Sunday, May 6, 2012

ஆராதனா எனும் பேய் 11







1.
மழை விலகிய ஒரு அந்தியில்
உனது கூட்டைவிட்டு வெளியேறுகிறாய்
நிறமற்ற எனது இருப்பில்
பெருமழைக் கர்வமாய் பற்றிக் கொள்ளவென!

2.
உனது பெருங்காதலின் வன்மத்தில்
எனது றெக்கைகளின் குரூரம்
நிலைபடுத்துகிறது
அன்பின் வக்கற்ற சாதுர்யத்தை!

3.
தடங்கள் களவாடிய மழையாய்
என்னிலிருந்து கூட்டிச்செல்கிறாய்
என்னை
உன் பரிச்சயமற்ற வனத்துள் !


நன்றி உயிரோசை

No comments: