அகாலத்தின் நிசப்த தெருவில்
உடலுதிர்ந்த இறகென தனித்தலைகிறே ன்
பிரிவின் துயர்
நிலா விழுங்கும் பௌர்ணமி கடலென
அதி பிரகாசமாய்.
என்னுள் உடைந்து-அழுகும்
ஞாபகக் கீறல்களை
மாம்ச விருப்புடன்
அலகு முட்டிச் செல்ல
தாழப் பறந்து கொண்டிருக்கிறது
பிணந்தின்னிக் கழுகொன்று.
ரயில் பாலம் அருகே
இனி நீ வரத் தேவையில்லை
பயந்து பயந்தவாறே!
No comments:
Post a Comment