வறண்டு
போன என் கண்களைப்
பிடுங்கி எறிந்துவிட்டு
யாருமறியாத மாத்திரத்தில்
செயற்கை கண்களைப் பொருத்தலாமென்றிருக்கிறேன்
மேலும்
அதிலிருந்து சுரக்கும்
ஒரு குவளை வன்மத்தை
முதலில்
அம்மா
உன் மாரில் வீசக்கூடும் நான்.
பிறகு
அதே நாள்
எனது
மரித்தல் செயற்கையாக நிகழும்.
தற்கணம்
இனிப்புக்கூட்டி
ஒரு டம்ளர் தேநீர் பருகப்போகிறேன்.
No comments:
Post a Comment