Thursday, June 17, 2010

மழலைகள்வான் ஒதுங்கிய மீன்கடல்...



பலூன் விற்பவன்
காட்டில்
மழை பெய்வதில்லை
முன் போல். !

அவர்களின்
ஆறுமணி வீடு திரும்பலுக்குள்
ஏழுமுறை மண்டை உடைந்து
செத்துப்போகிறான்
துப்பாக்கிச் சுடுபவன்.
அம்மா அப்பா சண்டை
வீடியோ கேம்ஸ் 
கொலைகளைக் காட்டிலும் எரிச்சல்.!


காகித கப்பல்கள்
அம்மாக்களைத் தேடி
நீர்த்துப்போகிறது,
மழலையின் ஆசைகள்
மழலைகளுக்கான ஆசைகளாக
இல்லை.! 

16 comments:

உயிரோடை said...

க‌விதை ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து

VELU.G said...

வரிகள் அருமை

வாழ்த்துக்கள் நண்பரே

rvelkannan said...

//வீடியோ கேம்ஸ்
கொலைகளைக் காட்டிலும் எரிச்சல்//
அருமை...க‌விதை அருமை

பா.ராஜாராம் said...

அருமை மாப்ள!

26 வயசாச்சுல்ல, ini, இப்படித்தான்..

ulagam booraam kuzhandhaigal thaan! (there is some translation problem, here.)

munthaiya kavithaikkum sertthu...

ஹேமா said...

ஆசைகள் உடைந்து கிடக்கிறது அழகான வரிகளில்.

Unknown said...

*நன்றி உயிரோடை.

*நன்றி நண்பர் வேலு.ஜி.

*நன்றி வேல்கண்ணன்.

Unknown said...

ம்ம்,சரிதான் மாமா ( வயசுக் கோளாறு )

*நன்றி :)

Unknown said...

*ஹேமா

அட! ஆமாங்க, நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

அருமை பாஸ்..

ப்ரியமுடன் வசந்த் said...

தலைப்பு அழகியல் கவிதை..

புகைப்படம் மற்றொரு அழகியல்...

Unknown said...

:-)

நன்றி வசந்த்.

Unknown said...

அந்த பலூன் விற்பவனின் தனிமை மனதை பிசைகிறது..
அவன் வீட்டு மழலை, பலூன்களைப் பார்த்துப் பழகிய வாழ்வு வேறாகத் தானே இருக்கும்..?
சிந்தனையைத் தூண்டி விட்ட உங்கள் கவிதைக்கு நன்றி..!

சுசி said...

வரிகளும் படமும் அழகா இருக்கு.

சொன்ன விடயம் கனம்!!!

கமலேஷ் said...

தலைப்பில் ஒரு கவிதையும்
தலைப்புக்கு கீழ் ஒரு கவிதையும் இருக்கிறது..
எந்த கவிதைக்கு நான் இப்ப கமேண்டுவது...

இரண்டுமே மிக உயரமாக இருக்கிறது நண்பரே..

வாழ்த்துக்கள்.

Unknown said...

*நன்றி இளங்கோ.

*உங்கள் வருகையில் மகிழ்வு சுசி.
நன்றி.

Unknown said...

*என்ன கமலேஷ் பெரிய பெரிய வார்தையெல்லாம் !

உங்க அன்புக்கு நன்றி நண்பா.