சாமத்தில்
உனது ரோமதீர்த்த
நினைவுகள் அடுக்கி
சுயம் இன்புறுகிறேன்
திருட்டுத்தனமாக
எனது படுக்கைஅறை
ஓவியத்தின்
கண்கள் சுகித்துக்கொண்டிருப்பதாக
திடுக்கிட்ட
ஒரு கணம்
சோகமுற
காட்சியளிக்கும்
அதன் அரேபிய
இமைகளின் ஞாயம்
தரிசித்தது
என்னை..
தனித்துவமாக
உனக்கு எழுதிய இக்குறிப்பு
உயிர்ப்பித்த
வெளிச்சம்
இப்பெரும்பாலையை
மலர்வனமாக்குகிறது
பேரன்பே...
சந்திக்கையில்
உன் மார்
அமர்ந்து
நம் வெயில்
தீர்க்கும்
அது
No comments:
Post a Comment