நீ தேவதையாகக் கொல்கிறாய்
நான் சாத்தானாகிச் சாகிறேன்
மேலும்
நீ அன்பை வலிக்க வலிக்கத் தருகிறாய்
நான் வலியை அன்பெனத் திணிக்கிறேன்
மேலும்
நீ சுவாசத்தை என்னுள் நீட்டிக்கிறாய்
நான் மூச்சுமுட்டலை அத்தனை இலகுவாக ஏற்றுக்கொள்ள
வைக்கிறேன்
மேலும்
நீ ஒரு சொல்லை உடைத்து நூறு கவிதை சமர்ப்பிக்கிறாய்
நான் நூறு கவிதை தின்று ஒரு சொல் தேடுகிறேன்
மேலும்
நீ இருக்கிறாய்..
நான் இருப்பதுபோல் இருக்கிறேன்.. !
மேலும்
நீ தேவதையாகவே கொல்கிறாய்
நான் சாத்தானாகவே சாகிறேன்
நன்றி உயிரோசை
No comments:
Post a Comment