Wednesday, May 9, 2012

வாக்குமூலம்



சுசீந்திரம் தேரோட்டக் கூட்டமென
தலைகள் அடர்ந்திருக்கும்
ரயில் வண்டிக் காத்திருப்பில்

உதடு பிளந்து
உதடு பிணைந்து
உதடு கவ்வி
உதடு சுவைத்து
உதடு கரைந்து
உதடு நிறைந்து
நாம் செய்ததை முத்தம் என்றனர்
மிகச்சாதாரணமாக

தொலைதூர பயணத்தின்
இல்லாத நிறுத்தத்தில்
செத்தும் போயிருக்கலாம் கமாலாகிய நான்

பெரு மழை கலைந்த
ரயில்வே பிளாட்பாரத்தில்
கதறி அழுது
உடைந்து ஒழுகி
அம்மணமாய் ஷிபானா நீ நிற்கிறாய்
என்பதறிகையில்! 


நன்றி உயிரோசை


No comments: