நிமிர்ந்த நன்னடை
ஒழுக
முகம் பொத்தி
நீங்கிச் செல்கிறேன்
பசித்த அந்தியை
திறந்துப் பார்க்க
ஏதுவாய்
கொஞ்சம் கொஞ்சிக்
கொஞ்சம் கெஞ்சி
கண்ணாமூச்சிக்
காட்டும்
வழக்கமான பூங்கா
மரம்
ஏனோ இம்முறை
தலைசாய்க்கவே இல்லை
செருமி
உதிர்கிறாய்
உள்தொண்டையிலிருந்து
சன்னமான குரலில்
என் கூப்பிடும்
தொலைவில்
நீ
இருந்தும்
No comments:
Post a Comment