வராந்தாவில்
வரிசையில்
ஊர்ந்துக் கொண்டிருக்கும்
எறும்புக்
கூட்டத்திற்கு
பதட்டம்அடையாது
கையசைக்கிறான்
நம்பும்படியான
கடவுள்.
ஆப்ரேஷன் அறைக்கு
வெளியே நிற்கும்
முதல் பிரசவ
தகப்பனின் நிலையென
தாடையில்
கைவைத்துப் பிசைந்துக் கொண்டிருக்கிறது
காலம் என்னை..
ஆமென்
No comments:
Post a Comment