Monday, July 5, 2010

கடந்து செல்லுதல்.


பால்யத்தைக் கடக்க எத்தனிக்கும்
பதின்வயதின் சட்டைப்பையெங்கும்
வண்ணத்துப்பூச்சிகளின் கூடாரம்..

சில சிறகு உதிர்ந்தவைகளாகவும்
சில உதிர உதிரப் பறப்பவைகளெனவும்..

ஒரு முழுவதுமான கையறுநிலையில்
பிரியத்தின் நிழல்கள்
செத்து செத்துக் கிடக்கின்றன
பொழிதலின் மழைச்சாலையெங்கும்..

இன்னும் மின்னிக் கொண்டுதானிருக்கின்றன
வானெங்கும் நட்சத்திரங்கள்
ரசிக்கத்தான் என்னிடம் நானில்லை.!

அரிதாகப்பூக்கும் ஒரு காட்டுப்பூவினைப் போலவோ
எறும்பு மிதக்கும் ஆற்றின் இலைபோலவோ
ஒரு சில சமயங்களில்
கடந்து கொண்டுதானிருக்கிறது
என்னை இந்த வாழ்வு.

நன்றி உயிரோசை..



 
வலைச்சரத்தில் எனது  எதற்கேனும்  ஐ! அறிமுகப் படுத்தியிருக்கிறார் மாமா பா.ரா..  நன்றியும், மகிழ்வும் மாமா :-)







16 comments:

பனித்துளி சங்கர் said...

/////சில சிறகு உதிர்ந்தவைகளாகவும்
சில உதிர உதிரப் பறப்பவைகளெனவும்..///

வலிகள் நிறைந்ததுதானே வாழ்க்கை . கவிதை மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி .

கமலேஷ் said...

கவிஞரை ஒன்னும் பண்ணிக்க முடியாது போல..

வரிகள் முழுவதும்
வாழ்க்கையை மொத்தமாய் பேசுகிறது..
ரொம்ப பிடிச்சிருக்கு..

வாழ்த்துக்கள் தோழரே..

விஜய் said...

பங்காளி பா.ராவின் அறிமுகம் என்றால் சும்மாவா

அற்புதமாக எழுதுகிறீர்கள் தம்பி

வாழ்த்துக்கள்

விஜய்

SELVARAJ said...

அருமை.

ஹேமா said...

விரும்பியோ விரும்பாமலோ வாழ்வு எம்மை விட்டு நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது.நினைவுகளைக் காவியபடி நாம் அதன் பின்னால் !

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு மாப்ள!

உயிரோடை said...

ரொம்ப நல்லா வந்திருக்கு கவிதை. வாழ்த்துகள்

Unknown said...

நன்றி நண்பர் சங்கர்.

நன்றி நண்பர் கமலேஷ்.

Unknown said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விஜய் அண்ணா.

Unknown said...

நன்றி நண்பர் செல்வராஜ்.

நன்றி தோழி ஹேமா.(காவியபடி // கவ்வியபடி?)

நன்றி மாமா.

அண்ணாமலை..!! said...

அருமையான வர்ணனைகளுடன்..
சிந்தனைகளும் ஊடாடியிருக்கிறது
நண்பரே!

Unknown said...

நன்றி இளம் தூயவன் சார்.

முதல் வருகைக்கு நன்றி நண்பர் அண்ணாமலை.

Unknown said...

நன்றி உயிரோடை அக்கா.

Gowripriya said...

nallaa iruku... vaazhthukal

Admin said...

//அரிதாகப்பூக்கும் ஒரு காட்டுப்பூவினைப் போலவோ
எறும்பு மிதக்கும் ஆற்றின் இலைபோலவோ
ஒரு சில சமயங்களில்
கடந்து கொண்டுதானிருக்கிறது
என்னை இந்த வாழ்வு.//

நல்ல வரிகள்

Unknown said...

நன்றி தோழி கௌரிப்பிரியா.

முதல் வருகைக்கு நன்றி சந்ரு.