Thursday, December 13, 2012

பனிக்காலத்துக் குறிப்புகள் 2



அடுத்த வருடம் ஏப்ரலில் நமக்குத் திருமணம் நிகழ இருக்கிறது
கடந்த எட்டேமுக்கால் மாத நம் வாழ்வில் 
உன்னை சந்தோசமாக வைத்திருப்பதாக மட்டுமே
எனது சிறு நம்பிக்கை

இன்றும் என்றும்
எங்காவது எப்பொழுதாவது
நம் வாழ்வில் ஏதுனும் துளி குறையிருப்பதாக நீ அறிந்தால்
ஒற்றை விண்ணப்பம் உண்டு எனக்கு,
உன் உனக்கு உனக்கே பிடித்த ஒரு நாள்
எங்காவது சென்று திரும்பு
உனக்குப் பிடித்ததைச் செய்
யாதொரு அனுமதியும் தேவையுமில்லை
அவசியமுமில்லை
எந்தக் கேள்விகளும் என்னிடம் இல்லை.

மேலும்
அனைவரும் திருமண வைபவத்திற்கு வருக வருக
நல்ல சுவைமிக்கச் சைவச்சாப்பாடு
நீங்கள் மனதாரப்பாராட்டுவீர்கள் 

No comments: