*
இருப்பின் பிரதி
புகைப்பட காடொன்றின்
கிழட்டு மரத்தினைப் புணர்ந்து கொண்டிருக்கும்
வயதே கூடாத அவ்இரண்டு எறும்புகளையும்
கூட்டி வந்து உன்னிடம் அறிமுகப்படுத்தினேன்
எந்தச் சலனமும் இன்றி
என் கைகள் மெல்ல பற்றி
அழைத்துப் போகிறாய்
நிலைக்கண்ணாடியில்
ஆதாமும் ஏவாளும்
இறுகித் திமிர்கிறார்கள்
2 comments:
I Like It
பயனுள்ள தகவல்
Post a Comment