மேலும்
நீர் வற்றியக்
கூடத்தில்
தலைதூக்கி
செருமிக்
கொள்ளும்
முதலைகளுக்கு
குரூரக் கண்கள்
கொலைக்குற்றவாளியின்
கைவிலங்கினையொத்து
மின்தகனமேடையின்
பொத்தான் அழுத்துபவன்
தன் இருப்பை
சரிபார்த்துக்கொண்டிருக்கிறான்
ஆனாலும்
கொடிமரத்துக்கொண்டையில்
அமர்ந்திருக்கும்
காகம்
திருவிழா
கருடபார்வைக்கு
இப்பொழுது
நீங்களெல்லாம் போகலாம்
துயர்ச்சரீதம் எனக்குரியது
மார்ச்சுவரி
காப்பாளனின்
பீடி
புகையிலிருந்து எட்டிப்பார்க்கிறது
தற்கொலையூண்டவளின்
இருமல் ஒலி
No comments:
Post a Comment