பிடிமானங்களற்று
உடைந்து கொண்டிருக்கும் நாட்களில்
பாழ்மண்டப வெளவால்களைப்போல
நடந்து திரிகிறேன்..
காகிதங்களில் அடைபட்டிருக்கும் உயிரை
ஏந்திக்கொண்டு
தெருத்தெருவாய் அலைகையில்
சுவாசம் முட்டுகிறது.
தற்சமயம்
ஒரு எரிமலை துப்பித்தள்ளும்
அடங்காத் தீயில்
மாட்டிக்கொண்ட
ஒரு பூச்சியினைப்போல
நேசிக்கப்படுகிறேன்
உங்களால்..!
முதல் சூரிய உதயம் ஞாபகத்திலில்லை
இக்கடைசி சூரியோதயம் மறப்பதற்கில்லை.
நன்றி உயிரோசை..
5 comments:
கவிதை எல்லாம் நல்லா இருக்கு. தொகுப்பு எப்போ?
//உயிரோடை said...
கவிதை எல்லாம் நல்லா இருக்கு. தொகுப்பு எப்போ//
இதை நான் வழிமொழிகிறேன்
சூப்பர் ஆறு.....,
இருட்டுல காட்டுக்குள்ள நடக்கையில ஓட சத்தம் கேட்டு பின் தொடர்ந்து போனா நயாகரா வீழ்ச்சியே வந்த மாத்ரி இருக்கு உங்க பதிவுலகத்த வந்தடைஞ்ச அனுபவம்.ரொம்ப நன்றி.
Post a Comment