பெரிதாக ஒன்றும் செய்யவில்லை நான்
ஆண்டாண்டு காலமாக நீங்கள்
கவனித்துக்கொண்டிருக்கும் ரோஜா செடியிலிருந்து
ஒற்றைச் சிகப்பு ரோஜாவைப்பறித்து அவளிடம் நீட்டினேன்.
மௌன மழையை அசரடித்துவிட்டுத் தலையேறிக்கொ ண்டது
அச்சிகப்பு ரோஜா.
இக்கணம் நாங்கள் இருவரும் உயிரோடில்லை
என்பதை மட்டும்
தம்பி செழியா
நீ ரகசியமாக வைத்துக்கொள்
No comments:
Post a Comment