Tuesday, June 15, 2010

மெல்லமாயொழுகும் பால்யம்...



எறும்பு நகர்ந்திருந்த
வெயில் தரை வழி
மெல்ல ஊர்ந்த
ஏழு வயது பொடியனின்
விரல்களை
அகிம்சை எனவோ
வன்முறையெனவோ
சொல்லி முடிப்பதற்குள்
கனாவொழுகிய இரவொன்றில்
நன்றாக உறங்கி இருந்தது, 
எனது அகாலம்
மற்றும்
முந்தைய எனது விடியல்..! 


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3032 

நன்றி யிர்மை.

15 comments:

நேசமித்ரன் said...

நல்லா இருக்குன்னு மட்டும் சொல்ல முடியல
பிடிச்சிருக்கு நண்பா

உயிரோடை said...

த‌லைப்பே க‌வ‌ர்ந்திருக்குது க‌விதையாக‌

ஜெனோவா said...

விட்ட எல்லாத்தையும் வாசித்து விட்டேன் நண்பா !
தொடர் உயிரோசை கவிதைகளுக்கு வாழ்த்துக்கள் .. தொடர்வோம் !

ரோகிணிசிவா said...

நல்லா இருக்குங்க

Unknown said...

நல்லா இருக்குங்க

கமலேஷ் said...

ரொம்ப ரொம்ப
நல்லா இருக்கு நண்பரே...

Unknown said...

நன்றி நேசன்.

நன்றி உயிரோடை.

:-)

Unknown said...

@ ஜெனோவா.

ம், சந்தோசம்..தொடர்வோம் நண்பா :)
நன்றி.

Unknown said...

நன்றி ரோகிணிசிவா.

நன்றி செல்வராஜ் ஜெகதீசன்.

நன்றி நண்பர் கமலேஷ்.

ஹேமா said...

எம் இளமை கரையும் விதத்தை அழகாகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.

எம் அப்துல் காதர் said...

கவிதைக்கு தேர்ந்தெடுத்த படம் அருமை!

ப்ரியமுடன் வசந்த் said...

அருமை அந்த மெல்லிய பகல் எறும்பு இவைகள் கண்முன் நிறுத்த வைக்கும் கவிதை...

Unknown said...

நன்றி ஹேமா பின்மொழி அழகாக இருக்கு :)


நன்றி காதர் சார், அது ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் தேர்ந்தெடுத்த படம்.! :)

Unknown said...

சமீபத்தில் நான் வாசிக்க நேர்ந்த மிக அற்புதமான கவிதை ஆறுமுகம்..!
மிகையல்ல..

Unknown said...

மகிழ்வு, நன்றி வசந்த்.

எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் இளங்கோ, நன்றி.

:-)