய்
அத்தனை யதார்த்தமாய்
சொல்லிவிட்டுப் போய்விட்டாய்

நானோ
மீளாவரிகளைத் தேடித் தேடி
திசை தப்பிய பறவையாய் அலைகிறேன்
நீ தரும் அன்பின்
ஆத்மார்த்த வலிக்குப் பரிசளிக்க

நன்றி உயிரோசை


சொல்







புத்தரும் சித்தரும் துயில் களைந்து
ஓடிய வழியில் தான்
நாய் குரைக்கிறது
பூனையின் கண்களை உறக்கம் சூழ்கிறது

நீங்கள் ஆசையை
துறப்பதும்
கவ்வுவதும்
பற்றி வலியுறுத்த
நான் யார்? 

Friday, May 25, 2012

******





வியாபித்தலின் விதி அறிந்து
அழைத்து நகர்கிறாய்
சலனமற்றதொரு எளிய அன்பை

Monday, May 21, 2012

தியதி எதற்கு







நானும் அங்குதான் இருந்தேன்
மெழுகுவர்த்திக்குப் பதில்
முத்துக்குமார்களின் கைகளோடு
கடலைப் பார்த்த வண்ணம்

ரௌத்திரம்








நீரை எரி
தீயை உண்
ஞாபகத்தைக் கொல்

Sunday, May 20, 2012

ஆராதனா எனும் பேய் 13







வற்றிய நீர்ப்பரப்பில்
நிரம்பத் தேடும்
தாகமென
வரைய முயன்று முயன்று
தோற்றுக்கொண்டிருக்கிறேன்
உன்னை 

வெறுமென








இக்குறுகிய ஒற்றை வானத்தின்
எதிர் எதிர் திசை பறவையாக இருப்பதுதான்
இருப்பை உறுதிப்படுத்தும் எனில்
இருந்துவிட்டுப் போவோம்
தயங்காதே..
வா

Friday, May 18, 2012

*******







மரணம் தரும் அதீத பயமாய்
நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்
திமிர் முற்றிய மௌனத்தை

பனிக்காடு!







இளம் மழைக்காலையொன்றின்

ஒரு புறம் நீயும்
கோடைநேரச் சாலையொன்றின்
ஒரு புறம் நானும்

நிரம்ப நின்று கொண்டு
பதட்டப்படுத்திக் கொண்டிருக்கிறோம்
அந்தரங்கமாய் இறுகப் பிணைந்திருக்கும்
வேர்களின் நுனியை!




நன்றி மலைகள்.காம்




இருப்பின் இன்மை!







உனது இருப்பை
உறுதிப்படுத்தும் செய்கையென
புறந்தள்ளப்படும் இச்சொற்கள் யாவும்
அன்பை பரிசீலப்பதாகவே..

யாவற்றிற்குமென நீ பிடித்திருக்கும் 
மௌன துர்தேவதையை
எனது உயிர்த்தாவரத்திற்கு
உண்ணக்கொடு

எரியும் வனம் அணைய

உதடுகளைப் புணரலாம்
வந்துவிடு,

இல்லை இன்னும்
அதிக அவகாசமொன்றும் நம்மிடம்




நன்றி மலைகள்.காம்

Wednesday, May 16, 2012

******







நீர் மறுக்கப்பட்ட மீனாய்
துள்ளிச் சாகிறது
பிரிவின் அடர்ந்த மனம்

Tuesday, May 15, 2012

எனக்கும் அந்த ஓர் இரவு..!



மேலும்
எனது இந்த தற்கொலை முடிவுக்கு
யாரும் காரணமல்ல?
என்று முடிந்திருந்த
கவிதைக்கு
தலைப்பு இடப்படாமல் இருந்தது
சற்று ஆச்சர்யத்தையும், பின்
சிறிது அதிர்ச்சியையும்
சிறிது குழப்பத்தையும் 
சிறிது அச்சத்தையும்
தருவதாக நீண்டது
எனக்கும் அந்த ஓர் இரவு..! 

ஞாபக தீ






இந்த நொடியை அனாயாசமாய்
கடந்து கொண்டிருக்கிறது
யாரோ ஒருவனின்
தற்கொலை முடிவின் விளைவறியாத
வாதைக்காற்று

வேறென்ன சொல்ல
உனது நினைவுகளோடு கோபப்படும்
அவனிடம்! 

