Saturday, May 18, 2013

சிவப்பு நிறத்தில் பாயும் நதி



ஆம்புலன்ஸ் அலறுகிறது

பொட்டாட்டம் 
பிஞ்சு வெள்ளரிக்காயினை
ருசி பார்த்துக் கொண்டிருக்கும்
வெயில்

ஓரமாக தானே நின்றுக் கொண்டிருக்கிறான்

காது மடல்கள் இல்லாத கடல் ஒன்றும்
அத்தனை
அபத்தமல்ல

கடவுள் வந்து கொண்டிருக்கிறார்
கடவுள் வந்து கொண்டிருக்கிறார்

No comments: