மன மிருகம் உயிர்ப்பிக்கும்
வேட்கை நெருப்பின் சூழல் நின்று
வளர்க்கிறேன் உன்னை
மௌனத்தின் எல்லா திசைகளையும்
பொற்கரம் கொண்டு ஆள்கிறாய்
சாம்பல்நிற வான் பூமி குதித்து
பெரும் நகங்களால் ஆர்ப்பரிக்கிறது
இல்லாத வாழ்கை இருப்பதாக ஆமென்!
பூனையொன்று ஓடிக்கொண்டிருக்கிறது
மியாவ் மியாவ் இல்லாமல்
உப்பிடப்பட்ட மீன்கள் காய்ந்து தேம்பி
இன்னும் சற்றைக்குள் நீயும் போவாய்
நானும் போவேன்
யாதுமற்றது தான் எல்லாவுமே
யாதும் கொண்டதுதான் எல்லாவுமே
1 comment:
/// யாதுமற்றது தான் எல்லாவுமே
யாதும் கொண்டதுதான் எல்லாவுமே ///
அருமை வரிகள்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
Post a Comment