ஒரு குளத்தை அப்படியே எடுத்து
சிறுகல்லில் எறிவதென்பது
உங்களுக்குப் புன்னகையை வரவழைக்கலாம்
உங்களை வித்தியாசமாக உணரச் செய்யலாம்
சாத்தியமல்லவென மறுக்கவும் கூடச் செய்வீர்கள்
ஆனால்
அதுதான் நிகழ்ந்தது.
இப்பொழுது
பாவனைச் செய்து கொள்ளுங்கள்
நீங்கள் விரும்பியபடி
அதற்குள்
நாங்கள் இருவரும் கைகளை இறுக்கமாகக் கோர்த்துக்கொண்டு
சுமார் பதினெட்டாயிரத்து மூன்னூற்றி சொச்சம் கிலோமீட்டர் கடந்திருப்போம்
No comments:
Post a Comment