Monday, January 2, 2012

உயிரோசை கவிதைகள்..








ஸ்பரிசம்

கோடையின்
செந்நிற கால்கள் அசையும்
நிலத்தில் யாதொரு பிடியுமற்று
நிற்கிறேன்,
உன் பனி கைகளைத் தந்துதவு
இப்-பிள்ளை வாழட்டும்
இன்னும் சிறிது தொலைவு.  


அடையாளம்

துளி,
கடலினும் பெரிதாகையில்
சிறகை விடுத்து பறவையாகிறாய்
பின்தொடரும் அலகு அல்ல
இவ்இறகு,

நினைவின் தடயம் !


நிகழ்ந்த மரணத்தின் காரணங்களாக
1) புறக்கணிப்பின் அழியாத் தடம்
2) அவமானத்தின் அந்திமம்
3) இழப்பின் பெரு ரணம்    

கடவுளெனும் பெயரில் சாத்தான்
சாத்தானெனும்  பெயரில் கடவுள்

எப்படியும் நிகழலாம்
எப்படியும் நிகழ்த்தப்படலாம்
இறப்பு.


நன்றி உயிரோசை..




2 comments:

rvelkannan said...

தீண்டலின்(ஸ்பரிசம்) தொலைவு
அடையாளத்தின் குழைதல்
மரணத்தை நிகழ்விக்கின்றன
நண்பா

Unknown said...

நன்றி நண்பா :)