Sunday, December 9, 2012

பனிக்காலத்துக் குறிப்புகள்



கோடி பட்டாம்பூச்சிகளின் வர்ணம் உமிழும்
பேரன்பின் யதார்த்த முகம் 
உனதென
நல்ல மழை வழிந்ததொரு அந்தியில்
ஒரு சிறுபுல்லின் நுனிஎன்னைத் தேம்பி
தேம்பி இறுக்கியதுடன்
மெல்ல விழித்தேன்

பெரும் அமைதி
பெரும் அமைதி

பின் மௌனமாய் அதன் ஈரம் படர்ந்த
கரங்களைக் குலுக்கி
கிமு 23 ஆம் நூற்றாண்டிலிருந்தே
உன் உடம்ஸ்தி எனக்கு மனைவி என்றேன்.

அந்த இரவில்
மூன்று லட்சம் விண்மீன்கள் ஒளிர்ந்ததாய்
இன்று அதிகாலையில்
என்னை மென்மையாய் எழுப்பித் தலை கோதி
கீச் கீச் குரலில் ரகசிக்கிறாய் பெண்ணே;
பெண்ணே இதுஎந்தவிதத்தில் ஞாயம்?! 


No comments: