தாய்ப்பறவையின்
நெஞ்சை அறுத்துத் தான்
உணவு உண்ண
வேண்டுமா
அவள் கருப்பை
வலிக்காதா?
எவ்வளவு தான்
தாங்க வேண்டும் அவள்??
புரியாதா உனக்கு?
இனி
ஒரு வார்த்தை
ஒரு வாதம்
.....
பெருஒலி எழும்ப
வீங்கிக்
கொண்டிருக்கும்
கண்கள்
செயலற்றுப் போகும்
இது
கவிதையுமில்லை
ஒப்பனையுமில்லை
ஒரு அழுந்த
முத்தம்
போதும்.
சுரக்காத முலை
மூச்செறியும்
காதல் கொண்டு
உயிர்க் காதல்
கொண்டு
(ஆராதனாவுக்கு)
No comments:
Post a Comment