ஒரு வஞ்சனையை
ஒரு துரோகத்தை
ஒரு விஷத்தை
விழுங்கிக்
கொண்டிருக்கிறேன்
அதற்கேற்றார்போல்
வடியும்
வெப்பக்காற்றை
இதயத்திற்குப்
பக்கத்தில் தொட்டுத் தடவுகிறேன்
மூர்க்கமாக
வழியும் என் குருதியில்
ஒரு துண்டு
ஐஸ்கட்டியை இடுவதற்கு
தயாராகிறாய்
அல்லது முயற்ச்சிக்கிறாய்
“தூ” என்றேன்
ஐஸ்கட்டியைப்
பிடுங்கி
டாய்லெட்டில்
பிளஷ் செய்துவிட்டு
பிறகு
உன் நிஜகத்தியைக்
காட்டுகிறாய்
எனக்குப் பயமே
வரவில்லை
No comments:
Post a Comment