சொல்லொலி முத்தங்கள்
அறைமுழுதும் அலைந்தாடுகிறது
மூச்சுவிட நேரமற்று..
வாங்கித்தரா புதுகொலுசை காரணங்காட்டி
இன்றிரவும் பிறந்தநாள் கொண்டாடுவோமா..
Showing posts with label வாழ்த்துக்கள்... Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள்... Show all posts
Friday, April 9, 2010
Thursday, December 31, 2009
புத்தாண்டு வாழ்த்துக்கள்..

எழுதபடாமல் விடுபட்டவைகள்
முனை முழுவதும் மொழிந்தாலும்..
புத்தாண்டு கொண்டாட
புறப்படுகிறது புன்னகையோடு
பேனா ஒன்று..
நேற்றுவரை முயன்றவைகள் ஒப்பமிட்டு
ஓங்கட்டும் புதுவாழ்வு
புதுஆண்டில் யாவருக்கும் ..
நிலங்கள் உடைத்து
அரசியல் செய்யும் பிசாசுகள்
நம்நிலை உணரட்டும் ..
ராஜபக்க்ஷே ,
பிரபாவின் இரவுகளில்
ஒளி வீசட்டும் ..
பிரபா ,
கதவுகள் தட்டி
கருணாவின் கைகுலுக்கி செல்லட்டும் ..
குண்டு கலாச்சாரம்
அமைதியில் கரையட்டும்
அகிம்சை வாழட்டும் ..
கேள்விகள் கேட்போம்
புரிதலுக்கான விடைகொடுப்போம்
கடவுள் இருந்தால் கண் திறப்போம்
இல்லாவிட்டால் உயிர் கொடுப்போம் ..
கனவுகளுக்கு வர்ணம் பூசுவோம்
மலர்ந்த முகம் எழுதுவோம்
நன்றிகளுக்கு கை கொடுப்போம் ..
எல்லோருக்குமான தினத்தில்
நானும் நீயும் தான்
நல்ல சமுதாயம் ,
வா.. அன்பாக புத்தாண்டு கொண்டாடுவோம் ..
Subscribe to:
Posts (Atom)
