Tuesday, January 31, 2012

காலத்தைக் கொன்று வயது வளர்த்தல்..

என்னைச் சிதைத்துப் புதைத்த 
இக்கவிதை உங்களுக்கெதற்கு 

இந்நினைவுகளை தீயிலிட்டுக் கருக்கியப் 
பின்னும் கருமேகமாய்
என்னை ஏன் பின்தொடர்கிறீர்கள்

நானொரு கைவிடப்பட்டவன் 
என்னிடத்தில் நீங்கள் தன்னைக்காண 
ஒரு வாய்ப்பும் இல்லை
விட்டு விடுங்கள் என்னை

நானொரு மனம் பிசகியவன் 
நீங்கள் உங்கள் மனதினை 
வேறு திசையில் செலுத்துங்கள் 

சென்று விடுங்கள் 
இந்நைந்த காகிதம் 
உங்களுக்கானது அல்ல

திரும்புதலின் பாரத்தை சவமாக்க 
ஒரு வைகறையின் மலையுச்சியிடமோ 
ஒரு பின்மதியத்தின் அலையிடமோ 
ஒரு நள்ளிரவின் ஒற்றைக் காற்றாடியிடமோ 
யாசித்துப் பின்-துயிலவென காத்திருக்கிறேன்.   




நன்றி உயிரோசை


No comments: