Tuesday, January 24, 2012

ஆகையால் காதல் செய்வோம்







காடென வளரும் வாதையினை
பிரசவித்துவிட்டு,
மழலைப்பேச்சு 
மிகப் பிடிக்கும் என்கிறாய்

பெண்மையின் அந்தரங்கம் 
புள்ளியென
கோடென
வட்டமென
விவரித்துக் கொண்டாடி, பின்
ரகசியம் அதிஅற்புதம் என்கிறாய்
பிறழ்வின் முற்றத்தில் நின்று 
உரக்க கத்துகிறேன் 
நீ என் தோழி..
நீ என் தோழி..

ஆகையால்
காதல் செய்வோம் என்கிறாய்

ஓர் அபத்த பகலை
உடைத்துக்கொண்டு நகர்கிறது 
எனது வானம் ! 




1 comment:

உயிரோடை said...

ஓர் அபத்த பகலைஉடைத்துக்கொண்டு நகர்கிறது எனது வானம் !

ம்ம் நல்லது