1. இயேசுபிரானே...
மரித்த மூன்றாம்
நாள்
உயிர்
மீண்டுவிட்டார்
பாவத்தின்
ரட்சகன் !
உங்கள்
பாவங்களுக்கு
என்னை
மூழ்கடியுங்கள்
உயிர்த்தெழவெல்லாம்
மாட்டேன்
***
2. முட்டாள் பிதா
அழுகிறார்
கருணையும்
பாவமும்
சமத்தராசில்
தொங்கும்
நடைமுறையில்
குழந்தையைப்
புணர்கிறார்களாம்
ஆஃபாயில் உடைந்ததற்கு
தள்ளுவண்டிக்காரனைச்
செருப்பால் அடிக்கிறார்களாம்
இயந்திரத்தின்
பழுதிற்கு
முதலாளி
“தேவிடியாப்
பயல்களே“ என்கிறானாம்
கூலிகளை
ஏன் அழுகிறாய்
பரமபிதாவே ??
***
3. ஸ்தோத்திரம்
தூய ஆலயத்தில்
மெழுகுவர்த்தியை
ஒவ்வொருவராக
ஒவ்வொருவராக
ஒவ்வொருவராக
வந்து ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்
வால்சன்
பாதிரியார் அமர்ந்துவிட்டார்
மன்னிப்புக்
கூண்டிற்கு
உன்னைத்தான்
அனுப்பவேண்டும்
முதல் ஆளாக
எம் புனிதனே
***
No comments:
Post a Comment