சுகப்பிரசவ
நேரத்து யோனியென
தாங்காத வலி
காட்டித்தருகிறது
தேநீர்கோப்பையின்
அடியில்
நீ மீதம்
வைத்துப்போன
குரோதம்
அப்பொழுதுதான்
பிறந்த
குட்டிநாய் கண்
திறப்பதையொத்து
பனிக்காலத்தில்
உனது பார்வையின்
ரேகையிலேயே
விரியும் என்
யோனியெங்கும்
பூனையின்
ரோமங்கள் துளிர்த்திருப்பதை
சொல்லவும்
வேண்டுமா ?
துரோகத்தின்
வெயில் விழுந்து
வளரும்
பூச்செடி முன்
நின்று
புன்னகைத்துக்கொண்டிருப்பதின்
திடம்
எங்கு கற்றாய் ?
உனது குரூர
வெற்றியின்
விரல்கள் ஏந்தி
என்னை ஸ்பரிசி
மேலும்
விரைத்தக்
குறிகொண்டு வன்புணர்
பிறகு
நசநசத்துச்
செத்துப்போ
No comments:
Post a Comment