ஏன் இன்னும்
துவங்க யோசிக்கிறாய்
ஆத்மார்த்தமாகச்
சொல்லப்படாத
உன் கதைகூறலை?
என்று முடிவுறும்
கவிதைக்காக..
அதுவரை
நீலப்படத்தில் மட்டுமே
பார்த்துப் பழகிய
நிர்வாணப் பெண்ணுடலை
ஒருவன்
நிஜத்
தன்மையுடையக் காதலோடு
முதல்முறைத்
தொட்டு ஸ்பரிசிக்கும் பொழுது
ஒளிரும்
வெளிச்சம்
எதுவும்
துவங்கவுமில்லை
எதுவும்
முடியவுமில்லை
No comments:
Post a Comment