மின்னல் போல் வெட்டி
மறையும்
அவள் கன்னத்தில்
இடப்பட்ட முத்தம்
உங்களது கழுத்தைப் பதம்
பார்க்கிறது
பின் ஏன் அருகமர்ந்து
வற்புறுத்துகிறீர்கள்? அழகான கோடையில்
மழை பாடச்சொல்லி
‘ஆமென்’ என்கிற சமாதானம்
தூக்கில் தொங்குகிறது.
புன்னகைக்கு விலையேது
புண்ணியமாய் போகட்டும்
உயிர் நிரந்தரிக்கும்
வெட்கச் சிரிப்பு
பாக்கி இருக்கிறது.
No comments:
Post a Comment