Sunday, June 13, 2010

உயிரெழுத்து



ஒரு முத்தம் மருக
மருக உருண்டோடுகிறது வெட்கநட்சத்திரங்கள்..
ஒரு புணர்வின் இறுதி இரவை
உருகி வழியும் மெழுகின் கதகதப்பில்
வர்ணம் பூசிக் கொள்கிறது குளிர்நிலவு..
ஒரு நான்
ஒரு நீ
ஒரு நாம்
ஒரு அரவணைப்பு.

23 comments:

Swengnr said...

அன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும். நன்றி!
http://kaniporikanavugal.blogspot.com/

நேசமித்ரன் said...

:)

ம்ம் நல்லா இருக்கு ஆனா என்னமோ குறையுதா
தெரில

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு... வாழ்த்துக்கள்...

Unknown said...

சரி நண்பா, நன்றி.

Unknown said...

ம்ம் ஆமா நேசன்.. முடிவுல கொஞ்சம் சொதப்பிட்டேனு நினைக்கிறேன் நண்பா..


ம், நன்றி கமலேஷ்..

பனித்துளி சங்கர் said...

அருமையாக உள்ளது . பகிர்வுக்கு நன்றி

Unknown said...

உங்கள் வருகைக்கும்,வாசிப்பிற்கும் நன்றி அண்ணாமலையான்.

மதுரை சரவணன் said...

//நல்லா இருக்கு .../// வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

கவிஞர் ஆறுமுகம் முருகேசன்...

உயிரோடை said...

க‌விதை இன்னும் எழுத‌ப்ப‌ட்டிருக்க‌னும் என்று நினைக்கிறேன். க‌டைசி வ‌ரிக‌ள் சொல்லும் அர‌வ‌ணைப்பு முன் வ‌ரிக‌ள் சொல்லும் காம‌மும் கொஞ்ச‌ம் முர‌ண்ப‌டுது. ஆனாலும் மொழி மிக‌ அருமையாக‌ இருக்கு

எம் அப்துல் காதர் said...

//ம்ம் ஆமா நேசன்.. முடிவுல கொஞ்சம் சொதப்பிட்டேனு நினைக்கிறேன் நண்பா.. //

இப்படியெல்லாம் சொதப்பிட்டோம்னு மனச உட்டுடாதீங்க பாஸ். மனச தகிர்ச்சுக்கிட்டு நிறைய எழுதுங்க. எல்லாம் உங்களுக்கு கை வரப் பெறும்!

ஆமா மொதோ மொத உங்க வீட்டுக்கு வந்திருக்கிறேனே, வாங்க இருங்க, காபி சாப்பிடுங்க, அட வெயிலா இருக்கு கொஞ்சம் ஜில் தண்ணி குடிங்க இப்படியெல்லாம் ஏதும் சொல்ல மாட்டீங்களா தல!

கவிதை எழுபவர்கள் கற்பனையிலேயே சஞ்சரிச்சிகிட்டு இருப்பாங்கன்னு சொல்வாங்க. நீங்க அது மாதிரி இருக்காதீங்க. கல கலான்னு இருக்கணும். சிரிச்சீங்களா!

அன்று நீங்க "BANK" வந்தப்ப நிறைய பேச முடியல! நிறைய எழுதி வாழ்க வளமுடன்!

VELU.G said...

//
ஒரு நான்
ஒரு நீ
ஒரு நாம்
ஒரு அரவணைப்பு.
//
ஒரு நல்ல கவிதை

வாழ்த்துக்கள் நண்பரே

தூயவனின் அடிமை said...

நண்பரே எனக்கு கவிதை பற்றி நன்கு தெரியாது என்றாலும் , ரசித்து படிப்பேன் வாழ்த்துக்கள்.

ஹேமா said...

//ஒரு நான்
ஒரு நீ
ஒரு நாம்//

நேசன் சொல்லிட்டார்.ஆனாலும் நல்லாயிருக்கு.

Unknown said...

*நன்றி சங்கர்.

*நன்றி சரவணன்.

*நன்றி வசந்த்.

Unknown said...

@ உயிரோடை.

காம‌மும்,அர‌வ‌ணைப்பும் ஒரு வரிசையில் ஒரே திசையில் பயணிப்பதாக எனக்கொரு எண்ணம்..
ம்ம் சுட்டிக் காட்டலுக்கு நன்றி..

:)

Unknown said...

@ காதர் சார்..

பகிர்வுக்கு நன்றி.

// ஆமா மொதோ மொத உங்க வீட்டுக்கு வந்திருக்கிறேனே, வாங்க இருங்க, காபி சாப்பிடுங்க, அட வெயிலா இருக்கு கொஞ்சம் ஜில் தண்ணி குடிங்க இப்படியெல்லாம் ஏதும் சொல்ல மாட்டீங்களா தல!

கவிதை எழுபவர்கள் கற்பனையிலேயே சஞ்சரிச்சிகிட்டு இருப்பாங்கன்னு சொல்வாங்க. நீங்க அது மாதிரி இருக்காதீங்க. கல கலான்னு இருக்கணும். சிரிச்சீங்களா! //

என்ன சார் இப்படி கேட்டுபுட்டீக, உங்களுக்கு இல்லாததா, கட்டுலுக்கு கீழபாருங்க காய்ச்சுனதே இருக்கு.!

ம், நல்லா சிரிச்சேன் சார் :-)

ம், பரவா இல்ல,அடுத்தமுறை நேரா வீட்டுக்கு வந்துடுறேன்.. சூப்பர் சாப்பாடு ரெடி பண்ணிவைங்க.. :)

நன்றி சார்.

Unknown said...

*நன்றி நண்பர் வேலு.ஜி.

*வாழ்த்துகளுக்கு நன்றி இளம்தூயவன் சார்.

*ம் சரிதான்,நன்றி ஹேமா.

Ashok D said...

எல்லாரும் சொல்லியாச்சு நான் மட்டும் தனியா சொல்லனுங்களா? :)

Unknown said...

*ம்,ஒன்றும் சொல்வதற்கில்லை.! நன்றி அசோக்.
:)

பா.ராஜாராம் said...

நடத்துங்க...

26 வயசாச்சுல்ல.. இப்படித்தான். :-)

Unknown said...

:) நன்றி மாம்ஸ்.