என் பரிதவிப்பின் வழியெங்கிலும்
கொட்டி இறைக்கப்பட்டிருக்கிறது
பெரும் பதட்டத்தின் சிவந்தக் கண்கள்
உடைந்து தொங்கும் குரலில்
ஜீவன் மிச்சமிருக்கும்வரை
உன்னைத் தேடிக் கொண்டிருப்பேன்
பிறகு
பைத்தியக்கார அறையில்
உங்கள் நிம்மதியைப் பிடுங்கிகொண்டுத் திரியும்
கலங்கலானதொரு முகம்
No comments:
Post a Comment