நன்றி உயிரோசை


ஆம்



நீ தேவதையாகக் கொல்கிறாய்
நான் சாத்தானாகிச் சாகிறேன்

மேலும்
நீ அன்பை வலிக்க வலிக்கத் தருகிறாய்
நான் வலியை அன்பெனத் திணிக்கிறேன்

மேலும்
நீ சுவாசத்தை என்னுள் நீட்டிக்கிறாய்
நான் மூச்சுமுட்டலை அத்தனை இலகுவாக ஏற்றுக்கொள்ள
வைக்கிறேன்

மேலும்
நீ ஒரு சொல்லை உடைத்து நூறு கவிதை சமர்ப்பிக்கிறாய்
நான் நூறு கவிதை தின்று ஒரு சொல் தேடுகிறேன்

மேலும்
நீ இருக்கிறாய்..
நான் இருப்பதுபோல் இருக்கிறேன்.. !

மேலும் 
நீ தேவதையாகவே கொல்கிறாய்
நான் சாத்தானாகவே சாகிறேன்

நன்றி உயிரோசை

Thursday, May 10, 2012

ஆராதனா எனும் பேய் 12




நேற்றிரவு சரியாக 2.15 மணி இருக்கும்
ஞாபகம் இருக்கிறதா?
உன்னைக் கொலை செய்திருந்தேன்

குருதி வழிந்த உன் யோனியின்
நறுமணத்தில் மெய்மறந்து அயர்ந்திருப்பேன்
இதனை அவர்கள் மொழி பெயர்க்கும் தருணம்

நீ இங்கே வா
உனது தலை மயிர்க்கற்றைக்குள்
விரல்கள் மொத்தம் விரித்து
புது இசை பரப்ப வேண்டும்

நீ இங்கே வா
உனது கண்களிலும் காதோரங்களிலும்
மென்முத்தம் பதிய வேண்டும்

நீ இங்கே வா
உனது சிறு முலைகளை
உதடுகள் உப்பிக் கடித்துண்ண வேண்டும்

நீ இங்கே வா
உனது தொப்புளில்
முகம் சரிபார்க்க வேண்டும்

நீ இங்கே வா
உன்னை இன்னொரு முறை
கொல்ல வேண்டும்
அல்லது
புணர வேண்டும்

நீ இங்கே வா
உனது கால்களின் பெருவிரலை
வாஞ்சையுடன் நாய் நக்குவதைப்போல
நக்கி நக்கிச் சாகவேண்டும்

எங்கு தேடியும் இல்லை நீ
நீ இங்கே வா

Wednesday, May 9, 2012

காதல் நதி




பனித் துளிகளாய் ஒட்டியிருக்கும் இலைக்கு
முத்தமிடும் சூரியனாய் 
கொஞ்சல் காட்டும் உன்னை
எப்படிப் பிரதியாக்குவேன்
வனம் ஒழுகும் இக்காதல் நதிக்கு?!



நன்றி உயிரோசை  

வாக்குமூலம்



சுசீந்திரம் தேரோட்டக் கூட்டமென
தலைகள் அடர்ந்திருக்கும்
ரயில் வண்டிக் காத்திருப்பில்

உதடு பிளந்து
உதடு பிணைந்து
உதடு கவ்வி
உதடு சுவைத்து
உதடு கரைந்து
உதடு நிறைந்து
நாம் செய்ததை முத்தம் என்றனர்
மிகச்சாதாரணமாக

தொலைதூர பயணத்தின்
இல்லாத நிறுத்தத்தில்
செத்தும் போயிருக்கலாம் கமாலாகிய நான்

பெரு மழை கலைந்த
ரயில்வே பிளாட்பாரத்தில்
கதறி அழுது
உடைந்து ஒழுகி
அம்மணமாய் ஷிபானா நீ நிற்கிறாய்
என்பதறிகையில்! 


நன்றி உயிரோசை


Sunday, May 6, 2012

ஆராதனா எனும் பேய் 11







1.
மழை விலகிய ஒரு அந்தியில்
உனது கூட்டைவிட்டு வெளியேறுகிறாய்
நிறமற்ற எனது இருப்பில்
பெருமழைக் கர்வமாய் பற்றிக் கொள்ளவென!

2.
உனது பெருங்காதலின் வன்மத்தில்
எனது றெக்கைகளின் குரூரம்
நிலைபடுத்துகிறது
அன்பின் வக்கற்ற சாதுர்யத்தை!

3.
தடங்கள் களவாடிய மழையாய்
என்னிலிருந்து கூட்டிச்செல்கிறாய்
என்னை
உன் பரிச்சயமற்ற வனத்துள் !


நன்றி உயிரோசை