நீ அழவேண்டாம்
குருதிபுற்றுநோய்
சாதாரணம்..
மழலையைப்பற்றி
பேசிக்கொண்டிரு
ரத்தம் வருகிறது
உறக்கம் வேண்டும்
முதலும்
இறுதியுமாக
உனக்கு எழுதிய
கடிதம்
இன்னும் வந்து
சேரவில்லை..
மேலும்
அன்பு செய்
என்னை
பின்தொடரும்
நிழலின் மீதேறி
ஒரு துண்டு
சொர்க்கத்தை
அள்ளிவருகிறேன்
கண்ணிமை தோழி
No comments:
Post a Comment