Tuesday, March 27, 2012

அன்பென்பது நோயல்ல







அன்பு என்பது ஒரு தீரப்பெறாத நோயென விழைந்த
எனதந்த ஒரு முழுப் புரியாமையை
மிகச் சுலபமாய் மேலுமொரு
அன்பின் கண்ணி கொண்டு
என்னை வாழப் பணிக்கிறாயெனும்போது
ஒரு தற்கொலை எண்ணம்
எனது தற்கொலையிலிருந்து
எத்தனை தொலைவு மீளச் செய்கிறது
என்பதை நானொரு கவிதை வடிவில்
எப்படி பதிவு செய்வேன்!


நன்றி உயிரோசை


1 comment:

Ashok D said...

பிறகு அந்த கண்ணியை கல்யாணம் கட்டி
5 வருடங்கள் ஆகிய பின்னர்..
இனிமேல் முடியவே முடியாது என்று
வீட்டைவிட்டு காட்டிற்கு ஓடிவிட்டேன்

தற்கொலை செய்துக்கொண்டேன் என முடிக்கமுடியவில்லை.. ஏன்னாக்கா என் மீது கொண்ட அன்பால் :)