Friday, June 29, 2012

***



அதற்கும் ஆடை நெய்து கொண்டிருந்தேன்
திரும்பிய எறும்பு
எனது நிர்வாணத்தைக் கேலிப் பேசுகிறது

***



அதிகபட்சமாய்
செத்துப்போகலாம்
இல்லை
வாழ்ந்துவிடலாம்

Monday, June 25, 2012

***






அதற்கு மேலும்

நம்பிக்கை மட்டுமல்ல
நீ என்பது

***



எனது நிர்வாணத்தின் மீது
தன்னைப் பாடிச் செல்கிறது
இரை எடுக்கப்போகும் ஒரு பெரிய எறும்பு

ஆமென்







இனி ஒன்றுமில்லையென விடுபடுதல்,
இப்படியான நமது அத்தனை தருணங்களிலும்
இனியொன்றுமில்லையானது
மாயையாகவே நம்மை விட்டு விலகி
ஈர்திருக்கிறோம் ஒருவர் ஒருவரின் கரம் இறுகத் தழுவி
ஆமென்

Friday, June 22, 2012

****




அவை
தங்க மீன்குஞ்சுகள்

ம்,
 
நீந்துவதற்கு
பாலா நீரா?  

அந்தரப்பூச்சி



விலைமகளின் விலக்கு நாட்கள்
ஏனோ ஞாபகத்தில்,

ஓர் அர்த்தம் கொண்ட
ஓர் அபத்தம் நிறைந்த
ஒரு கவிதையை
எழுத முயன்று பாதியிலேயே
தோற்றுப்போகும் பொழுது!

நன்றி உயிரோசை

அழைப்பு






துண்டு துண்டாக வெட்டி வைத்திருக்கிறேன்
வெயிலுக்கு முன்
எடுத்துப் போ
ஈரம் சுடரும் முத்தத்தை!

நன்றி உயிரோசை


இருப்பு



ஒரு பசித்த அந்தியில்
காத்திருப்பை உண்டுக்கொண்டிருந்தேன், 

ஒற்றை மென் புன்னகையில்
வானளவு அந்தியை
அத்தனை சாதாரணமாய்
விழுங்கி
இயல்பாக்குகிறாய் வாழ்தலின் கோடையை!

நன்றி உயிரோசை

மகிழ்மொழி பூப்பெய்தினாள்



ஓர் எளிய காற்று விலக்கிய
பைத்தியக்காரனின் மயிரடர்ந்த குறி கண்டு
பயம் பிடித்த சிறுமியின் பால்யத்தை

செடியிலிருந்து ரோஜாவைப்
பிரிப்பதெனப் பிரிக்கிறாள்

பின்,
உதிரத்தின் ரகசியம் குறித்து
அவ்வளவு இயல்பாய்
பதின்மத்தினுள் வயது உதிர்ந்ததை
மகிழ்மொழிக்குப் புன்கண்ணீரோடு
புரிய வைக்கிறாள் என் தாய்!


நன்றி உயிரோசை

Thursday, June 14, 2012

யாசகம்



ஒரு நூற்றாண்டுத் தனிமையை 
இவ்வளவு லாவகமாய்
தர இயலும் எனும்போது
உனது மௌனத்தின் அலறலை
ஒரு சிறு நொடியேனும்
நிறுத்தக் கூடாதா?

நன்றி உயிரோசை



தோல்வியின் பெருவெளி



பறவையின் சிறகுகளைக் கேட்கலாம் என்றால்
கனவுகளின் திரட்சியில்
மரித்துக் கிடக்கிறது
வண்ண வண்ண இறகுகள்!

நன்றி உயிரோசை

நந்தினிக்குட்டி



வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப்பூச்சியாக மட்டுமே
பறக்கும் வரை தான்
நந்தினிக்குட்டி
நந்தினிக்குட்டியாக!

நன்றி உயிரோசை

மௌனம் மரணம் நன்றி



அதீத பிரியத்தின் கணம் 
கனம் தாங்காது உடைந்து
அழ

எழுகிறது அரவணைப்பின் கால்கள்
மூர்ச்சையுடன் முத்தமிட..

மௌனம் மரணம் நன்றி
என்கிறாய்
என்கிறேன்

நன்றி உயிரோசை

Saturday, June 9, 2012

***






எனது இருத்தலின் திசையெங்கும் நீ
பறவையாதலுக்கான குறிப்புகள்
யாசிக்கிறேன் தோழா

Wednesday, June 6, 2012

பரஸ்பரம்






அபரிமிதமான அன்பின்
அபத்த பதில்களில்
அர்த்தப்படும்
நிறைவானதொரு தருணம்

நிழலாய் வியாபிக்கும் வெளியாய்
ஒரு சிறு புன்னகையில்
கவிகிறது நேசத்தின் ஓசை

நன்றி உயிரோசை


தற்கொலையின் தற்கொலை






ஆகச்சிறந்த ஒரு வழிப்பாதையை
தேர்ந்தெடுத்ததாய்  நம்பிக்கொண்டு
நடக்கத் துவங்கினேன்

எனக்கு முன்பாகத் தொலைந்துபோக
எண்ணியிருப்பான் போல,
வழி முற்றியதென
திருப்பி வந்து கொண்டிருக்கிறான்
நான் நம்பிய நீலநிறக் கண்களுடைய கடவுள்
நம்பிக்கையற்ற செந்நிறக் கண்களோடு

நன்றி உயிரோசை


அன்படர்ந்த தேற்றுதலில்



மரணத்தை விழுங்கிக் கொண்டு
கேவலுடன் மடி வழிய வழிய
உப்பு நீர் நிறைத்து
காதல் இறைஞ்சுகிறது
நிரம்ப பரிச்சயமுள்ள இரவிடத்து 
கண்களைக் குருடாகச் செய்ய

விந்து முந்திய கலவிக்குப்
பிறகான இரவில்
காதல் மனைவியின்
அன்படர்ந்த தேற்றுதலில்
மெல்ல ஒளியுறுகிறது
அமைதியானதொரு பகல் 

நன்றி உயிரோசை