காரணங்களற்று இருத்தல்
அல்லது
காரணங்களோடு ஒத்துப்போதல்.
இடை இடையே
எங்கிருந்தோ உதிர்ந்து விழுகின்றன
வினவுகள்.
பலரும் அதில்
அநேகமாகப் பதிலும் கொப்பளித்து விடுகின்றனர்
அவை சமாளிப்பாகவும் இருந்து தொலைகிறது
ஆனால்..
அதில் பலரும்
அதனை சுட்டிக்காட்டத் தயங்குகின்றனர்.
நிரம்பத் தழும்பிய நரம்புகளுடன் சிறு இலையொன்று
காற்றில் முறிபடுவது
எப்பொழுதும் நடைபெறும் நிகழ்வே !
சில சமயங்களில்
கூர்ந்து உள்புக முற்படுவதில்
அலாதிப்பிரியம் எனக்கு..!
நன்றி உயிரோசை..
4 comments:
//நிரம்பத் தழும்பிய நரம்புகளுடன் சிறு இலையொன்று
காற்றில் முறிபடுவது
எப்பொழுதும் நடைபெறும் நிகழ்வே !//
nallak kavithai. super. vaalththukkal.
Really Superb..
விடுபட்டதையும் படித்துவிட்டேன் நண்பரே ..
அனைத்திற்கும் வாழ்த்துகள்
நல்லா இருக்கு. வாழ்த்துகளும் கூட
Post a Comment