Thursday, May 16, 2013

டேஸ்டி ஸ்டேட்டஸ்




வழக்கமாகச் செல்லும் பேருந்தில்
அன்று கண்டெக்டர் குடித்திருந்ததால் 
சண்டைஅடித்துவிட்டு 
வழியிலேயே இறங்கிக்கொண்டான் 
கடவுள்

பிறகு ஆவேசமாக 
மொபைல் ஃபோனை எடுத்து 
பொத்தான்களைக் கோபத்தோடு 
தட்டினான்

டூவீலரில் பறந்துகொண்டு வருகிறாள் 
கடவுளின் தோழி

வடபழநி சிக்னல் பிச்சைக்காரனுக்கு 
ஒரு ரூபாய் தரும்படி பணிக்கிறாள் 
ஆம்; அப்பொழுது தோழியும் கடவுள் ஆகிறாள்.

ஆண்கடவுள் கோபத்தில் கத்துகிறான்    

அந்த ஒரு ரூபாய்க்குத்தான் 
பஸ்ஸில் 
"ப்ராப்ளம் மை டியர் லேடி..."

"ஓ..ஓகே ஓகே.. மை மேன்.."

இரண்டு கடவுளர்களும் டூவீலரில்...
(பிச்சைக்காரனாகப்போகும்)
பெரும் பணக்கார ப்ரடீயுஸரோடு
நுங்கம்பாக்கம் 
ரெய்ல்வே ஸ்டேசன் ஒட்டியுள்ள
காரைக்குடி செட்டிநாடு ஹோட்டலில்
கதை சொல்லிக்கொண்டே..

"ஆமா;
வஜ்ரம் மீனில் முள்ளும் எவ்வளவு டேஸ்டி"  

முன் சொன்னப் பிச்சைக்காரர்
அம்மா உணவகத்தில் 
அவ்வளவு வாஞ்சையோடு 
தயிர்சாதத்திற்குத் தட்டிக்கொடுக்கிறார்

ஆமென் 

No comments: