ஆனால்
முக்கியமான பாத்திரம்
தவறவிடப்பட்ட
ஒற்றைக்கால் செருப்பு.
( கவிதைக்கு அனார்
எனப் பெயரிடப்படுகிறது )
“மழையைத்
துரத்தும் பெட்டிகள்
அல்லது
பெட்டிகளைத்
துரத்தும் மழை” என
எக்ஸ்ப்ரஸ்
செய்துக்கொண்டிருக்கிறான்
அனாருக்கும்
தனக்குமானக் காதலை
கமால்!
தன் உள்ளங்கை
கொண்டு
மறுகால் தாங்கி
தவறவிட்டதின்
ஜோடி காலணியை
அனாரின்
புன்னகைக்கு நடுவே
ரெயில்
ட்ராக்கில் கமால் வீசியெறிந்தப்
பொழுது
எங்களது
மேன்ஷன்
அறைக்குள்
இரண்டு நிமிடம்
தொடர்ச்சியாக
மின்னல்
வெட்டியது.
நாங்கள் அனைவரும் குழந்தைகள் ஆனோம்
No comments:
Post a Comment