Sunday, July 14, 2013

அறை எண் B-15 காலியாக இருக்கிறது



குளிரில் சுருங்கிய குறி போல
துயரத்தின் கண்கள் மீதேறி
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது
தனித்த என்னை இந்த இரவு

பழகியிறாத குழந்தையிடமிருந்து
எளிதில் பெறமுடியாத முத்தத்தைப்போல
என் மீது நெளிகிறது இந்த இருப்பு

எதன் நகல் இந்த வெறுமை

இந்த எறும்பு
ஏன் என்னையே வெறிக்கிறது
நீண்ட நேரமாக

பின் ட்ராப் சைலன்ஸில்
அதிர்வுற்ற
அறை எண் B-15

யாராவது கடந்து வந்தீர்களா?

No comments: